

விஷ்ணு பகவானுக்கு பூமியில் 106 திவ்ய ஸ்தலங்கள் உள்ளன. அவற்றில் தமிழ்நாட்டில் உள்ள காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் கட்டிடக்கலையிலும் அதன் அமைப்பிலும் மிகவும் மற்ற கோவில்களை விட வேறுபட்டு காணப்படும். பெருமானுக்கே உரிய வைணவ ஸ்தலங்களில் இது மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இதுவே இக்கோயிலின் உடைய சிறப்பு அம்சமாகும். காக்கும் கடவுளான பெருமாளுக்கு பல ஸ்தலங்கள் உள்ள போதிலும் இந்த காஞ்சிபுரத்தில் உள்ள சுந்தர வரதராஜ பெருமாள் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது.
அமைவிடம்
இந்த காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் காஞ்சிபுரத்தில் உள்ள உத்திரமேரூர் என்ற ஊரில் உள்ளது. இது காஞ்சிபுரத்திலிருந்து 28 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.
கோயிலின் தல வரலாறு
பெரும்பாலும் விஷ்ணு பகவானின் கோயில்கள் அனைத்திலும் அவர் நின்ற, அமர்ந்த, சயனை இந்த மூன்று நிலைகளில் ஏதேனும் ஒரு நிலையில் தான் பக்தர்களுக்கு காட்சி தருவார்.
இக்கோவிலில் மட்டும்தான் பெருமாள் மூன்று கோலங்களிலும் (நின்ற, அமர்ந்த, சயன) என்ற மூன்று கோலங்களிலும் பக்தர்களுக்கு விஷ்ணு பகவான் அருள் பாழிக்கின்றார். இதுவே இக்கோவிலின் சிறப்பம்சமாகும்.
இக்கோவிலில்தான் விஷ்ணு பகவான் பஞ்ச பாண்டவர்களுக்கு காட்சியளித்ததாக நம்பப்படுகிறது. இக்கோவிலின் சுந்தர வரதராஜ பெருமாள் பீமனுக்கு காட்சியளித்துள்ளார். அச்சுத வரதராஜ பெருமாள் அர்ஜுனனுக்கும், அனிருத்த வரதராஜ பெருமாள் நகுலனுக்கும், கல்யாண வரதராஜ பெருமாள் சகாதேவனுக்கும், வைகுண்ட பெருமாள் தர்மனுக்கும் காட்சியளித்துள்ளார். மேலும் இங்குள்ள ஆனந்த வள்ளி தாயார் திரௌபதிக்கு காட்சி தந்துள்ளார். இதுவே இக்கோயிலின் ஸ்தல வரலாறு ஆகும்.
கோவிலின் அமைப்பு
இக்கோவில் பல்லவ ஆட்சிக்காலத்தில் இருந்து உள்ளது. இரண்டாம் நந்திவர்ம ஆட்சியில் கட்டப்பட்டது. இக்கோவிலின் சுந்தர வரதராஜ பெருமாளுக்கு ஏழு நிலை கோயில் ராஜகோபுரம் உள்ளது.
சுந்தர வரதராஜ பெருமாள் கோவில் மூன்று அடுக்குகள் உள்ள கோவிலாகும். இக்கோவிலின் ஒரு கோவிலுக்குள் தனித்தனியாக ஒன்பது கோவில் உள்ளது. இதுவே இக்கோவிலின் சிறப்பு அம்சமாகும். ஒன்பது பெருமாள் இருப்பதன் காரணமாகவே இக்கோவிலுக்கு நவமூர்த்தி ஸ்சேத்திரம் என்ற புகழ் உண்டு.
கோவில் சிறப்புகள்
இங்குள்ள அச்சுத வரதராஜ பெருமாளை வேண்டிக் கொண்டால் வேலை மற்றும் உத்தியோக உயர்வு கிடைக்கும் என்பது மிகப்பெரிய நம்பிக்கையாக பக்தர்கள் இடத்தில் உள்ளது. கல்யாண வரதராஜ பெருமாளை நினைத்து அக்கோவிலில் நம்முடைய ஜாதகத்தை வைத்து வழிபட்டால் திருமணம் விரைவில் நடக்கும் என்பது நம்பிக்கை.
இக்கோவிலின் முதல் தளத்தில் சுந்தர வரதராஜ பெருமாளும், இரண்டாம் தளத்தில் வைகுண்ட பெருமாளும், மூன்றாம் தளத்தில் அனந்த பத்ம பெருமாளும் இருந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.
இவ்வாறு மூன்று கோலங்களிலும்” நின்ற, அமர்ந்த, சயன” பெருமாளை பார்ப்பது கண்களுக்கு விருந்தளிக்கும் சௌந்தர்யமான நிகழ்வாகவும் மன நிம்மதி மற்றும் மன மகிழ்ச்சியை தருகிறது.
மேலும் ஆன்மீகப் பயணங்களை மேற்கொள்வது மனிதர்களது மனதில் அமைதி, மன நிம்மதி, மகிழ்ச்சியை ஏற்படுத்தி தேவையில்லாத கோபம், விரோதம், போன்ற தீயஎண்ணங்களை தவிர்க்கிறது. மேலும் ஆன்மீகம் சிந்தனையை மனிதன் இடத்தில் தர்ம சிந்தனையை விதைக்கும்.