

தேவர்கள் மற்றும் அசுரர்கள் சேர்ந்து பாற்கடலைக் கடைந்து அதிலிருந்து அமிர்தம் பெறுகிற முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது ஐராவதம், கற்பகத்தரு, காமதேணு, சந்திரன் மகாலட்சுமி போன்றவை தோன்றியதாக புராணம் சொல்கிறது.
அப்போது மகாவிஷ்ணு கண்களில் இருந்து பச்சை நிறத்தில் வந்த நீரானது அமிர்த கலசத்தில் விழுந்தது. அப்போது பச்சை நிறத்தினளாக துளசி தேவி தோன்றினாள். மகிவிஷ்ணுவானவர் மகாலட்சுமி, துளசி, கெளதுஸ்பம் என வைத்துக்கொண்டு, மற்றவற்றை தேவர்களுக்கு வழங்கினார்.
நம்முடைய சாஸ்திரத்தில் துளசி வழிபாடு செய்வதற்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கபட்டிருக்கிறது. அந்த அளவுக்கு துளசி மகோத்துவம் பெற்றதற்கு காரணம். நம்முடைய வீடுகளில் துளசி மாடம் வைத்து பூஜிக்கும் வழக்கமும் அதனால்தான் ஏற்ப்பட்டது. இன்னும் ஒரு அறிய தகவல் துளசியில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள் என்பது ஐதீகம்.
துளிசி செடியை வீட்டில் வளர்க்கும் குடும்பங்களில் துர்தேவதைகளின் நடமாட்டம் அறவே இருக்காது என்கிறது சாஸ்திரம். மேலும் தொடர்ந்து துளசி தேவியை வணங்கும் வீடுகளில் சகல ஐஸ்வர்யங்களும் கிட்டும் என்று சொல்கிறார்கள் ஆச்சார்ய பெருமக்கள்.
துளசி செடியில் முப்பத்து முக்கோடி தேவர்கள் வாசம் செய்வதாகவும் சொல்கிறது புராணம். மேலும் பனிரெண்டு சூரியர்களும், அஷ்ட வசுக்களும், அஸ்வனி தேவர் முதலானோர் வாசம் செய்வதாக அறியப்படுகிறது.
இத்தனை அற்புதம் நிறைந்த துளசி செடிகளை வீடுகளில் வளர்த்து பூஜித்து வாருங்கள். அதன் பலனை அறுவடை செய்யுங்கள். மேலும் பெருமாள் கோயிலுக்கு செல்லும் போது, மறக்காமல் துளசி மாலை வாங்கி, அங்கு வீற்றிருக்கும் பெருமாளுக்கு சார்த்துங்கள். அப்படி செய்ய இயலாதவர்கள் தன் வீட்டில் வளர்க்கும் துளசி செடியில் இருந்து சில துளசி இலைகளை எடுத்து வந்து சார்த்துங்கள்.
புதன் மற்றும் சனிக்கிழமைகளில் அருகில் இருக்கும் பெருமாள் கோயிலுக்கு சென்று, அங்குள்ள பெருமாளுக்கும், அனுமனுக்கும் துளசி மாலை சார்த்துங்கள். அதனால் உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் துக்கம் பறந்து போகும். மனஉளைச்சல் கரைந்து போகும். புத்தியில் தெளிவு ஏற்பட்டு, ஞானம் உண்டாகும். நீங்கள் நினைத்து வந்த காரியம் வெற்றியாகும்.
அங்கு கொடுக்கும் துளசி தீர்த்தம் வாங்கி பருகுங்கள். அது உங்களுக்கு மிகப்பெரிய புண்ணியத்தை கொடுக்கும். அதோடு ரத்தம் சுத்தமாகும் என்கிறது விஞ்ஞானம். மூச்சு திணறல், தலைச் சுற்றல் முதலானவை சரியாகிவிடும்.
எனவே ஒவ்வொரு வீடுகளிலும் துளசி செடியை வளர்த்து, அதனை வழிபடுவதன் மூலம் துளசி தேவியை வணங்குவோம். கோயிலுக்கு செல்லும் போதெல்லாம் துளசி மாலையை பெருமாளுக்கும் அனுமனுக்கும் அணிய செய்து, வணங்கி பிரார்த்தனை செய்து புண்ணியம் சேர்ப்போம்.