பிருந்தாவனம் நிதிவனத்தின் இரவு நேர ரகசியங்கள்: இன்றும் நடக்கும் அற்புதங்கள்!

The nocturnal secrets of Vrindavan
Sri Krishnar - Radha
Published on

த்திரபிரதேச மாநிலம், மதுரா மாவட்டத்தில் பிருந்தாவனம் என்ற ஊர் உள்ளது. இதை ஹிந்தியில் விருந்தாவன் என்றும் அழைக்கின்றனர். இந்த இடம் மகாபாரதத்தில், ஸ்ரீ கிருஷ்ணர் தனது குழந்தைப் பருவத்தில் ஆடி பாடி விளையாடிய இடமாகக் குறிப்பிடப்படுகிறது. மேலும், இந்த இடத்தில் ஐந்தாயிரத்திற்கும் அதிகமான கிருஷ்ணர், ராதை சிலைகள் நிறைந்துள்ளன. இதில் மிக முக்கியமானது, இங்குள்ள நிதிவனம் என்ற காட்டிற்குள் அமைந்துள்ள, ‘ரங் மகால்’ எனும் கோயில்.

இந்தக் கோயிலிலும், இந்தக் கோயிலிருக்கும் இடமான நிதிவனமும் பல அற்புதங்களையும், அமானுஷ்யங்களையும் தன்னுள் மறைத்து வைத்திருக்கும் இடமாகும். இந்த நிதிவன காட்டுப்பகுதி மிகவும் வறட்சியான பகுதியாகும். இந்த வனத்தில் நீரை பார்ப்பதே மிகவும் அரிதாகும். ஆனாலும், இங்குள்ள மரங்கள் அனைத்தும் எப்பொழுதும் செழிப்பாகக் காணப்படுவது மிகவும் ஆச்சரியமான விஷயமாகும்.

இதையும் படியுங்கள்:
வேறு எங்கும் தரிசிக்க இயலாத சிறப்பு அம்சங்கள் கொண்ட விநாயகர்கள்!
The nocturnal secrets of Vrindavan

மேலும் இந்த காட்டில் இருக்கும் எந்த மரங்களும் நேராக வளராமல் கிருஷ்ணருக்கும் ராதைக்கும் மரியாதை செலுத்தும் விதமாக வளைந்தே காணப்படுகின்றன என்பது மற்றொரு ஆச்சரியமான விஷயமாகும். மேலும், இந்தக் காட்டை சுற்றி துளசி செடிகள் மிகுந்து காணப்படுகின்றன. இந்த துளசி செடிகள் அனைத்தும் ஜோடி ஜோடியாகவே வளர்ந்து வருவது மற்றொரு ஆச்சரியமாகும். இந்த துளசி செடிகள் அனைத்தும் ஸ்ரீ கிருஷ்ணருடன் சிறுவயதில் வாழ்ந்த கோபியர்கள் என நம்பப்படுகிறது.

இந்தக் கோயிலில் சந்தன மரத்தால் செய்யப்பட்ட கட்டில் உள்ளது. கட்டிலுக்கு அருகில் ஒரு கலசத்தில் நீரும், கிருஷ்ணர் பல் துலக்குவதற்காக வேப்பங்குச்சியும், கிருஷ்ணர் போட்டுக்கொள்ள வெற்றிலைப் பாக்கும் ஒவ்வொரு இரவும் வைக்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
பாண்டவர்கள் மயங்கிய மர்மக் குளம்: அது தற்போது எங்கே இருக்கிறது தெரியுமா?
The nocturnal secrets of Vrindavan

இரவு 7 மணி பூஜைக்குப் பிறகு பக்தர்கள், பூஜை செய்பவர்கள் உள்ளிட்ட அனைவரும் இந்தக் காட்டுப் பகுதியை விட்டு வெளியேறி விடுகின்றனர். மேலும், பகலில் இந்த காட்டுப் பகுதியில் காணப்படும் விலங்குகளும், பறவைகளும் கூட இரவு வேளையில் மட்டும் இந்த காட்டுப் பகுதியை விட்டு வெளியேறிவிடுவது ஆச்சரியப்படுத்தும் தகவலாகும்.

ஒவ்வொரு நாளும் இந்தக் கோயிலை திறக்கும்போதும் கட்டில் கலைந்து காணப்படுவதும், தண்ணீரும் உணவுகளும் உண்ணப்பட்டு காணப்படுவதும் இன்று வரை நடைபெற்றுவரும் அதிசய நிகழ்வாகும். இரவில் கிருஷ்ணரும் ராதையும் இந்தக் கோயிலுக்கு வருவதாகவும், அப்பொழுது இந்தக் கோயிலைச் சுற்றி வளர்ந்திருக்கும் துளசி செடிகள் கோபியர்களாக மாறி கிருஷ்ணருடன் ஆடி பாடுவதாகவும் நம்பப்படுகிறது. ஸ்ரீ கிருஷ்ணரின் இந்த ராஜ லீலைகளைப் பார்க்க இந்த காட்டிற்குள் இரவு நேரங்களில் மக்கள் யாரும் அனுமதிக்கப்படுவதில்லை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com