ஆடி மாதத்தில் களைகட்டும் வண்டியூர் மாரியம்மன் கோவில் திருவிழாக்கள்!

ஆடி மாதத்தில் அற்புதம் நிகழ்த்தும் மதுரை வண்டியூர் மாரியம்மன் கோவிலின் வரலாற்று பின்னணி.
மாரியம்மன் கோவில் - தெப்பக்குளம் திருவிழா
மாரியம்மன் கோவில் - தெப்பக்குளம் திருவிழாAI Image
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

துரையில் காவல் தெய்வமான வண்டியூர் மாரியம்மன் கோவில், ஆடி மாதத்தில் சிறப்பு வழிபாடுகள், முளைப்பாரி திருவிழாக்கள், பூச்சொரிதல் விழா மற்றும் அம்மனுக்கு செய்யப்படும் சிறப்பு அபிஷேகங்களால் களைகட்டும். இங்கு அம்மன் சுயம்புவாக அருள்பாலிப்பதுடன் நோய் தீர்க்கும் சக்தி வாய்ந்தவராகவும் திகழ்கிறார்.

துர்கையாகவும், மாரியம்மனாகவும் தரிசனம் தரும் இந்த வண்டியூர் மாரியம்மனுக்கு ஆடி மாதத்தில் வரும் செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் இங்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள், வளையல் அலங்காரம் மற்றும் கூழ் வார்ப்பது போன்ற நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெறும். பெண்கள் மாவிளக்கு எடுத்தும், முளைப்பாரி ஊர்வலமாக வந்தும் அம்மனை வழிபடுகின்றனர். இங்குள்ள அம்மன் துர்க்கை அம்சமாகவும் கருதப்படுகிறாள்.

வித்தியாசமான கோலத்தில் அம்மன்:

கருவறையில் பிற அம்மன் கோவிலில் இல்லாத விதமாக இந்த மாரியம்மன் தனது வலது காலை மடித்தும், இடது காலை பாதி மடித்தும், மகிஷாசுரனை தரையில் அழுத்தியவாறு அமர்ந்திருக்கிறாள். உற்சவ அம்மனாக நின்ற நிலையிலும் காட்சி தருகிறாள்.

பொதுவாக மாரியம்மனின் பாதங்களுக்கு அடியில் ஏதேனும் ஒரு அசுரன் காணப்பட்டாலும், இக்கோவிலில் உள்ள அம்பிகை துர்கா தேவி என்பதால், குறிப்பாக மகிஷாசுரன் அவளது பாதங்களுக்கு அடியில் காணப்படுகிறான். கையில் பாசம், அங்குசம் ஏந்தி சிரித்த கோலத்தில் காட்சி தருகிறாள். இங்கு மூலவராக மாரியம்மன் இருப்பதால் வேறு பரிவார தெய்வங்கள் கிடையாது.

கோவில் வரலாறு:

வண்டியூர் தெப்பக்குளம் உருவாவதற்கு சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இக்கோவில் அமைந்துள்ளதாக வரலாறு கூறுகிறது. 1645 ஆம் ஆண்டு திருமலை நாயக்கர் காலத்தில் இந்த பிரம்மாண்டமான தெப்பக்குளம் உருவாக்கப்பட்டது. மதுரையில் எந்த ஒரு பெரிய கோவில் திருவிழா துவங்கினாலும், இந்த வண்டியூர் மாரியம்மனுக்கு முதல் பூஜை நடத்தப்படுவது வழக்கம்.

மாரியம்மன் கோவில் - தெப்பக்குளம் திருவிழா
மாரியம்மன் கோவில் - தெப்பக்குளம் திருவிழா

முற்காலத்தில் மன்னர்கள் போருக்குப் புறப்படுவதற்கு முன்பு இங்கு வந்து வழிபட்டு சென்றனர். பருவ மழை பொய்த்து வறட்சி பரவிய பொழுது பக்தர்கள் மழைக்காக இவளை நாடி வந்து பூஜித்தனர். மக்களுக்கு மழையை அருளியதால் அவள் மழையின் தெய்வமான மாரியம்மனாக கொண்டாடப்பட்டாள். எனவே மாரியம்மன் என்ற பெயர் அவளுக்கு நிலைத்துவிட்டது.

உலகப் புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் கோவிலில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் வைகை ஆற்றங்கரையில் அமைந்துள்ள வண்டியூர் மாரியம்மன் கோவில் பழமையான கோவில்களில் ஒன்றாகும். கோவில் வாசலில் இரண்டு துவாரபாலகிகள் உள்ளனர்.

பீப்பல் மரத்தடியில் விநாயகர் மற்றும் பேச்சியம்மன் மூலவராகிய மாரியம்மனுடன் பக்தர்களுக்கு அருள் புரிகிறாள். வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளத்தை தோண்டிய பொழுது மீனாட்சியம்மன் கோவிலில் உள்ள 7 அடி முக்குருணி விநாயகர் சிலை கண்டெடுக்கப்பட்டது.

இதையும் படியுங்கள்:
மாமியார் சண்டை முதல் கிறித்தவப் பூசாரி வரை: தமிழகக் கோயில்களின் 4 அதிரடி விநோத வழிபாடுகள்!
மாரியம்மன் கோவில் - தெப்பக்குளம் திருவிழா

தெப்பக்குளம்:

சதுர வடிவில் இருக்கும் இந்த கோவில் குளம் 16 ஏக்கர் பரப்பளவில் விரிந்துள்ளது. அதனுடைய நான்கு பக்கங்களிலும் உள்ள 12 நீண்ட கருங்கல்படிகள் மற்றும் சுமார் 15 அடி உயரத்திற்கு கல்லினால் சுவரும் கட்டப்பட்டிருக்கிறது. சுமார் 1000 அடி நீளமும், 16 ஏக்கர் பரப்பளவும் கொண்ட இந்த தெப்பக்குளம் தமிழ்நாட்டில் உள்ள பெரிய தெப்பக்குளங்களில் ஒன்றாகும்.

குளத்தின் நடுவில் விக்னேஸ்வரர் கோவிலைக் காணலாம். திருமலை நாயக்க மன்னர் கோவில் குளத்தையும், கோவிலையும் சுற்றி இந்த நீண்டப் படிகளைக் கட்டினார். திருமலை நாயக்கருடைய பிறந்த நாளை நினைவு கூறும் வகையில் இங்கு தை மாதத்தில் 'தெப்பத்தோட்ட விழா' கொண்டாடப்படுகிறது.

பௌர்ணமி அன்று கொண்டாடப்படும் இந்த தெப்போற்சவத்தில், தைப்பூசத்தன்று இங்கு மீனாட்சி மற்றும் சுந்தரேஸ்வரருக்கு தெப்ப திருவிழா எடுக்கப்படுகிறது. வண்ணமயமான ஒளிரும் விளக்குகளுடன் நடைபெறும் இத் திருவிழாவைக் காண்பதற்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடுவர்.

நேர்த்திக்கடன்:

பால்குடம், தீச்சட்டி எடுப்பது, கண்மலர் காணிக்கை, உருவ பொம்மைகள் வாங்கி வைப்பது, 'ஆயிரம் கண் பானை' எனப்படும் பானை முழுவதும் மையினால் புள்ளி வைக்கப்பட்டு கொண்டு வருவது, மாவிளக்கு ஏற்றுவது போன்ற பல நேர்த்திக்கடன்களை மக்கள் பக்தி சிரத்தையுடன் செய்கின்றனர்.

இக்கோவிலில் தரப்படும் தீர்த்தம் மிகவும் விசேஷமானது. கண் நோய், அம்மை போன்ற நோய் உள்ளவர்கள் இங்கு அம்பிகையை வணங்கி தீர்த்தம் வாங்கிச் செல்கின்றனர். இந்த தீர்த்தத்தைப் பருக நோய்கள் நீங்குவதாக நம்பிக்கை உள்ளது.

இதையும் படியுங்கள்:
எரியும் தீயில் குளியல்! பொய் சொன்னால் தண்டிக்கும் மரம்! அம்மன் கோயில்களின் அமானுஷ்ய ரகசியங்கள்!
மாரியம்மன் கோவில் - தெப்பக்குளம் திருவிழா

எப்படிச் செல்வது?

கோவில் காலை 6 மணி முதல் திறந்திருக்கும். கோவில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. அருகில் உள்ள விமான நிலையம் மதுரை.

இந்தத் தொகுப்பை வாசிப்பதன் மூலம், மதுரையின் மிகப்பழமையான வண்டியூர் மாரியம்மன் கோவிலின் தனித்துவமான வழிபாட்டு முறைகள், அம்மை மற்றும் கண் நோய்களைத் தீர்க்கும் மூலிகை தீர்த்தத்தின் மகிமை மற்றும் 16 ஏக்கர் பிரம்மாண்ட தெப்பக்குளத்தின் பின்னணியில் உள்ள வரலாற்று உண்மைகளை நீங்கள் முழுமையாக அறிந்துகொள்ள முடியும்.

கல்கியின் புகழ்பெற்ற வரலாற்றுப் புதினமான 'பொன்னியின் செல்வன்' கதை, ஓர் ஆடிப் பெருக்கு தினத்தன்று, காவிரியாற்றுப் பெருக்கெடுக்கும் காட்சியோடு மிகச்சிறப்பாகத் தொடங்குகிறது. கல்கி குழுமம் தன் You Tube சானலில் வெளியிட்ட 'பொன்னியின் செல்வன் வந்தியத்தேவன் பாதையில் ஓர் அனுபவ பயணம்' என்ற 16 வீடியோக்களின் தொகுப்பின் முதல் வீடியோ இதோ: 
logo
Kalki Online
kalkionline.com