தூத்துக்குடி பனிமய மாதா ஆலயம்: 440+ ஆண்டுகால வரலாற்று அதிசயங்களும் அற்புதங்களும்!

இடிதாங்கிய அன்னை என்ற பெயர் வரக் காரணம் என்ன? பிரமிக்க வைக்கும் வரலாற்றுக் கதைகள்!
பனிமய மாதா - Snows Basilica Tuticorin
பனிமய மாதா - Snows Basilica Tuticorin
Updated on

தூத்துக்குடி பனிமய மாதா - ஆலயம் 1582ல் தொடங்கப்பட்ட, 441 ஆண்டு பழமையான புகழ்பெற்ற கத்தோலிக்க திருத்தலம் ஆகும். ரோமின் பனிமய மாதா ஆலயத்தைப் போன்று கட்டிடக்கலையுடன், இடிதாங்கிய அன்னை எனப் போற்றப்படும் இந்த ஆலயம், ஏழு கடல்துறை கிராமங்களின் தாயாக கருதப்படுகிறது. ஆண்டுதோறும் ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 5 வரை நடைபெறும் பெருவிழாவில் தங்க தேரோட்டம் இலட்சக்கணக்கான பக்தர்களை ஈர்க்கிறது.

தூத்துக்குடி பனிமய மாதா ஆலயம் தமிழ்நாட்டின் மிகப் பழமையான புகழ்பெற்ற கத்தோலிக்க திருத்தலங்களில் ஒன்றாகும்.

இந்த ஆலயம் 1582 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் நாள் இரக்கத்தின் மாதா என்ற பெயரில் தொடங்கப்பட்டது. ரோம் நகரின் பணிமய மாதா திருவிழா நாளான அன்று இந்த ஆலயம் அர்ச்சிக்கப்பட்டதால் காலப்போக்கில் பனிமய மாதா என அழைக்கப்பட்டது

புனித அன்னையின் அற்புதப் பெட்டகம் 1550 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஒன்பதாம் தேதி கப்பல் மூலம் தூத்துக்குடி வந்தடைந்தது. மணிலா மற்றும் காலே தீவில் இருந்து கொண்டுவரப்பட்ட இத்திரு உருவம் கடல் மார்க்கமாக மக்களால் பக்தியுடன் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

போர்த்துக்கீசிய மற்றும் இயேசு சபை குழுக்கள் இணைந்து இக்கோவிலை உருவாக்கினார்கள். போர்க்காலத்தின்போது இத்திரு உருவம் சிவந்தாபுரம் கொற்கை போன்ற பகுதிகளில் மாற்றி வைக்கப்பட்டது. பின்னர் 1699இல் மீண்டும் தூத்துக்குடிக்கு கொண்டுவரப்பட்டு பாதுகாக்கப்பட்டது.

1982 ஆம் ஆண்டில் திருக்கோவில் 400 வது ஆண்டு நிறைவு விழாவின்போது திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் இதனை பேராலயமாக உயர்த்தினார்.

ஆண்டுதோறும் ஜூலை 26 ஆம் தேதி கொடியேற்றப்பட்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி வரை பணிமயமாதா பெருவிழா விமர்சியாக நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக தங்க தேரோட்டம் ஆகஸ்ட் மாதம் இலட்சக்கணக்கான மக்கள் புடை சூழநடைபெறும். இந்த கோவில் வேளாங்கண்ணி தேவாலயத்திற்கு அடுத்தபடியாக சிறந்து விளங்குகிறது.

இதையும் படியுங்கள்:
தமிழக முதல்வர் ஜோசப் விஜய் வழிபட்ட உடுப்பி மூகாம்பிகை அம்மன் ஆலயத்தின் அரிய வழிபாட்டு முறைகள்!
பனிமய மாதா - Snows Basilica Tuticorin

441 ஆண்டு கால பழமையான கோவிலாகும். மாதாவின் ஸ்வரூபம் மரப்பேழையில் வைக்கப்பட்டு காலே தீவில் இருந்து சாந்தலேனா என்ற கப்பல் மூலம் 1555ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஒன்பதாம் தேதி தூத்துக்குடி வந்தடைந்தது. 1582 ஆம் ஆண்டு ஏசு சபை குருக்கள் சிறிய ஆலயம் கட்டி மாதா சொரூபத்தை வைத்து வழிபட்டார்.

1707ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நாலாம் தேதி பெருத்த இடி மின்னலுடன் இக்கோவில் உள்ள மாதா சொரூபத்தை தாக்கியது. அதில் கோவிலின் மேற்கூரை தான் சேதமடைந்ததே தவிர அன்னைக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இதன் காரணமாக பணிமய மாதாவை இடிதாங்கிய அன்னை என அழைத்தார்கள். 1713 ஆம் ஆண்டு புதிய ஆலயம் கட்டப்பட்டது.

ரோமில் உள்ள எஸ்கலின் குன்றின் மீது அமைக்கப்பட்ட ஆலயம் போன்று இங்கும்கட்டப்பட்டது. ரோமில் உள்ள பனிமய மாதா போன்று இருப்பதால் இதற்கும் அந்தப் பெயர் வந்தது.

1982ல் பேராலயம் என்ற அந்தஸ்தை பெற்றது. இயேசு கிறிஸ்து மரித்த திருச்சிலுவை மரத்தின் சிறிய துண்டு ஒன்றும் அன்னை மரியாளின் திருமுடியும் இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

பனிமய மாதா - Snows Basilica Tuticorin
பனிமய மாதா - Snows Basilica TuticorinAI Image

இயேசு பாலனை கையில் ஏந்தியவாறு அன்னை மரியாள் காட்சியளிக்கிறார். இந்த அன்னையை தரிசிக்க வெளிநாடு மற்றும் நமது நாட்டின் பல பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் வருகை தருகிறார்கள். திருவிழாவின் போது 11 நாட்களும் தூத்துக்குடி நகர் முழுவதும் விழாக்கோலம பூண்டு இருக்கும். ஜாதி மத இன வேறுபாடுகளை கடந்து ஒரு சமய நல்லிணக்க விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இக்கோவில் ஏழு கடல்துறை அடைகாத்த தாய் என அழைக்கப்படுகிறாள். அதாவது வேம்பார், வைப்பார், தூத்துக்குடி, புன்ன காயல், வீரபாண்டியன் பட்டினம், திருச்செந்தூர், மணப்பாடு, ஆகிய ஏழு கடற்கரை கிராமங்களின் தாய் என அழைக்கப்படுகிறாள். இந்த கோவில் கட்டிடக்கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

இதையும் படியுங்கள்:
ஆடித் திருவிழா: வாழ்வில் அற்புதம் நிகழ்த்தும் 7 சக்திவாய்ந்த அம்மன் கோவில்கள்!
பனிமய மாதா - Snows Basilica Tuticorin

அழகிய வேலைப்பாடுகள் கொண்ட மேற்கூரை கரை படியாத ஜன்னல்கள் வண்ண ஓவியங்கள் கலை படைப்புகளுடன் காட்சியளிக்கிறது. நுணுக்கமான செதுக்கப்பட்ட மர வேலைப்பாடுகளுடன் கூடிய பொம்மைகள் கன்னி மரியாளின் அற்புத படைப்பு மலர்கள் மற்றும் மெழுகுவர்த்தியால் அலங்கரிக்கப் பட்டுள்ளது. லேடி ஆப் ஸ்னோஸ் அதாவது பனி மயமாதா ஆலயம் ஒரு அசைக்க முடியாத பக்திக்கு சான்றாக உள்ளது. மக்களின் வேண்டுகோள்கள் உடனடியாக நிறைவேற்றப்படுகிறது.

இந்தத் தொகுப்பின் மூலம் தூத்துக்குடி பனிமய மாதா ஆலயத்தின் வரலாற்றுச் சிறப்புகள், இடிதாங்கிய அன்னை என அழைக்கப்படும் பின்னணி மற்றும் திருவிழாவின்போது நடைபெறும் தங்கத் தேரோட்ட நிகழ்வுகள் குறித்த முழுமையான ஆன்மீகத் தகவல்களைப் பெற்றுப் பயனடையலாம்.

logo
Kalki Online
kalkionline.com