சந்திராஷ்டம தின அச்சத்தைப் போக்கும் ரகசிய வழிமுறை!

How to overcome the fear of Chandrashtama!
Lord Chandra
Published on

ந்திராஷ்டமம் என்பது ஒரு ராசியில் இருந்து எட்டாவது ராசியில் சந்திரன் சஞ்சரிக்ககூடிய காலமாகும். இதை மிகச் சரியாக குறிப்பிட்டு சொல்வதென்றால் ஒரு நட்சத்திரத்திற்கு 17வது நட்சத்திரத்தின் பாதத்தில் சந்திரன் சஞ்சரிக்கும்போது அந்த நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டம காலமாகும். சந்திராஷ்டமம் என்பது சந்திரனுடைய தோற்றமானது மறைக்கப்படுவதனால் மனதின் எண்ணங்கள், தெளிவு போன்ற விஷயங்கள் மறைக்கப்படுவதை குறிக்கிறது. காலம் கடந்து ஒரு விஷயத்தை சிந்திக்க வைப்பதும் இதன் வேலையாக உள்ளது. பொதுவாகவே, சந்திரனை மனோகாரகன் என்றும் அழைப்பதுண்டு. அதாவது, சந்திராஷ்டமத்தை நாம் பார்த்ததால் மனதில் குழப்பங்கள் தோன்றும் என்பது சாஸ்திரங்களின் கருத்து.

பொதுவாகவே, சந்திராஷ்டம காலங்களில் பிரயாணம் பண்ணுவது கூடாது என்று சொல்லப்படுகின்றது. மனநிலை தெளிவாக இருந்தால்தான் பயணங்கள் இனிதாக அமையும் என்பதனால் இக்காலத்தில் மனதில் பல சஞ்சலங்கள் தோன்றும் என்பதனால் சந்திராஷ்டம காலங்களில் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. சந்திரன் சஞ்சாரக்காரனாக இருப்பதனால் பயணங்களைத் தவிர்க்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
சிவனருள் உங்களுடனேயே இருக்கிறது என்பது உணர்த்தும் 7 மிரள வைக்கும் அறிகுறிகள்!
How to overcome the fear of Chandrashtama!

சந்திராஷ்டம காலத்தில், ஒருவர் இல்லாதபோது அவரைப் பற்றி தவறான வார்த்தைகளை நாம் பேசிவிடக் கூடாது. இது உள்ளொன்று வைத்து வெளியே ஒன்றை பேசுவது அவர்களுக்கு மிகுந்த கெடுதல்களை ஏற்படுத்தும். ஆகையால், இவ்வாறான தவறான செயல்களை இந்த தினங்களில் செய்யக் கூடாது.

நம் வாழ்க்கையில் சில தருணங்களில் பல முக்கியமான முடிவுகளை எடுக்கவேண்டி வரும். முடிவுகள் அவர்களது வாழ்வின் அடுத்த கட்டத்தை தீர்மானிப்பதனால் சந்திராஷ்டம காலத்தில் முடிவுகளை எடுக்கக் கூடாது. ஏனென்றால், முடிவுகள் மனதில் இருந்து எடுக்கப்படுவதனால் சந்திராஷ்டம காலத்தில் மனமானது சஞ்சலமாகக் காணப்படுவதனால் முடிவுகளை எடுக்கக் கூடாது. சந்திரனுடைய தோஷத்தினால் மனிதர்களது மூளையானது சோர்வடைந்து காணப்படுவதால் செய்கின்ற வேலைகளில் அதிகம் கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்படும். இதனால் தவறுகள் நிகழ அதிக வாய்ப்புள்ளது. எனவே, சந்திராஷ்டம காலத்தில் முக்கியமான வேலைகளை செய்வதைத் தவிர்க்க வேண்டும். இறைவனை நன்றாக வழிபட்டு நமது காரியங்களை ஆற்றுவதன் மூலம் சந்திராஷ்டம பாதிப்புகளை குறைத்துக்கொள்ள முடியும்.

சந்திராஷ்டம தினங்களில் செய்கின்ற காரியங்களில் நிதானமாக மிகுந்த கவனமாக இருப்பது நல்லது. இதனால் காரியங்கள் தடைபடாது. மேலும், சந்திராஷ்டம காலத்தில் தியானம் செய்வது மிகச் சிறந்த பலனைத் தரும்.

இதையும் படியுங்கள்:
ஐப்பசி அன்னாபிஷேகம்: ஒரு நாள் சிவ தரிசனம் உங்கள் பல ஜன்ம பாவம் போக்கி சொர்க்க பதவி தரும்!
How to overcome the fear of Chandrashtama!

எந்த ஒரு தடங்கலான சூழ்நிலைகளிலும் மன அமைதியுடனும் நிதானத்துடன் பொறுமையுடன் இருப்பதினால் பல காரியங்களை சிறப்பாக செய்து முடிக்கலாம். சந்திராஷ்டம தோஷத்தை நிவர்த்தி செய்ய இறை வழிபாடு செய்ய வேண்டும். அதுவும் சிவபெருமானை வழிபடுவது மிகுந்த பலனைத் தரும். கூடவே சந்திர பகவானையும் வழிபடுவது சிறப்பு.

சந்திராஷ்டம நாட்களில் விநாயகருக்கு பால் அபிஷேகம் செய்வது சிறப்பு. அம்மன் கோயிலுக்குச் சென்று அர்ச்சனை செய்யலாம். சந்திராஷ்டம நாளில் எந்த ஒரு செயலையும் துவங்குவதற்கு முன்பும் குலதெய்வ வழிபாடு, முன்னோர் வழிபாடு, இஷ்ட தெய்வ வழிபாடு செய்து அந்தக் காரியத்தை தொடங்கினால் நன்மை ஏற்படும், தடைகளும் வராது.

சந்திராஷ்டம நாட்களில் அதிகாலை குளித்து முடித்து சந்திர பகவானை நினைத்து, ‘ஓம் ஸ்ரீ சந்திராய நம’ என்ற மந்திரத்தை 11 முறை சொல்லிவிட்டு பிறகு நம்முடைய அன்றாடப் பணிகளை செய்ய ஆரம்பித்தால் சந்திராஷ்டமத்தில் எந்த பிரச்னையையும் சந்திக்க நேராது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com