
ஆந்திராவின் திருப்பதி நகருக்கு அருகிலுள்ள திருச்சானூரில் அலமேலுமங்காபுரம் என்றும் அழைக்கப்படும் ஸ்ரீ பத்மாவதி தாயார் கோவில் அமைந்துள்ளது. இது புகழ்பெற்ற திருப்பதி கோவிலின் தலைமை தெய்வமான வெங்கடேஸ்வரரின் துணைவியாக நம்பப்படும் பத்மாவதி தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. தென்னிந்தியாவின் மிக முக்கியமான மற்றும் மதிக்கப்படும் கோவில்களில் ஒன்றான ஸ்ரீ பத்மாவதி தாயார் கோவில் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான பக்தர்களையும் சுற்றுலாப் பயணிகளையும் ஈர்க்கிறது.
இக்கோவில் ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் சித்தூர் மாவட்டத்தில் உள்ள திருப்பதிக்கு அருகே 4 கி.மீ. தொலைவில் உள்ள திருச்சானூரில் உள்ளது. வெங்கடேஸ்வரருக்கும், வெங்கடேஸ்வரரின் துணைவியார் பத்மாவதி தேவிக்கும் நாராயணவரத்தில் திருமணம் நடந்ததாக புராணக்கதை கூறுகிறது. இதன் விளைவாக, இந்த திருமணத்தை நினைவுகூரும் வகையில் திருச்சானூரில் ஒரு கோவிலும், திருமலையில் ஒரு கோவிலும் கட்டப்பட்டதாக திருமலை திருப்பதி தேவஸ்தானங்கள் குறிப்பிடுகின்றன.
இக்கோவில் நிர்வாகம் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் கீழ் உள்ளது. இக்கோவிலின் கட்டிடம், தமிழரஂ கட்டிடக்கலையில் கட்டப்பட்டது. இக்கோவிலில் சமஸ்கிருதம், தமிழ், தெலுங்கு, மற்றும் கன்னடக் கல்வெட்டுகள் உள்ளன. இக்கோவிலின் புண்ணிய தீர்த்த குளத்திற்கு பத்மாவதி தீர்த்தக் குளம் என்பர். இக்கோவிலின் முக்கிய திருவிழாக்கள் பத்மாவதி தீர்த்தப் பிரம்மோற்சவம் மற்றும் வரலட்சுமி விரதம் ஆகும். மேலும் பக்தர்கள் பத்மாவதி தேவியை பிரார்த்தனை செய்வது அவர்களுக்கு ஆசீர்வாதம், செழிப்பு மற்றும் மகிழ்ச்சியைத் தரும் என்று நம்புகிறார்கள்.
இவ்வாறு பல்வேறு சிறப்புகளை பெற்ற திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் மே மாதம் நடக்கும் சிறப்பு உற்சவங்கள் குறித்து தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. அதன் விவரம் வருமாறு:-
மே மாதம் 2, 9, 16, 23 மற்றும் 30 ஆகிய தேதிகளில் மாலை 6 மணிக்கு திருச்சி உற்சவம் நடைபெற உள்ளது. வரும் 6-ந்தேதி காலை 6 மணிக்கு கோவில் ஆழ்வார் திருமஞ்சனம், 10-ந்தேதி பத்மாவதி தாயாருக்கான வசந்தோற்சவ அங்குரார்ப்பணமும் நடைபெறும். அதனை தொடர்ந்து 11 முதல் 13-ந்தேதி வரை வசந்தோற்சவம் நடைபெற உள்ளது. 12-ந்தேதி வசந்தோற்சவத்தின் ஒரு பகுதியாக காலை 9.45 மணிக்கு தாயார் தங்கத்தேரில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 18-ந்தேதி உத்திராட நட்சத்திரத்தையொட்டி மாலை 6.45 மணிக்கு தாயார் கஜ வாகனத்தில் கோவிலின் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
இந்த நாட்களை நினைவில் வைத்து பக்தர்கள் கோவிலுக்கு வந்த பத்மாவதி தாயாரை கண்குளிர சேவிக்குமாறு கேட்டு கொள்ளப்படுகிறது.