

இந்தியாவில் சந்திரன் தாக்கம் அதிகம் உள்ள இடம் திருப்பதி ஆகும். சந்திரன் சக்திமிக்க கோவில் என்பதால் மனதில் நிம்மதி உண்டாகிறது. திருமலை தரிசனம் மனதுக்கு இனிமையான தரிசனம் ஆகும். ராமானுஜர் யந்திர சக்கரங்கள் பதித்துள்ளதால் அவற்றின் சக்தி கடலளவு என்பர். கந்த புராணத்தில் இந்த தலம் பற்றிக் கூறும் போது பாபநாசதீர்த்தம் பாவங்களைப் போக்கும். செய்வினை தோஷம், வறுமை போக்கும மற்றும் சந்ததி விருத்தி உண்டாகும் என்கிறது.
பிரபஞ்ச சக்தி ஆற்றல் இங்கு சூட்சமமாக இயங்குவதால் நமது மூளை பலவேகத்துடன் செயல்படுகிறது. இதனால் தன்னம்பிக்கை அதிகரிக்கிறது. வாஸ்துப்படி கிழக்கில் அருவி அமைந்து பள்ளமாக உள்ளது. தெற்கு பகுதியில் உயரமான மலைகள் உள்ளன. வடக்கு தாழ்ந்து தெற்கு உயர்ந்தால் அந்த இடம் மிகவும் பிரபலம் அடையும். மக்கள் கூட்டம் அலைமோதும். செல்வம் மலைபோல் குவியும்.
உலகிலேயே சந்திரனை முதலில் பார்ப்பவர்கள் ஜப்பானியர்கள்தான். சந்திரன் கதிர்கள் அதிகளவில் ஈர்த்துக் கொள்வதால்தான் அவர்கள் அறிவாற்றல், நுண்ணறிவு பொருளாதார வளர்ச்சியுடன் உள்ளார்கள். அதுபோல் சந்திரன் தாக்கம் அதிகம் உள்ள இடம் திருப்பதி. சந்திர சக்திமிக்க கோவில் என்பதால் நிம்மதி உண்டாகிறது. மூலிகைகள் அதிகம் இருப்பதால் ஆரோக்கியம் உண்டாகிறது. மகான்கள் நிறைந்த பூமி என்பதால் அருளாசியும் நிறைந்து காணப்படுகிறது.
வாஸ்துப்படி மிக பலமாக இருப்பதால் இந்த திருக்கோவில் அதிக சக்தியுடன் விளங்குகிறது. இந்தியாவில் அதிக செல்வம் படைத்த கோவில் திருப்பதி. கலிகாலத்தில் பெருமாள் பக்தர்களுக்கு உதவி செய்வதை பலரும் சொல்கின்றனர். குலதெய்வம் இல்லாதவர்களுக்கு திருப்பதி பெருமாளை வணங்குவார்கள். நடந்து நாம் மலை ஏறினால் அக்குபஞ்சர் சிகிச்சையாக உடல் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.
நிமிர்ந்து மலை ஏறுவதால் நம் மூலாதார சக்கரங்கள் நன்கு சுழலும் சந்திர தசை மற்றும் சந்திர புக்தி நடப்பவர்கள், தோல் நோய் உள்ளவர்கள், மன அழுத்தத்தால் பாதிக்கப்படுபவர் களுக்கு இக் கோவில் சிறந்த பரிகாரம். திங்கட்கிழமை அங்கு சென்று தங்குவது சிறப்பு. திருப்பதி மலைமேல் எவ்வளவு நேரம் இருக்கிறோமோ அவ்வளவு நன்மையைத் தரும். அங்கு சென்றதும் அனைவரையும் ஒரு அறையில் பூட்டி வைப்பதன் நோக்கம் திருப்பதிக்கு வரும் பக்தர்கள் 11மணிநேரம் மலைமேல் இருக்கவேண்டும் என்பது ஐதீகம்.
அப்படி இருக்கும்போது கூச்சலும் குழப்பமும் செய்யாமல் அமைதியாக இருப்பது சிறந்தது. திருப்பதி பெருமாளை பிடித்துக் கொள்ளும் லக்னக்காரர்கள், மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், கன்னி, துலாம் விருச்சிகம் மகரம் மீனம் உடையவர்கள் அதிகமாக தரிசிக்க வேண்டும். வருடம் ஒருமுறை செல்லும் லக்னக்காரர்கள் சிம்மம் தனுசு கும்பம். ஓம் நமோ வெங்கடேசாய நமஹ என்று கூறினால் நமக்கு சகல ஐச்வர்யங்களும் கிடைக்கும்.