கணபதியை வலம்புரி, இடம்புரி விநாயகராக வழிபடுவதன் தாத்பரியம்!

Valampuri Vinayagar, Edampuri Vinayagar Thathparyam
Valampuri Vinayagar, Idampuri Vinayagar
Published on

முழுமுதற் கடவுளான விநாயகப்பெருமானை மட்டும்தான் இடம்புரி, வலம்புரி எனும் அடைமொழியோடு வழிபடுகிறோம். இதன் தாத்பரியம் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.

சதுர்த்தி வழிபாடு: சகல தோஷங்களையும் போக்கும் சதுர்த்தி விரதம். இன்றைய நாளில் விநாயகரை வழிபட சந்திர தோஷம் நீங்கும். விநாயகரை வழிபட, விக்கினங்கள் அகலும். கணபதியை தவிர்த்து விட்டு எந்த வழிபாட்டையும் செய்ய இயலாது.

மாதந்தோறும் வரும் சங்கடஹர சதுர்த்தி நாளில் சந்திரன் உதயமாகும் நேரத்தில் விநாயகரை வழிபட்டு பின்பு சந்திர தரிசனம் செய்ய, சகல தோஷங்களும் நீங்கி விடும். சதுர்த்தி அன்று காலையில் குளித்துவிட்டு அருகில் உள்ள ஆலயத்திற்கு சென்று விநாயகரை 11 முறை வலம் வந்து அருகம்புல், வெள்ளருக்கு மாலை சாத்தி, வன்னி இலைகளால் அர்ச்சனை செய்து  வழிபடலாம். இன்றைய தினம் பசுவுக்கு பச்சரிசியுடன் வெல்லமும் வாழைப்பழமும் கலந்து கொடுக்க, கூடுதல் பலன் கிடைக்கும். சங்கஷ்டம் என்றால் கஷ்டங்கள் சேருவது என்று பொருள். வாழ்வில் வரும் சகல கஷ்டங்களையும் நீக்கும் விரதமே சங்கடஹர சதுர்த்தி விரதம்.

இதையும் படியுங்கள்:
கருடனை பற்றிய இந்த சுவாரஸ்யத் தகவல்கள் உங்களுக்குத் தெரியுமா?
Valampuri Vinayagar, Edampuri Vinayagar Thathparyam

சங்கடங்களை ஹரம் செய்யும் சதுர்த்தி விரதத்தை ஆவணி மாதத்தில் வருகிற விநாயகர் சதுர்த்தி தினத்தில் சுக்லபட்ச சதுர்த்தி விரதத்தை எடுத்துக்கொள்ள வேண்டும். அதைத் தொடர்ந்து மாதம் தோறும் வருகிற சதுர்த்தி நாட்களில் விரதமிருந்து விநாயகரை வழிபட வேண்டும். இப்படி 11 சதுர்த்தி தினங்களில் விரதமிருந்து சதுர்த்தி விரதத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.

வலம்புரி விநாயகர், இடம்புரி விநாயகர்: விநாயகர் வழிபாட்டில் வலம்புரி விநாயகர், இடம்புரி விநாயகர் என இரண்டு விதமாக விநாயகரை சிறப்பித்துக் கூறுவார்கள். நம்முடைய மூளை வலப்பகுதி, இடப்பகுதி என இரண்டு பிரிவுகளாக உள்ளது. இடப்பக்க மூளை உடலின் வலது பாகத்தையும், வலப்பக்க முளை உடலின் இடது பாகத்தையும் கட்டுப்படுத்தும். இதைத்தான் பிங்கலை, இடங்கலை நாடிகள் என்று வரையறுக்கிறோம். நம் வலது பக்க மூளை செயல்படும்பொழுது இடது பக்க நாசி துவாரத்தில் சுவாசம் வரும். அதுவே இடது பக்க மூளை இயங்கும்பொழுது வலது பக்க நாசியில் சுவாசம் வரும். இந்த சித்தாந்தத்தை குறிக்கும் வகையில்தான் விநாயகரின் துதிக்கையை வலம்புரியாகவும் இடம்புரியாகவும் நம் முன்னோர்கள் அமைத்து வழிபட்டுள்ளார்கள்.

இதையும் படியுங்கள்:
நினைத்த காரியங்களை நிறைவேற்றித் தரும் செவ்வாய்க்கிழமை வெற்றிலை தீப வழிபாடு!
Valampuri Vinayagar, Edampuri Vinayagar Thathparyam

இனி, கோயிலில் விநாயகரை வணங்கும் சமயம் நம் நாசியில் வரும் சுவாசத்தை கவனியுங்கள். விநாயகரின் துதிக்கை எந்தப் பக்கத்தில் உள்ளதோ அந்தப் பக்கம் நம் நாசியில் சுவாசம் வரும். வலம்புரி விநாயகராக இருந்தால் நம் வலது நாசியிலும், இடம்புரி விநாயகராக இருந்தால் நம் இடது நாசியிலும் சுவாசம் வருவதைக் காணலாம். இதன் தாத்பரியம், ‘வெளியே இருக்கும் நான்தான் உன் உள்ளேயும் இருக்கின்றேன்’ என்று உணர்த்துவது போல் இருக்கும்.

வலது நாசியின் வழியாக உள்ளே செல்லும் காற்றிற்கு ‘சூரிய கலை’ என்றும், இடது நாசியின் வழியாக உள்ளே செல்லும் காற்றிற்கு ‘சந்திர கலை’ என்றும் நம் முன்னோர்கள் கூறுகின்றனர்.

சூரிய கலை சந்திர கலை: இந்த இரண்டு சுவாசங்களுக்கும் தனித்தனி பண்புகளும், வெவ்வேறான செயல்பாடுகளும் உள்ளன. இடது நாசி காற்றுக்கு சந்திர கலை எனப்படும். சந்திர கலை என்பது உடலை குளிர்விக்கும் தன்மை கொண்டது. மூச்சுக் காற்று குளுமையானதாகவும், மனதிலும் உடலிலும் ஒரு சாந்த தன்மையை உருவாக்குவதாகவும் இருக்கும். வலது நாசிக்காற்று சூரிய கலை எனப்படும். உடலுக்குத் தேவையான வெப்ப சக்தியை தருகின்ற பிராணன் இதுதான்.

இதையும் படியுங்கள்:
புரியில் தொடங்கிய பிரம்மாண்டமான ஜெகந்நாதர் கோயில் தேர் திருவிழா!
Valampuri Vinayagar, Edampuri Vinayagar Thathparyam

உடலை சுறுசுறுப்படையவும், உடலின் வலிமையை அதிகரிக்கவும் செய்யும். விநாயகப் பெருமானின் கல் விக்ரகத்திற்கு நம் சுவாசம் சம்பந்தப்பட்ட சூரிய கலை மற்றும் சந்திர கலைகளை மேம்படுத்தும் ஆற்றல் இருப்பதால்தான் கோயிலுக்குச் சென்றதும் அவரை முதலில் வணங்க வேண்டும் என்று சொல்கிறார்கள்.

வழிபாட்டின் பலன்கள்: வன்னி மரத்தடியில் உறையும் கணபதியை வலம் வந்து வழிபட, வேண்டியது கிட்டும். நினைத்த காரியங்கள் தடையில்லாமல் நடைபெறும் என்று கூறப்படுகிறது. எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் விநாயகரை, குறிப்பாக மரத்தடி, குளக்கரை, ஆற்றங்கரை ஆகிய இடங்களில் வீற்றிருக்கும் பிள்ளையாரை வணங்குவது மிகவும் விசேஷம்.

ஒவ்வொரு மாதமும் வரும் சங்கடஹர சதுர்த்தி விரதத்தை கடைபிடிக்க, சனி தோஷம், ராகு, கேது, சர்ப்ப தோஷத்தால் ஏற்படும் திருமணத்தடை நீங்கி விடும். விநாயகருக்கு சாத்திய அருகம்புல்லை வாங்கி வந்து வீட்டில் வைத்து வழிபட, தீய சக்திகள் நம்மை அண்டாது. விநாயகருக்கு சாத்திய மாலையை வாங்கி வந்து வீட்டின் நிலைப்படியில் மாட்டி வைக்க, வீடு வாங்க முடியாமல் தவிப்பவர்கள், வீட்டில் பல்வேறு பிரச்னைகளை சந்திப்பவர்களுக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com