டிசம்பர் 30, 2025: வைகுண்ட ஏகாதசி விரதம் - முழு விவரங்கள்!

மகாவிஷ்ணுவிற்கு அர்ப்பணிக்கப்பட்ட நாளான வைகுண்ட ஏகாதசி அன்று கடைபிடிக்க வேண்டிய முறைகளையும், செய்யக்கூடாத தவறுகளையும் பற்றி அறிந்து கொள்ளலாம்.
vaikunta ekadasi vazhipadu
vaikunta ekadasi vazhipadu
Published on

இந்த ஆண்டின் கடைசி மற்றும் மிகவும் சக்தி வாய்ந்த விஷ்ணு பகவானுக்கு உரிய வைகுண்ட ஏகாதசி நாளை, செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 30-ம்தேதி) வருகிறது. இது மார்கழி மாத வளர்பிறை ஏகாதசியாகும்.

வைகுண்ட ஏகாதசி என்பது மகாவிஷ்ணுவிற்கு அர்ப்பணிக்கப்பட்ட மிகவும் முக்கியமான நாள். ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் வளர்பிறையில் வரும் ஏகாதசியே வைகுண்ட ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது. வருடம் முழுவதும் வரும் 24 ஏகாதசிகளில் விரதம் இருக்க முடியாதவர்கள் இந்த ஒரு ஏகாதசியில் மட்டும் விரதம் இருந்தால் அது வருடம் முழுவதும் இருந்த 24 ஏகாதசிகளின் பலன்களையும், 30 கோடி தேவர்களையும் வழிபட்ட புண்ணியத்தையும் தரும். நாளைய தினம் அருகில் உள்ள பெருமாள் கோவிலுக்கு சென்று அதிகாலையில் திறக்கப்படும் சொர்க்கவாசல் வழியாக சென்று பெருமாளை தரிசிப்பது பெரும் புண்ணியம் தரும். வைகுண்ட ஏகாதசி முன்ஜென்மம் மற்றும் இந்த ஜென்ம பாவங்களை போக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

ஒவ்வொரு மாதமும் வரும் ஏகாதசியை விட மார்கழி மாதத்தில் வரும் இந்த வைகுண்ட ஏகாதசி மிகவும் சிறப்பு வாய்ந்தது என்பதால் அன்றைய தினம் காலையில் நீங்கள் பெருமாள் கோவிலுக்கு சென்று விரதத்தை தொடங்கலாம். பின்பு அன்று பகல் முழுவதும் உபவாசம் இருக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா தொடக்கம்: 30-ந்தேதி சொர்க்கவாசல் திறப்பு!
vaikunta ekadasi vazhipadu

அன்றைய தினம் நாள் முழுவதும் எந்த உணவையும் சாப்பிடாமல் இருக்க முடியும் என்றால் தாராளமாக இருக்கலாம். அப்படி இல்லையென்றால் எளிமையான உணவுகளை சாப்பிட்டுக்கொள்ளுங்கள். அன்றைய தினம் முழுவதும் விரதம் இருக்க முடியாதவர்கள் பால், பழம் உண்டு துளசி நீர் அருந்தி விரதம் இருப்பது நல்லது. உங்க உடலை வறுத்திக்கொண்டு ரொம்பவும் கஷ்டப்பட்டு விரதம் இருக்க வேண்டாம். அது நாராயணருக்கு பிடிக்காது.

பகலில் அமைதியாக இருந்து தூய மனதுடன் பெருமாளை தியானிக்க வேண்டும். அன்றைய தினம் மதியம் உறங்குதல் கூடாது. மாலை ஆலயங்களுக்கு சென்று விஷ்ணுவை தரிசிக்கலாம். விரதம் இருப்பவர்கள் ‘ஓம் நமோ நாராயணாய நமஹ’ எனும் நாமத்தை சொல்லி விஷ்ணு பகவானை வழிபட வேண்டும். அன்று இரவு முழுவதும் கண் விழித்து, பெருமாள் கதைகளை கேட்கலாம். விஷ்ணு சகஸ்ரநாமம்,‘ஓம் நமோ நாராயணாய’, என்ற மந்திரத்தை முடிந்தவரை உச்சரிக்கலாம். மறுநாள் 31-ம்தேதி துவாதசி அன்று துளசி தீர்த்தத்துடன் விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.

பூஜை அறையில் அரிசி மாவு விளக்கு போடுவது சிறப்பு. பச்சை கற்பூரம் சேர்த்து மணக்கும் சர்க்கரை பொங்கல், இனிப்பு அவல் படைத்து பெருமாளை வழிபாடு செய்யலாம். குளிர்ந்த நீர் வெல்லம், ஏலக்காய், சுக்கு மற்றும் சிறிது எலுமிச்சை சாறு கலந்த பானகம் பெருமாளுக்கு மிகவும் இஷ்டம்.

வைகுண்ட ஏகாதசி தொடங்கும் நேரம்

ஏகாதசி திதி டிசம்பர் 30-ம்தேதி செவ்வாய்க்கிழமை காலை 7.73 மணி முதல் புதன் கிழமை (டிசம்பர் 31ம்தேதி) அதிகாலை 5.01 மணி வரை உள்ளது. இந்த நாளில், இந்த நேரத்தில் பெருமாள் கோவிலுக்கு சென்றால் உங்கள் வாழ்க்கையில் திருப்பம் காண இது சரியான நேரம்.

அனைத்து பெருமாள் கோவில்களிலும் டிசம்பர் 30-ம்தேதி அதிகாலை 4.45 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. டிசம்பர் 30-ம்தேதி முதல் ஜனவரி 8-ம் தேதி வரை தொடர்ந்து திறந்திருக்கும்.

இதையும் படியுங்கள்:
வைகுண்ட ஏகாதசி 2025: திருப்பதியில் சொர்க்கவாசல் திறப்பு எப்போது..? வெளியான முக்கிய அறிவிப்பு.!
vaikunta ekadasi vazhipadu

நாளைய தினம் வரும் வைகுண்ட ஏகாதசி, செவ்வாய்கிழமையுடன் வருவதால் விஷ்ணு மற்றும் முருகப்பெருமானை வழிபட உகந்த நாளாகும். மேலும் வைகுண்ட ஏகாதசி அன்று இந்த பொருட்களை வாங்கினால் விஷ்ணு பகவான் மற்றும் முருகனின் அருளை இரட்டிப்பாக பெறலாம். தொடங்க உள்ள புது வருடம் சீரும் சிறப்புமாக தொடங்கும். இந்த பொருட்களை வைகுண்ட ஏகாதசி அன்று வாங்குவதால் உங்களின் 21 தலைமுறை பாவங்கள் நீங்கி 16 செல்வங்கள் நிரம்பி செல்வம் வந்துக்கொண்டே இருக்கும்.

* மகாலட்சுமிக்கு மிகவும் பிடித்தமான வாசம் பச்சை கற்பூரத்தின் வாசம். 10 ரூபாய்க்கு பச்சை கற்பூரத்தை வாங்கி அதை ஒரு மஞ்சள் துணியில் முடிந்து உங்களது பணப்பெட்டியிலோ அல்லது பூஜை அறையிலோ வைத்தால் வீட்டில் செல்வம் சேரும் என்பது நம்பிக்கை.

* இந்த வருடம் வைகுண்ட ஏகாதசி செவ்வாய் கிழமை வருவதால் முருகனுக்கும் செவ்வாய் பகவானுக்கும் உகந்த தினம் என்பதால் துவரம் பருப்பை வாங்கி உங்கள் வீட்டில் வையுங்கள்.

Tirupathi Temple
Tirupathi Temple Vaikunda Egadhasi

* அடுத்து துளசி செடி. இதை கடைகளில் வாங்க வேண்டும். இல்லை என்றால் அருகில் உள்ள வீடுகளில் 5 ரூபாய் கொடுத்து வாங்கி கொள்ளுங்கள். ஆனால் இலவசமாக வாங்கக்கூடாது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். உங்களின் கஷ்டங்கள், கெட்டது, வறுமை அனைத்தும் உங்கள் வீட்டை விட்டு நீங்கி செல்லும்.

* அடுத்து பெருமாளுக்கு மிகவும் பிடித்த மாதுளை பழம். இதை வாங்கி நைவேத்தியம் வைத்து அதை யாருக்காவது தானமாக கொடுங்கள். இதை செய்வதினால் உங்களது 21 தலைமுறை பாவங்கள் நீங்கி செல்வம் சேரும் என்பது ஐதீகம்.

* சுத்தமான தேன் கிடைத்தால் அதை சிறிதளவு வாங்கி உங்களது பூஜை அறையில் வையுங்கள். உங்கள் வாழ்க்கை தேனை போல் தித்திப்பாக மாறும்.

* வைகுண்ட ஏகாதசி நாளில் விரலி மஞ்சள், பச்சரிசி, வசம்பு, கிராம்பு, ஒரு ரூபாய் நாணயங்கள் ஆகியவற்றை உங்கள் பூஜை அறையில் வைத்து பூஜை செய்த பின்பு வீட்டில் இருக்கும் பெரியவர்கள் அல்லது குழந்தைகளின் கையால் அதை ஒரு மஞ்சள் துணியில் கட்டி வீட்டு வாசலில் கட்டி வையுங்கள். அப்படி செய்தால் கண் திருஷ்டி, கடன் தொல்லைகள் முடிவுக்கு வரும். வீட்டில் உள்ள கஷ்டங்கள் படிப்படியாக பனிபோல் கரையும்.

நாளைய தினம் தெரியாமல் கூட இந்த தவறுகளை செய்யாமல் இருக்க வேண்டும்.

* யாரிடமும் பொய் சொல்லாதீங்க, அப்புறம் கோபப்படாதீங்க. யாரையும் அடிக்கவோ திட்டாவோ செய்யாதீங்க.

* அன்றைய தினம் அசைவம், சிகரெட் போதை வஸ்துக்களை உபயோகிக்காதீங்க.

இதையும் படியுங்கள்:
ஏழு ஜன்ம பாவங்களைப் போக்கும் வைகுண்ட ஏகாதசி விரதம்!
vaikunta ekadasi vazhipadu

* வைகுண்ட ஏகாதசி அன்று தூங்கக்கூடாது.

* நாளைய தினம் எக்காரணத்தை கொண்டும் அரிசி சாதம் அல்லது அரிசியால் செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடக்கூடாது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com