வடக்கு திசை – செல்வம் தரும் குபேர திசையும், அள்ளித்தரும் அதிர்ஷ்டமும்!

vastu-benefits
vastu-benefits
வி. சுவாமிநாதன்

எனது தந்தை நிறைய சமூக சிறுகதைகள் எழுதியுள்ளார். குறிப்பாக கல்கியில் எழுதிய 'பிரமை!' மற்றும் 'அவர்கள் காத்திருக்கிறார்கள்!' சிறுகதைகள் கல்கி பரிசு போட்டியில் பரிசு வாங்கியது குறுப்பிடத்தக்கது. தற்போது மங்கையர் மலரில் பிரசுரமான எனது சிறுகதை 'கூண்டு கிளி அல்ல நான்!' என்னுடைய முதல் படைப்பு. தினமலர் வாரமலரில் கவிதைச்சோலை பகுதியில் கவிதைகளூம், தினத்தந்தி குடும்ப மலரில் புதுக்கவிதைகளும் மற்றும் தொகுப்பு நூலில் தன்முனைக் கவிதைகளும் பிரசுரமாகி உள்ளன. நிறைய எழுத வேண்டும் என்கிற ஆசை உள்ளது.

Updated on

ம் முன்னோர்கள் ஒவ்வொரு திசைக்கும் ஒரு சிறப்பைக் கூறியுள்ளனர். அதில் வடக்கு திசை என்பது செல்வத்தின் அதிபதியான குபேரனுக்குரிய திசையாகக் கருதப் படுகிறது. இந்த திசையைச் சரியாகப் பயன்படுத்தினால் குடும்பத்தில் செல்வமும், வளர்ச்சியும் தானாக வந்து சேரும்.

இந்த திசையில் நேர்மறை ஆற்றலை அதிகரிக்கவும், ஆரோக்கியத்தைப் பேணவும் சில குறிப்பிட்ட மூலிகைகளை வளர்ப்பது சிறந்தது. அவை என்னவென்று பார்ப்போமா?

வளர்க்க வேண்டிய முக்கிய மூலிகைகள்:

துளசி:

ஆன்மீக ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் துளசிக்கு முதலிடம் உண்டு. இது வீட்டைச் சுற்றியுள்ள காற்றைத் தூய்மைப் படுத்துவதுடன், குடும்பத்தில் எப்போதும் நேர்மறை ஆற்றல் நிலைத்திருக்கச் செய்யும்.

புதினா:

புதினா செடியின் நறுமணம் மனதிற்குப் புத்துணர்வைத் தரும். இது சோம்பலை நீக்கி நம்மை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவும். செரிமான கோளாறுகளை நீக்கி உடல் நலத்தைப் பாதுகாக்கும்.

கரிசலாங்கண்ணி:

சித்த மருத்துவத்தில் 'கற்ப மூலிகை' என்று போற்றப்படுவது கரிசலாங்கண்ணி. இது கல்லீரல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. கூந்தல் வளர்ச்சிக்கும், கண் பார்வைக்கும் மருந்தாகப் பயன்படுகிறது.

இதனால் கிடைக்கும் நன்மைகள்:

பணவரவு: குபேர திசையில் இச்செடிகளை வளர்ப்பது பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும்.

மன அமைதி: மூலிகைகளின் நறுமணமும், பசுமையும் மன அழுத்தத்தைக் குறைத்து அமைதியைத் தரும்.

குடும்ப ஒற்றுமை: வீட்டில் நேர்மறை அதிர்வுகள் அதிகரிப்பதால் சண்டைகள் நீங்கி ஒற்றுமை பலப்படும்.

வாழ்வில் வளம் பெற உங்கள் வீட்டு வடக்கு திசையில், இன்றே இந்த மூலிகைகளை நட்டுப் பராமரிக்கத் தொடங்குங்கள்!

ராமாயணத்தில் உள்ள ஆழ்ந்த ஆன்மிகத் தத்துவம்!

ராமன் தன் திருக்கையில் அணிந்திருக்கும் படியான கணையாழி மோதிரத்தை, ஆஞ்சநேயன்தான் எடுத்துப்போய் சீதா பிராட்டியின் கையில் வைக்கிறான்.

சீதையை அங்கே ஜீவனாக நம் மனதிலே உருவகப்படுத்திக்கொள்ள வேண்டும். பகவத் அனுக்கிரகம் அந்த ஜீவனுக்கு பரிபூரணமாக இருக்கிறது.

மோதிரத்தை ஆஞ்சநேயன் அங்கு கொண்டு போய்க் கொடுத்த உடன் சீதா பிராட்டி என்ற ஜீவனை எம்பெருமான் திருவடியிலே சேர்க்கும் பொறுப்பும் அவனுடையதாகிறது.

இதையும் படியுங்கள்:
ஏன் விநாயகரை முதலில் வணங்குகிறோம்? தும்பிக்கை முதல் தந்தம் வரை உணர்த்தும் விநாயகர் தத்துவம்!
vastu-benefits

ஜீவனானது எப்போதும் பரமாத்மா திருவடியிலே தலைவணங்கி கொண்டிருக்க வேண்டும் என்பதைக் காட்டத்தான் சீதா தேவி தன் சிரோ பூஷணத்தை (தலை ஆபரணம்) ஆஞ்ச நேயனிடம் கொடுத்தனுப்பினாள்.

ராமனின் கை விரல் மோதிரம் பரமாத்மாவின் அபய ஹஸ்தத்தை குறிக்கிறது. சீதையின் சூடாமணி தலை வணங்கிய நிலையைத் குறிக்கிறது.

இரண்டையும் நடத்தி வைத்தவன் ஆஞ்சநேயன். இவ்வாறு ராமாயணத்தில் உள்ள ஒவ்வொரு நிகழ்வும் ஆழ்ந்த ஆன்மீக தத்துவத்தை நமக்கு உணர்த்துகிறது.

logo
Kalki Online
kalkionline.com