ஆழித்தேர் அழகும், கமலாலயத் தெப்பமும்: ஒருமுறை தரிசித்தால் ஆயுள் முழுவதும் புண்ணியம்!


Thiruvarur Thyagaraja Temple
Thiruvarur Thyagaraja Temple
Updated on

சைவ சமயத்தின் பெரிய கோவில் என்றும் பூங்கோவில் என்றும், திருமூலட்டானம் என அழைக்கப்படுவதும், பஞ்சபூத தலங்களில் பிருத்வித் தலமாகவும் விளங்குகிறது.

திருவாரூர் தியாகராஜர் கோவில். சப்தவிடத் தலங்களில் தலைமையிட தலமாகவும், திருவாசகத் திருத்தலங்களில் ஒன்றாகவும் மிகவும் திகழ்கிறது. விடங்கம் என்றால் தானாக தோன்றும் சுயம்புலிங்கம். இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள் பாலிக்கிறார். பாம்புப் புற்றை தான் எழுந்தருளியிருக்கும் இடமாக தானே விரும்பி ஏற்றுக்கொண்ட வன்மீக நாதர் கருவறையில் குடிகொண்டிருக்கும் தலம் திருவாரூர் கோயில்.

இங்குள்ள சிவனுக்கு புற்றிடங்கொண்டார், தியாகராஜர், வன்மீகநாதர் வீதிவிடங்கர் என்ற பல பெயரும் உண்டு.

அம்பிகை பெயர் கமலாம்பிகை, நீலோத்பலாம்பாள் என்றும் அழைக்கப்படுகிறார்கள்.

கோயில் வரலாறு

திருவாரூர் கோயில் 2000 ஆண்டுகளுக்கு மேற்பட்ட சோழர்களால் கட்டப்பட்ட மிகப் பிரம்மாண்டமான சிவாலயமாகும். இது மிகவும் பழமையானது என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

பஞ்ச பூதத்தலங்களில் பூமிக்குரிய தலம், பஞ்ச ஆரண்யத் தலங்கள், கமலாம்பிகை அம்மன் தலம் என பல சிறப்புகளைக் கொண்டது. இங்கு ஆழித்தேர், அஜபா நடனம் மிகவும் புகழ் பெற்றது.

தியாகராஜர் என்றால் கடவுளுக்கு எல்லாம் ராஜா என்று பொருள். கோயில் எல்லாவற்றிலும் முதன்மையானதாக விளங்குகிறது.

இக்கோவில் கர்நாடக சங்கீத மும்மூர்த்திகள் தோன்றிய திருத்தலம். கோவிலில் ஒன்பது ராஜகோபுரம், 12 உயர மதில்கள், 13 மண்டபங்கள் 15 தீர்த்த கிணறுகள், மூன்று தோட்டம், மூன்று பிரகாரம் என பிரம்மாண்டமான கட்டட அமைப்பாகும். 24 உட்கோயில்கள் உள்ளது.

இதையும் படியுங்கள்:
ஏன் பங்குனி மாதத்தை 'தெய்வீக மாதம்' என்கிறோம்? நீங்கள் அறியாத சுவாரசியத் தகவல்கள்!

Thiruvarur Thyagaraja Temple

இத்தல சிறப்புகள்

365 சிவலிங்களையும், 86 விநாயகர் சிலைகளையும் கொண்ட திருத்தலம்.

நமிநந்தியடிகள் நாயனார் தண்ணீரால் திருவிளக்கேற்றி வைத்து வழிபட்ட திருக்கோயிலாகும்.

இத்தலம் பிறக்க முக்தி திருவாரூர் என்று புகழப்படும் சிறப்பு பெற்றது.

திருவாரூர் கோவில் அளவும், தெப்பக்குள அளவும் ஒரே அளவு கொண்டதாகும்.

பன்னிரண்டு திருமுறைகளில் சிதம்பரம் நடராஜர் கோவிலை அடுத்து அதிகப் பாடல்களை பெற்ற சிறப்புடைய தலமாகும்.

கமலாலயம் என்ற தெப்பக்குளம் தீர்த்தம் உடைய தலமாகும்.

இக்கோயிலைச் சுற்றிப் பார்க்கவே முழுமையாக ஒருநாள் ஆகும்.


Thiruvarur Thyagaraja Temple
ஆழித்தேர் அழகு

பங்குனி உத்திர நாளில் வீதி விடங்கர் தனது வலப்பாதத்தைக் காட்டி அருளும் நிகழ்வு உத்திரபாத திருமண்டபம் சபாபதி மண்டபத்தில் நடைபெறும்.

திருவாதிரை மகாபிஷேகம் தியாகேசர் வலப் பாத தரிசன நிகழ்வு இராஜநாராயண மண்டபத்தில் நடைபெறும்

இங்கு எட்டு மண்டபங்கள் உள்ள சிறப்பு பெற்ற தலம்.

இங்கு பங்குனியில் நடைபெறும் தேர்த்திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. திருவாரூர் தேரழகு என்று சிறப்பிட்டுச் சொல்லும் அளவிற்கு புகழ்பெற்றது. ஆதித்தேரின் உயரம் 96 அடி ஆகும். இது வீதி விடங்கர் 96 தத்துவங்களைக் கடந்தவன் என்று குறிக்கிறது. தேரின் மேல் பகுதி கமலவடிவமாக காட்சி அளிக்கும்.

திருப்பாற்கடலில் திருமால் குத்தல இறைவர் தியாகராசரைத் தமது மார்பில் வைத்து பூஜித்தார். திருமாலின் மூச்சினால் அவர் மார்பின் ஏற்ற இறக்கங்களில் இறைவன் நடனமாடினார். இதுவே அஜபா நடனமாகும்.

இங்கு இந்திரன் இம்மூர்த்தத்தை வரமாக பெற்று பூஜித்தலமாகும்.இங்கு சாயரட்சை வழிபாட்டில் தேவேந்திரனே வந்து பெருமானைப் பூஜிப்பதாக ஐதீகம். கமலை எனும் பராசக்தி தவம் செய்த தலம். சக்தி கமலாம்பிகை இங்கு எழுந்தருளியதால், அவளின் பெயரால் இந்தக் குளம் கமலாலயம் என்று பெயர் பெற்றதாம்.

சர்வதோஷ பரிகார தலமாக இங்கு பரிகார பூஜைகள் செய்வதால் நவக்கிரக பாதிப்புகள் குறையும் என்பது ஐதீகம்.

இங்கு நவக்கிரகங்கள் ஒரே நேர்கோட்டில் இருந்து இறைவனை வழிபடுவதாலும், தியாகராஜர் கோயிலில் குடியிருந்து, உலகுக்கு சிவன் அருள் புரிவதாகக் கருதப்படுவதாலும் நவக்கிரகங்களால் ஏற்படும் தோஷங்கள் இங்கு செல்லாது. சர்வதோஷ பரிகாரத்தலமான இங்கு பரிகார பூஜைகள்செய்தால் அனைத்தும் பாதிப்புகளும் குறையும் என்பது ஐதீகம்.

மனுநீதிச்சோழன் மகளை உயிர்ப்பித்தவர் தியாகராஜர். வீதிவிடங்கனாக மாறி உயிர் கொடுத்தார்.

எல்லா தலங்களிலும் சிவபெருமானின் முன்பு நந்தி அமர்ந்திருப்பார். ஆனா இன்று தியாகேச பெருமானின் முன்பு இருக்கும் நந்தி நின்ற வண்ணம் காட்சி தருகிறார்.

இதையும் படியுங்கள்:
நெல்லை அருகன்குளம் 'எட்டெழுத்து பெருமாள்' கோவிலின் அதிசயம்!

Thiruvarur Thyagaraja Temple

இங்கு இசைக்கருவிகள் 3 உள்ளன. பஞ்சமுக வாத்தியம் எனும் ஐம்முக முழவம், சுத்த மத்தளம், பாரி நாதஸ்வரம் ஆகியவை குடபஞ்சமுகி என கூறப்படும் பஞ்சமுக வாத்தியத்தின் 5 முகங்களும், 5 முகங்களாக போற்றப் படுகின்றன. இக்கோவிலில் பூஜைகளுக்கும், விழாக்களுக்கும் மட்டுமே இசைக்கப்படுகின்றன.

இங்கு பங்குனி உத்திர திருவிழாவை ஒட்டி பத்து நாட்கள் நடைபெறும் ஆழி தேரோட்டம், தெப்பம் உற்சவம் ஆகியவை மிகவும் சிறப்பு பெற்றது.

அமைவிடம்

தஞ்சையிலிருந்து திருவாரூர் சுமார் 55 முதல் 60 கி.மீ தொலைவில் உள்ளது. பங்குனி திருவிழாவில் திருவாரூர் சென்று தியாகேசரின் தேரோட்டத்தையும், தெப்ப உற்சவத்தையும் கண்டு அருள் பெறுங்கள்.

logo
Kalki Online
kalkionline.com