திருமலையில் நாளை ஊஞ்சல் உற்சவம்: மாட வீதிகளில் உலா வரும் மலையப்ப சுவாமி!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று கோகுலாஷ்டமி ஆஸ்தானமும், நாளை ஊஞ்சல் உற்சவம் நடைபெற உள்ளது.
கோகுலாஷ்டமி ஆஸ்தானம் - மலையப்ப சுவாமி|திருப்பதி கோவில்
கோகுலாஷ்டமி ஆஸ்தானம் - மலையப்ப சுவாமி|திருப்பதி கோவில்AI Image
Updated on

ந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள திருப்பதி ஏழுமலையான் திருக்கோவில் உலகப் புகழ்பெற்ற ஒரு புனிதமான வைணவத் திருத்தலமாகும். திருப்பதி ஏழுமலையான் (ஸ்ரீ வெங்கடாசலபதி) வீற்றிருக்கும் திருமலை சப்தகிரி எனப்படும் ஏழு மலைகளால் சூழப்பட்டுள்ளது. 108 வைணவத் திவ்ய தேசங்களில் திருவரங்கத்திற்கு அடுத்தபடியாக இரண்டாம் இடத்தில் போற்றப்படுகிறது. இது இந்தியாவின் மிக அதிக வருமானம் மற்றும் பக்தர்கள் வருகை தரும் ஆன்மீகத் தலங்களில் இதுவும் ஒன்று.

தமிழ் இலக்கியங்களான சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை போன்ற நூல்களில் இத்தலம் 'திருவேங்கடம்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இத்தலத்தில் உள்ள மூலவர் வெங்கடாசலபதி புற்றின் நடுவிலிருந்து சுயம்புவாக (தானாகத் தோன்றியவர்) வெளிப்பட்டதாக நம்பப்படுகிறது.

உலகிலேயே அதிக பக்தர்கள் வந்து செல்லும் மற்றும் அதிக வருமானம் ஈட்டும் இந்துத் திருத்தலங்களில் இது முதன்மையானது. தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அடிவாரத்தில் இருந்து திருமலைக்கு மலைப்பாதையிலும், அலிபிரி நடைபாதையிலும் நடந்து சென்று சுவாமி தரிசனம் செய்கின்றனர்.

அதேசமயம் பிரம்மோற்சவம், கருட சேவை போன்ற முக்கியமான திருவிழாக்காலங்களில் திருப்பதிக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் பல்வேறு மாநிலங்களில் இருந்து, வெளிநாடுகளில் இருந்து வழிபாடு செய்ய வருவார்கள்.

அதுமட்டுமின்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தின உற்சவம், வார உற்சவம், மாதாந்திர உற்சவம், வருடாந்திர உற்சவங்கள் என எப்போதும் திருவிழா நடந்துகொண்டே இருக்கும். 365 நாட்களில் சுவாமிக்கு 470 விழாக்கள், உற்சவங்கள், சேவைகள் நடந்து கொண்டே இருப்பது இங்கு விசேஷமாகும்.

இவ்வளவு சிறப்பு வாய்ந்த இக்கோவில் இன்று (செப்டம்பர் 4) மற்றும் நாளையும் (செப்டம்பர் 5) சிறப்பு விசேஷங்கள் நடைபெற உள்ளது.

அதன்படி, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று (வெள்ளிக்கிழமை) கோகுலாஷ்டமி ஆஸ்தானம் நடைபெறுகிறது. நாளை ஊஞ்சல் உற்சவம் நடைபெற உள்ளது.

மலையப்ப சுவாமி|திருப்பதி கோவில்
மலையப்ப சுவாமி|திருப்பதி கோவில்AI Image

இன்று கோகுலாஷ்டமியை முன்னிட்டு சோகர்பம் அணை அருகில் உள்ள பூங்காவில், திருமலை திருப்பதி தேவஸ்தான தோட்டக்கலை துறை சார்பில் காளிமர்த்தனரான கிருஷ்ணருக்கு காலை 10 மணி முதல் 12 மணி வரை பஞ்சாபிஷேகம் நடைபெற உள்ளது.

மேலும் இன்று இரவு 8 மணி முதல் 10 மணி வரை கோவில் உள்ள தங்க வாசல் முக மண்டவத்தில் கோகுலாஷ்டமி ஆஸ்தானம் நடைபெறும். இதையொட்டி தங்க சர்வபூபால வாகனத்தில் கிருஷ்ணரை எழுந்தருள செய்து நிவேதனங்கள் சமர்ப்பிக்கப்படும்.

இதையும் படியுங்கள்:
இனி 4 மணி நேரத்தில் திருப்பதி பாலாஜி தரிசனம்... பக்தர்கள் காத்திருக்க தேவையில்லை!
கோகுலாஷ்டமி ஆஸ்தானம் - மலையப்ப சுவாமி|திருப்பதி கோவில்

உக்ர ஸ்ரீநிவாசமூர்த்தி, ஸ்ரீதேவி, பூதேவி தாயார் மற்றும் கிருஷ்ணருக்கு ஏகாந்த திருமஞ்சனம் நடத்தப்பட்டு, துவாதசாராதனம் நடைபெறும். நாளை (சனிக்கிழமை) ஊஞ்சல் உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற உள்ளது.

நாளை மாலை 4 மணிக்கு நடைபெறும் இவ்விழாவில் மலையப்ப சுவாமி தங்க திருச்சியிலும், கிருஷ்ணர் மற்றொரு திருச்சி வாகனத்திலும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூட்டத்தில் நடுவில் மாட வீதிகளில் உலா வர உள்ளனர்.

நாளை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கோகுலாஷ்டமி ஆஸ்தானம் நடைபெறுவதையொட்டி ஆர்ஜித சேவைகளான ஆர்ஜித பிரம்மோற்சவம் மற்றும் சகஸ்ரதீப அலங்கார சேவைகள் ரத்து செய்யப்படுவதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் அறிவிக்கப் பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
திருப்பதியில் செப். வரை விஐபி பிரேக் தரிசனம் ரத்து- தேவஸ்தானம் அறிவிப்பு..!!
கோகுலாஷ்டமி ஆஸ்தானம் - மலையப்ப சுவாமி|திருப்பதி கோவில்

எனவே, செப்டம்பர் மாதத்தில் திருமலைக்குச் (Tirumala) செல்லத் திட்டமிடும் பக்தர்கள் இந்த மாற்றங்களைக் கருத்தில் கொண்டு, தங்களது பயண தேதிகளை முறைப்படி திட்டமிடுமாறு தேவஸ்தானம் (திருப்பதி கோவில்) கேட்டுக்கொண்டுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com