மனிதன் என்பவன், 'தான் அழ பிறக்கிறான்; பிறர் அழ சாகிறான்' என்பது அனைவருக்கும் தெரியும். ஏதோ பிறக்கிறோம், இடையில் வாழ்கிறோம், பின்னர் இறந்து போகிறோம் இதுதான் எதார்த்தமான வாழ்க்கை. ஆனால் நாம் இறந்த பின்னர் நம் உடலில் என்ன மாற்றங்கள் ஏற்படும்? நம் ஆன்மா என்ன செய்யும்? என்பதை பற்றி பார்ப்போம்.
நாம் இறந்த பின்னர் நம் உடலில் ரத்த ஓட்டம் நின்று போவதால் உடனடியாக பாக்டீரியாக்கள் தங்கள் வேலையைக் காட்டத் தொடங்கும். பாக்டீரியாக்கள் குடலில் உள்ள திசுக்களை தின்ன ஆரம்பிக்கும். அதற்கு 15 முதல் 20 நிமிடம் பிடிக்கும். மோர்டிஷ் எனப்படும் ரத்த ஓட்டம் உடல் முழுவதும் நின்று விடும்.
கருப்பாக உள்ளவர்களுக்கு இது உடனடியாக வெளியே தெரியாது அதன் பின்னால் உடல் குளிர்ச்சி அடைந்து ஒரு மணி நேரத்தில் 1.5 டிகிரி பாரன்ஹீட் வெப்ப நிலைக்கு மாறும். அதன் பின்னர் சிதைவு முறை தொடர்ந்து நடைபெறும். நொதிகள் ஆக்சிஜன் இல்லாத செல்கள் ஜீரணிக்க தொடங்குகின்றன.
சேதம் அடைந்த ரத்த அணுக்கள் உடலை விட்டு வெளியேறும். தோலின் நிறம் மாற்றம் அடையும். ஊதா அல்லது நீல நிறமாக மாறும். ஆக்டின் மையோசின் செயல்பாடு காரணமாக தசைகள் சுருங்க ஆரம்பிக்கும். பின்னர் இறந்த ஆறு மணி நேரத்தில் உடல் விறைப்புத் தன்மை அடையும். இந்த நேரத்தில் உடலில் பாக்டீரியாக்கள் அனைத்து பாகங்களிலும் பரவத் தொடங்கும். இதயம் முதல், உடல் முழுவதையும் பாக்டீரியாக்கள் ஆக்கிரமிக்க 58 மணி நேரம் எடுத்துக் கொள்ளும். இந்த செயல் தொடர்ந்து நடைபெறும் போது கடைசியாக உடல் எலும்புக்கூடு நிலைக்கு மாறும்.
தற்போது எம்ஃபார்மிங் முறையில் உடல் பதப்படுத்தி வைக்கப்படுகிறது. ஆதி காலத்தில் வினிகர், ஒயின், தேன், பிராந்தி இவற்றை கலந்து உடலை ஊறுகாய் போல் பதப்படுத்துவார்கள். இதனால் உடல் அழுகுவது தாமதப்படுத்தப்படும். தற்போது என்பார்மிங் முறையில் பார் மால்டி கைடு கரைசலை பெரிய தமனிகள் வழியாக செலுத்துவதால் உடல் உயிர் உள்ளது போன்று இருக்கும்.
அடுத்ததாக மனிதன் இறந்தபின் ஆன்மா என்ன செய்யும்?
என்ன நடக்கும் என்பது யாருக்கும் தெரியாது. உடலை விட்டு ஆன்மா வெளியேறுவதற்கு ஒரு பெரிய போராட்டமே நடக்குமாம். நம் உடலில் நவ துவாரத்தில் ஏதாவது ஒன்றின் வழியாக ஆன்மா வெளியேறும் என்று கருட புராணத்தில் கூறப்பட்டுள்ளது. ஆன்மா உடலை விட்டு முழுவதுமாக வெளியேறிய பின்னர் ஒட்டுமொத்த உயிர் பிரியும். மூலாதார சக்கரம் அல்லது பிற துவாரங்கள் வழியாக ஆன்மா மீண்டும் உடலுக்குள் போக பயங்கரமாக முயற்சி எடுக்குமாம். அதனால்தான் இரண்டு கால்களில் கட்டை விரலை சேர்த்து கட்டி ஆசன வாயை மூடி விடுகிறார்கள்.
காதையும் நாடியையும் இணைத்து துணி கொண்டு கட்டி, கண்களிலும் மூக்கிலும் சந்தனம் வைத்து அடைத்து விடுகிறார்கள். இவ்வாறு செய்வதன் மூலம் நவ துவாரங்கள் அடைக்கப்பட்டு விடுகின்றன. சில ஆன்மாக்கள் உடலை விட்டு வெளியேற, வெகு நேரமாகவோ அல்லது வெகு நாட்களாகவோ எடுத்துக்கொள்ளுமாம். இதைத்தான் இழுத்து கொண்டு இருப்பது அல்லது கோமா நிலைக்கு சென்று விடுவது என்று சொல்கிறோம்?
ஆன்மா பிரிந்த பின் 16 நாட்கள் அந்த வீட்டையும் அந்த இடத்தையும் சுற்றி சுற்றி வருமாம். யார் என்ன பேசுகிறார்கள்? யார் அழுதார்கள்? யார் சிரித்தார்கள்? என்றெல்லாம் கூர்மையாக கவனிக்குமாம்.
பதினாறாம் நாள் விசேஷம் முடிந்து, ஒரு வருட திதி முழுமை அடைந்த பின்னர் தான் அது திருப்தி அடையுமாம். இதை தான் பித்ரு காரியம் என்கிறார்கள். எனவே இறந்தவர்களுக்கு 16 நாள் விசேஷமும் அதன் பின்னர் வருஷ திதியும் கண்டிப்பாக கொடுக்க வேண்டும் என்பது நம்பிக்கை.