

நாளை டிசம்பர் 13-ம்தேதி சனிக்கிழமை உங்கள் வாழ்க்கையில் இருக்கிற பெரிய தடைகளை உடைக்கப்போகிற ஒரு சக்திவாய்ந்த நாள் இது. அதனால் மறந்தும் கூட நாளை தேதியை தவறவிடாதீங்க.. அன்று உங்களது தலையெழுத்தையே மாற்றக்கூடிய கார்த்திகை மாத தேய்பிறை நவமி வருகிறது. தேய்பிறை நவமி என்பது ஒவ்வொரு மாதமும் பௌர்ணமிக்குப் பிறகு வரும் ஒன்பதாவது திதியாகும். அதுவும் இந்த மாதம் தேய்பிறை நவமி சனிக்கிழமையோடு சேர்ந்து வருவது மிகவும் விசேஷமாக கருதப்படுகிறது.
பொதுவாக, அஷ்டமி, நவமி போன்ற திதிகளில் சுப காரியங்களைத் தவிர்ப்பது வழக்கம், ஆனால் குறிப்பிட்ட தெய்வ வழிபாடுகளுக்கு இந்த நாட்கள் உகந்தவை என சாஸ்திரங்கள் கூறுகின்றன.
ஏனெனில், இந்த திதிகளில் தொடங்கும் காரியங்கள் முழுமையான பலனைத் தராது அல்லது இழுபறியாக இருக்கும் என்ற நம்பிக்கை நிலவுகிறது.
பொதுவாக, தேய்பிறை நவமி சுப காரியங்களுக்கு உகந்ததாகக் கருதப்படாவிட்டாலும், குறிப்பிட்ட சில தெய்வ வழிபாடுகளுக்கும், எதிர்மறை சக்திகளை நீக்குவதற்கும், தடைகளைத் தகர்ப்பதற்கும் இந்த திதி மிகவும் சக்தி வாய்ந்தது என்பது இந்து சமய நம்பிக்கையாகும். இருப்பினும், தீட்சை பெறுவதற்கு, மந்திர ஜெபம், மந்திர உபதேசம், ஹோமங்கள் , சில குறிப்பிட்ட வழிபாடுகளுக்கும், சில வகையான காரியங்களுக்கும் தேய்பிறை நவமி உகந்ததாகக் கருதப்படுகிறது.
குறிப்பாக தேய்பிறை நவமியில் முருகனை வழிபடுவது உங்களின் தீய கர்ம வினைகளையும் எதிர்மறை எண்ணங்களையும் அகற்றி வாழ்க்கையை சீராக அமைக்கும். அன்று நீங்கள் 10 ரூபாய் செலவு செய்து இந்த ஒரு விஷயத்தை மட்டும் செய்து விட்டால் உங்கள் வாழ்க்கை மாறுவதை யாராலும் தவிர்க்க முடியாது.
அன்று நீங்கள் முருகன் கோவிலுக்கு சென்று 10 ரூபாய் செலவு செய்து வெற்றிலை தீபம் போட்டு வழிபட்டால் உங்களது வாழ்க்கையில் உள்ள அனைத்து கர்ம வினைகளும் நீங்கி உங்களது தலையெழுத்து மாறும் என்பது ஆன்றோர்களின் நம்பிக்கை
பொதுவாக தேய்பிறை நவமி என்பது அம்மன் வழிபாடுகளுக்கு சிறந்தது என்று கருதப்பட்டாலும், முருகப்பெருமானை எந்த திதியிலும் எந்த நாளிலும் வழிபடலாம். அதேபோல் தேய்பிறை நவமி வாராஹி அம்மனை வழிபட உகந்த நாளாகவும் கருதப்படுகிறது. கடன் பிரச்சனை, எதிரி தொல்லை, கண் திருஷ்டி இதிலிருந்து விடுபட இதை விட சிறந்த நாள் கிடையாது.
நாளை சனிக்கிழமை மாலை 6 மணிக்கு மேல் பைரவர் அல்லது வாராஹி அம்மனை நினைத்து உங்கள் வீட்டு வாசலிலோ அல்லது பூஜை அறையிலோ ஒரே ஒரு அகல் தீபம் ஏற்றி வேண்டும். என் கஷ்டம் எல்லாம் தேய்ப்பிறை போல் தேய்ந்து போக வேண்டும் என்று மனசார வேண்டிக்கொள்ளுங்கள். நம்பிக்கையோடு செய்யுங்கள். மாற்றம் கண்டிப்பாக நடக்கும்.
மாததோறும் வரும் நவமி திதியில் செய்யப்படும் சண்டி ஹோமத்தால் சாபங்கள், தடைகள் விலகும், லட்சுமி கடாட்சம் நிறையும். பகைவர்களும் நண்பர்களாக மாறுவார்கள்.