மனிதர்கள் பலர் எந்த மதத்தைச் சார்ந்தவராயினும், தினமும் வழிபாட்டு ஸ்தலங்களுக்கு சென்றோ அல்லது வீட்டிலோ இறைவனைப் பிரார்த்தித்து வணங்கி வருவது உண்மை. அப்படி வணங்கும்போது அவர்கள் முழங்காலிட்டும், தலை குனிந்தும், சாஷ்ட்டாங்கமாக உடல் முழுவதும் தரையில் படும்படி விழுந்தும் வணங்குவது உண்டு.
இம்மாதிரி பிரார்த்தனை செய்யும்போது அவர்களின் மனம் அமைதியும் மகிழ்ச்சியும் பெறுவதோடு அவர்களின் உடலுக்கும் பல நன்மைகள் கிடைக்கின்றன. அவை என்னென்ன என்பதை இப்பதிவில் பார்ப்போம்.
1. முழங்காலிட்டுப் பிரார்த்திப்பது ஒரு வழக்கம் மட்டும் அல்ல. அப்படி செய்யும்போது நம் முதுகுத் தண்டுவட எலும்பை நன்கு நிமிரச் செய்யவும், இடுப்பு மற்றும் முழங்கால்களை வலுவாக்கவும் உதவுகிறது. இது பிரார்த்தனைக்கு நடுவே அமைதியுடன் ஒரு யோகா பயிற்சி செய்வதற்கு சமம்.
2. கோவில்களில் முழங்காலிட்டு, தலையை முன்புறம் குனிந்து பிரார்த்திக்கும்போது அது ஒரு உடல் சிகிச்சைக்கான நீட்சிப் பயிற்சியை ஒத்தாற்போல் ஆகிறது. மேலும் அது உடலின் பின்புற கீழ்ப் பகுதியிலிருக்கும் வலிகளையும் விடுவிக்கிறது.
3. உடலை கீழ் நோக்கி தணியச் செய்கையில் உடலின் இரத்த அழுத்தமும் குறைகிறது. முழங்காலிட்டு அமர்ந்து தலையை குனியச் செய்யும்போது இதய இரத்த நாளங்களில் ஒரு மென்மையான அமைதி நிலவுவதாக விஞ்ஞானம் கூறுகிறது. இதற்காகவே ஒரு நமஸ்காரம் பண்ணலாம்.
4. முழங்காலிட்டு அமர்வது நன்மை தரக்கூடியதுதான் என்றாலும், கடினமான மார்பிள் தரையில் முட்டியிடுவது மற்றும் குறிப்பிட்ட சடங்குகளுக்காக நீண்ட நேரம் முழங்காலிட்ட நிலையில் இருப்பது கால் மூட்டுக்களில் வலியை உண்டாக்கும். பக்தி அசௌகரியம் உண்டாக்காத வகையில் அளவோடு இருப்பதே ஆரோக்கியம்.
5. கோவில்களில் முழங்காலிட்டு அமர்வது உடலின் ஒரு நிலைப்பாடு (posture) மட்டும் அல்ல. அது நரம்பு மண்டலத்தின் செயல்பாடுகளை சிறந்த முறையில் மாற்றி அமைக்கவும் உதவும். அப்போது இதயத் துடிப்பின் அளவு சிறிது உயரும். ஸ்ட்ரெஸ் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்தோடும். நொடியில் உடல் அமைதியான நிலைக்கு செல்லும்.
6. நாம் முட்டி போட்டு அமர்வதை நம் மூளை உணர முடியும். இதனால் உடலை பணிவு, பக்தி, நன்றியுணர்வு போன்றவை ஆக்ரமித்து, சிறந்த மன ஆரோக்கியம் கிடைக்குமென ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
7. முழங்காலிடுவது, உணர்ச்சிகளை ஒருங்கிணைத்து, ஆன்மிக நெறியில் அதிக கவனம் செலுத்தவும், மந்த நிலையை மாற்றி சக்தி வாய்ந்த உள் மனது அனுபவம் பெறவும் உதவுமென விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
8. பல நாடுகளிலும், ஸுஜுத் (நெற்றியால் தரையைத் தொடுதல்) முதல் சாஷ்ட்டாங்கமாக வணங்குவது வரையிலான பல வழிகளில் இறைவனை வணங்கும் முறை பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த பாரம்பரிய முறைகளானது உயிரியல் பரிணாம வளர்ச்சி, உடற்தகுதி, நம்பிக்கை மற்றும் கூர்நோக்கும் தன்மையின் மொத்த கலவையாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
9. காலம் காலமாக துறவிகள் கூறி வந்ததையே நவீன கால கண்டுபிடிப்புகளும் உறுதிப்படுத்துகின்றன. முட்டி போடுவது ஈகோவை அழிக்கிறது; மூளையைக் கூர்மைப்படுத்துகிறது; உடலையும் ஆன்மாவையும் ஒன்றிணைத்து புனிதப்படுத்துகிறது என இரு தரப்பும் ஒரே குரலில் கூறுகின்றனர்.