விதி மாறும் திருத்தலம்! திருநள்ளாறு சென்று பரிகாரம் செய்வது எப்படி?

thirunallar-sani-bhagavan
thirunallar-sani-bhagavan
Published on

னி பகவானுக்கு உரிய பரிகார தலமாக திகழ்கிறது திருநள்ளாறு. தர்ப்பை அடர்ந்து வளர்ந்திருந்த காரணத்தால் இந்த பகுதி தர்ப்பாரண்யம் என்று முதலில் வழங்கப்பட்டது. பின்பு நகவிடங்க புரம் என்றும் பெயர் பெற்றது. இங்கு அமர்ந்திருக்கும் ஈசனின் திருப்பெயர் தர்ப்பாரண்யேஸ்வரர்   அம்பிகையின் திருப்பெயர் பிராணேஸ்வரி.

திருநள்ளாறு வரலாற்று சிறப்புமிக்க கிராமமாகும். ஆதியில் இந்த தலம் தர்பாரண்யம் என்று வழங்கப்பட்டாலும் தற்போது திருநள்ளாறு என போற்றப்படுகிறது. இந்த ஊருக்கு  வடக்கே நூலாறும் வாஞ்சி ஆறும் தெற்கே அரசலாறும் ஓடுகின்றன. நடுவே ஊர் அமைந்துள்ளதால் திருநள்ளாறு என்று அழைக்கப்படுவதாக தல வரலாறு கூறுகிறது.

சனியின்  கொடுமைக்கு ஆளான நளன் இங்கு தர்ப்பாரனேஸ்வரர் சுவாமியை வழிபட்டு சனியின் பிடியிலிருந்து விடுபட்டு மன அமைதி பெற்றான். எனவே,  இந்த ஊர் நளன் ஆறு நள்ளாறு ஆகி திரு என்ற அடைமொழியுடன் திருநள்ளாறு ஆயிற்று என்றும் கூறப்படுகிறது.

திருநள்ளாற்றில் பிரம்மாவும் எட்டுத்திக்கு பாலர்கள் என்று அழைக்கப்படும் இந்திரன் வருணன் அக்னி எமன் நிருதி வாயு குபேரன் ஈசானன் ஆகியோரும் முனிவர்களும் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து வழிபட்டதால் பதினேழு சிவலிங்கங்களும் பதிமூன்று தீர்த்தங்களும் இருக்கின்றன.

தேவர்களை மறுத்து நிடதநாட்டு மன்னன் நளனை கரம் பிடித்தாள் சேதி நாட்டு இளவரசி தமயந்தி. இதனால் கோவமான தேவர்கள் சனிபகவான் மூலமாக நளனை கடுமையாக சோதித்தனார். எல்லா செல்வத்தையும் இழந்து இறுதியில் தமயந்தியையும் பிரிந்து சேவகனாக மாறினான் நளன். பின்பு இறைவனின் கருணையால் இழந்த தன்னாட்டையும் அளவற்ற செல்வங்களையும் பெற்றான்.  அனைத்தையும் திரும்ப பெற்ற போதிலும் ராஜ்ஜியத்தை அடைந்த போதிலும் நள மகராஜன் மனஅமைதி பெறவில்லை. நளமகராஜன் மனஅமைதி வேண்டி திருநள்ளாறு வந்து தர்ப்பாரனேஸ்வர ஸ்வாமி வழிபட கோவிலுக்குள் நுழைந்தார். அதுவரை அவனிடம் தொற்றிக்கொண்டு வந்த சனி சனி பகவான் இறைவன் பரம்பொருளின் சாபத்துக்கு ஆளாக நேரம் என்று கருதி, நளனிடம் இருந்து விலகி நள்ளாற்று கோவில் மடத்தில் ஒளிந்திருந்து நளன் வருகைக்காக காத்திருந்தான். சனி தன்னிடம் இருந்து விலகியதும் நளன் மன அமைதி பெற்றான்.

இதையும் படியுங்கள்:
நிம்மதியான வாழ்வும், நிலையான வெற்றியும் தரும் 3 சூத்திரங்கள்: கருட புராணம் கூறுவது என்ன?
thirunallar-sani-bhagavan

மேலும் இறைவா உன்னை வழிபட்டு செல்கின்றவர்களை வெளியே காத்து நிற்கும் சனி தீண்டாமல் இருக்க அருள் பாலிக்கவேண்டும் என நளன் வேண்டி அந்த வரத்தையும் பெற்றான். அதன்படி இன்றும் இந்த தலம் வந்திருந்து தர்ப்பாரண்யேஸ்வரர் சுவாமியை வழிபட்டு சனி பகவானையும் பூஜித்தால் சனி தோஷ பாதிப்பிலிருந்து விடுபடலாம்.

ஜென்ம சனி  கண்ட சனி அஷ்டமத்து சனி மத்திய சனி ஆத்ய சனி ஏழரை சனி என்று சனி பகவானால் எத்தனை பாதிப்புகள் ஏற்பட்டிருந்தாலும் இந்த தலத்திற்கு வந்து பரிகாரம் செய்வது வழக்கம் நளதீர்த்தத்தில் நீராடி எள் தீபமேற்றி கருங்குவளை மலர் சார்த்தி சனீஸ்வரனை வணங்கினால் தீராத துயரமும் தீரும் திருநள்ளாறு வரும் பக்தர்கள் நள தீர்த்தம் சென்று வலமாக சுற்றி வணங்கி குளத்தின் நடுவே இருக்கும் நளன் தமயந்தி சிலைகளை வணங்கவேண்டும்.

திருக்கோவிலுனுள் இருக்கும் சுவர்ண கணபதி முருகர் சன்னதியை வணங்கி திருநள்ளாற்றின் நாயகர் தர்ப்பாரணியஸ்வரரையும் அடுத்து தியாகேஸ்வரரையும் வணங்க வேண்டும் தொடர்ந்து பிராணேஸ்வரி அம்பாளை வணங்கிய பின்னரே இங்கிருக்கும் சனி பகவானை தரிசிக்க வேண்டும் என்பது ஐதீகம்.

சனி பகவானை சனிக்கிழமை மட்டுமின்றி வாரத்தின் எல்லா நாட்களிலும் வரும் சனி ஹோரை நேரத்திலும் வழிபடலாம் இதனால் கூடுதல் பலனும் கிடைக்கும் சனி பகவானுக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் செய்து கருப்பு வஸ்திரம் வடை மாலை சாத்தி எள்சாதம் நெய்வேத்தியம் செய்யலாம். 

திருநள்ளாறு தர்பாணேஸ்வரர் சுவாமி கோவிலில் நவ விடங்க தியாகர் கோவில் கொண்டுள்ளார். முசுகுந்தன் பெற்ற வரத்தின் பயனாக அவனுக்கு இந்திரன் மூலம் கிடைத்த ஏழு தியாக விடங்கர் சிலைகளை முசுகுந்தன் பூலோகத்தில் ஏழு ஆலயங்களில் பிரதிஷ்டை செய்ததாகவும் அவற்றில் இரண்டாவது தியாகவிடங்கர்  திருநள்ளாறில்  அருள் பாலிக்கிறார் என்று கூறப்படுகிறது.

திருநள்ளாறு தலத்தில் உள்ள மரகதலிங்கம் பச்சை ரத்தினம் ஆகும் இதற்குஇணையான வேறு லிங்கம் உலகில் இல்லை மரகத லிங்கத்திற்கு நாள்தோறும் ஐந்து கால அபிஷேகம் ஆராதனை நடைபெறுகிறது ஆராதனைக்கு பின்னர் வழங்கப்படும் அபிஷேகச் சந்தனம் பால் பஞ்சாமிர்தம் பன்னீர் முதலியவை தீராத நோய்களை தீர்ப்பதாக பக்தர்கள் கருதுகிறார்கள்.

இதையும் படியுங்கள்:
வெற்றியைத் தரும் 'சினிமா கோயில்': ஹைதராபாத் அருகே ஓர் அதிசயம்!
thirunallar-sani-bhagavan

திருநள்ளாறு சென்று தர்ப்பாரண்யேஸ்வரரையும் பிராணேஸ்வரியையும் சனீஸ்வர பகவானையும் வழிபடுவதோடு இந்த மரகத லிங்கமான நவவிடங்க தியாகரையும் வணங்கிவிட்டு வாருங்கள்.

சனி பகவானால் நமக்கு எந்த கெடுதலும் வராமல் தர்ப்பாரண்யேஸ்வரரும் சனீஸ்வர பகவானும் நமக்கு துணை இருப்பார்கள். காரைக்காலில் இருந்து மேற்கே ஆறு கிலோமீட்டர் தூரத்தில் திருநள்ளாறு தலம் இருக்கிறது கும்பகோணம் மயிலாடுதுறையிலிருந்து நாற்பது கிலோமீட்டர் தொலைவிலும் இந்த தலம் உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com