கடவுள் முன் எல்லோரும் சமம். ஏழையாக இருந்தாலும் பணக்காரனாக இருந்தாலும் ஆண்டவன் முன் சரிசமம். இதை யாரும் மறுக்கமுடியாது.
ஆனால், இந்து கோயில்களில் நடப்பது என்ன…?
சொல்லவே நடுங்குகிறது. திருப்பதியை எடுத்துக்கொள்வோம். உண்டியல் மூலம் கிடைக்கும் பணம் உலகத்திலேயே அதிகமாக இருக்கிறது. கோடி கோடி கணக்கில் வசூல். இந்தப் பணம் எங்கே போகிறது…? கோயில் நிர்வாகத்திடமா..? இல்லை அறநிலையத் துறையிடமா…?
இது போதாது என்று... சிறப்பு தரிசனம் என்று ஆளுக்கு ₹ 500 வரை வசூலிக்கிறார்கள். இது பச்சை துரோகம். சாமியைக் காண காசு கொடுக்க வேண்டுமா…?
இல்லை சாமி கேட்டாரா…? இல்லவே இல்லை. யாராக இருந்தாலும்… அது பிரதம மந்திரி ஆக இருந்தாலும் எல்லோருக்கும் ஒரே ஒரு வரிசைதான் இருக்க வேண்டும். ஆம்! க்யூவில்தான் வரவேண்டும் என்று சட்டம் சொல்ல வேண்டும்.
இது எதோ திருப்பதிக்கு மட்டும் அல்ல. பழனி, மதுரை, சென்னை வடபழனி, மாங்காடு கோயில் என்று எல்லா கோயில்களிலும் பணம் சுரண்டப்படுகிறது.
கோயில் நிர்வாகம் அல்லது அறநிலையத் துறை வெளிப்படை தன்மை இல்லாமல் இருக்கிறது. சிறப்பு தரிசனம் தடை செய்யப்பட வேண்டும்.
இங்கு ஒன்றை நான் சொல்ல விரும்புகிறேன்.
ஆம்! முதலில் வருபவர்கள் முதல் வரிசையில் உட்கார வேண்டும். நாட்டின் ஜனாதிபதிக்கும் இது பொருந்தும். ஒரு முறைதான் ஜனாதிபதி பதவியில் இருந்தபோது அப்துல் கலாம், மசூதிக்கு காலதாமதமாக வந்தார். அவருக்கு கடைசி வரிசையில்தான் இடம் கிடைத்தது. அப்துல் கலாம் - முதல் இந்திய குடிமகனுக்கு என்று எந்த சலுகையும் இல்லை. அவர் தொழுகை செய்தார். இது பாராட்டப்பட வேண்டியது.
ஏன்…? இந்து கோயில்களில் இது பின்பற்றப்படவில்லை.
மீண்டும் சிறப்பு தரிசனம் வருகிறேன். இது தேவை இல்லை. கடவுளும் இதைத்தான் விரும்புவார். இதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
கோயில் நிர்வாகமோ அல்லது அறநிலையத் துறையோ.. இதில் தலையிடுவது தவறிலும் தவறானது. சாமி எல்லோருக்கும் பொது. அவரை தரிசிக்க எல்லோருக்கும் உரிமை உண்டு. வரிசையில் க்யூவில் நின்று தரிசனம் செய்ய வேண்டும். பிரதமர் வந்தாலும் இந்த நடைமுறை அவசியம்.
கோயில் உண்டியலில் வரும் பணத்தைக் கொண்டு நாள்தோறும் 3 வேளையும் மக்களுக்கு அன்னதானம் அளிக்க வேண்டும். சாமிக்கு மக்கள் கொடுக்கும் பணம் மக்களுக்காகவே செலவழிக்க வேண்டும். இது மட்டுமே சரியானது.0
மேலும், கோயில் பிரசாதம் செய்வதில் போலி தரகர்களைத் தவிர்க்க வேண்டும். திருப்பதி லட்டு, சபரிமலை ஐயப்பன் அரவணை பாயசம் கெட்டுப்போனது நமக்கு தெரியும். திருப்பதி தரகர் கையில் எல்லா விரல்களிலும் தங்க மோதிரம் அணிந்து இருந்தார். மேலும், கழுத்தில் தங்க நகைகள் அதிகமாக போட்டு இருந்த அந்த தரகர் போட்டோ வைரல் ஆனது.
மனிதனோடு விளையாடலாம். ஆனால், கடவுளிடம் இல்லை. கடவுளைக் காண காசு கேட்பது நம் நாட்டிற்கே வெட்க கேடு.
சரி. முடிக்கிறேன்.
சிறப்பு ‘மோசடி’ தரிசனம் வேண்டவே வேண்டாம்…!