புனித வெள்ளியின் சிறப்பு

Good Friday
Good Friday
Updated on

'கடவுளின் குமாரன்' என்று கிறிஸ்தவர்கள் நம்பும் இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு இறந்ததை நினைவு கூறும் விதமாக புனித வெள்ளி கொண்டாடப்படுகிறது.

உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்களுக்கு, இது முக்கியமான நாட்களில் ஒன்றாகும்.

மேலும் ஈஸ்டர் ஞாயிறுக்கு முந்தைய வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுகிறது. புனித வெள்ளியில் உண்ணாவிரதம் இருப்பது, தேவாலய சேவைகளில் கலந்து கொள்வது, ஊா்வலங்களில் பங்கேற்பது, போன்ற பல மரபுகள் கடைபிடிக்கப்படுகின்றன.

கிறிஸ்தவர்கள் மாலை அணிந்து, விரதமிருந்து, பல பகுதிகளில் இருந்தும் நடைப்பயணமாகவே வேளாங்கன்னி மாதா கோவில் போன்ற பல தேவாலயங்களுக்குச் சென்று வருகிறாா்கள். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இயேசு சிலுவையில் மரித்த சம்பவத்தை புனித வெள்ளியாக கொண்டாடி வருகிறாா்கள்.

இயேசுவின் சிலுவைச்சாவு மனித குலத்தின் பாவங்ககளைப் போக்குவதற்காக அவர் செய்த தியாகத்தை நினைவு கூறுகிறது. புனித வெள்ளியானது இயேசுவின் உயிா்தெழுதலுக்கு முந்தைய நாள் என்பதால், துக்கம், தவம், மற்றும் உண்ணாவிரதம், போன்ற வழிபாடுகளால் கொண்டாடப்படுகிறது.

இந்த வருடம் புனித வெள்ளி 18.4.2025 வெள்ளிக்கிழமை வருகிறது.

புனித வாரத்தின் முக்கிய நாட்கள்:

*குருத்தோலை ஞாயிறு

*புனித வியாழன்

*புனித வெள்ளி

*புனித சனி

*ஈஸ்டர் ஞாயிறு

புனித வெள்ளியைத் தொடர்ந்து வரும் ஞாயிறு ஈஸ்டர் ஞாயிறு தினமாக கொண்டாடப்படுகிறது

புனித வெள்ளியன்று தேவாலயங்களுக்கு சென்று, மாதாவை வேண்டுவதும், கோாிக்கைகள் வைப்பதும், வேண்டுதல் நிறைவேற தேவாலயங்கள் வருவதும், கிறிஸ்துவர்கள் மட்டுமல்லாது, ஏனைய மதத்தை சாா்ந்தவர்களும் கொண்டாடி வருவது, சமுக நல்லிணக்கத்திற்கு ஒரு எடுத்துக்காட்டாக தொன்றுதொட்டு விளங்குகிறது. இதுவே புனித வெள்ளியின் சிறப்பாகும்.

இதையும் படியுங்கள்:
'கடவுள் இருக்கிறார்' - கணித ஆதாரத்துடன் நிரூபித்த விஞ்ஞானி!
Good Friday
logo
Kalki Online
kalkionline.com