வாழ்வின் நோக்கம் கூறும் ஸ்ரீஅன்னை!

Sri Annai
Sri Annai
Published on

றைவனுக்காக வாழ்தல் அல்லது உண்மைக்காக வாழ்தல் அல்லது குறைந்தபட்சம் தனது ஆன்மாவுக்காகவாவது வாழ்தல் என்பதே வாழ்வின் உண்மையான நோக்கமாகும். சில வீடுகளில் ஒவ்வொரு அறையும் சுத்தமாயிருக்கும். ஆனால், அங்குள்ளவர்களின் மனமோ மாசடைந்ததாயிருக்கும். சில வீடுகளில் அறைகள் குப்பையும் கூளமும் நிறைந்து இருக்கும். ஆனால். அங்குள்ளவர்களின் மனதோ தூய்மையானதாக இருக்கும். இவை இரண்டுமே சரியானதல்ல. அகமும் புறமும் ஒரேமாதிரியாக சுத்தமாக இருக்க வேண்டும்.

நல்லது, கெட்டது பாராமல் யாரேனும் உங்கள் மனதை அல்லது உணர்வை காயப்படுத்தியிருக்கலாம். ஆனால், அதை நீங்கள் கண்டுகொள்ளாமல் இருந்து விட முடியும். அவமதிப்புகளால் உங்களை அசைத்து விட முடியாது. நீங்கள் எதற்கும் அசைந்து கொடுக்க வேண்டியதில்லை.

உங்களைப் பற்றி தவறாகப் பேசும்பொழுது நீங்கள் மறுவார்த்தை பேசாமல் அமைதியாயிருங்கள். எந்த ஒரு அழிவும் உங்களைத் தீண்ட முடியாமல் காலடியில் விழும். அதனால் உங்கள் இதயத் துடிப்பை நீங்கள் சீராக வைத்துக்கொள்ள முடியும். குறைந்தபட்சம் எந்த இடையூறுமின்றி உங்கள் அமைதி நிலைத்திருக்கும். ‘அடிக்கு அடி’ என்பதை விட, உங்களுடைய இந்த அணுகுமுறை சக்தி வாய்ந்ததாயிருக்கும்.

இதையும் படியுங்கள்:
வைரத் தேர் பவனி வரும் அற்புத முருகப்பெருமான் திருத்தலம்!
Sri Annai

தீமை எதுவென்றால் அடிமைத்தனம்தான். துறவுக்கும் அடிமைப்படலாகாது. தேவைகளுக்கும் அடிமையாகலாகாது. எது வருகிறதோ அதை ஏற்க வேண்டும். அது போய் விடுமானால் அதை இழக்கவும் சித்தமாக இருக்க வேண்டும்.

இன்றைக்குக் கிடைத்திருக்கும் வாய்ப்பையும், சந்தர்ப்பத்தையும் கை நழுவ விட்டால், அதை மீண்டும் பெற ஒருவேளை ஆயிரக்கணக்கான வருஷம் காத்திருக்க வேண்டியது இருக்கலாம். விடாமுயற்சியுடன் உறுதியுடன் நீடித்து, சற்றும் தளராத போராட்டமாகத் தொடர்ந்து மேற்கொண்டால் பாறாங்கல் போன்ற பெரிய தடைகளும் தகர்ந்து பொடிப்பொடியாகி விடும்.

சத்தியத்தின் இருப்பிடம்தான் இறைவன் இருக்குமிடம். சத்தியத்தையும் உண்மையையும் கடைப்பிடிப்பவனிடமே கடவுள் அருள் பரிபூரணமாய் இருக்கும். ‘இதுநாள் வரை இப்படி இருந்தோமே’ என்ற குழப்பத்திற்கு ஆளாகாமல், ‘இன்று முதல் இப்படி மாறுவோம்’ என்ற ஆர்வத்துடன் அமையும் சிந்தனையே ஆனந்தமானது.

இதையும் படியுங்கள்:
வலம்புரி சங்கை வீட்டில் வைத்திருப்பதில் இத்தனை நன்மைகளா?
Sri Annai

தன்னம்பிக்கையாளர்கள் நேர்மையுடன் பிரார்த்தித்து விரும்பியதை இறைவனிடம் பெறுகின்றனர். நேர்மையுடன் இருப்பதும், தன்னைச் செம்மைப்படுத்திக் கொள்வதும், நேர்மையை வளர்த்துக் கொள்வதும் நிறைவான தூய்மையாகும். நேர்மையுடன் இருப்பது போல் பாசாங்கு செய்யக் கூடாது.

கரங்களை எதிரிகளிடம் நீட்டாமல் அவர்களிடம் அப்பழுக்கில்லாமல் நடந்து கொள்வதுடன், நேர்மை, நியாயத்தின் அடக்கமான வீரத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கினால் வெற்றி நம் அருகில் வரும்.

மனம் ஒரு ‘பாலிஷ்’ செய்யப்பட்ட நிலைக் கண்ணாடி. அதை தூய்மையாக வைத்துக்கொள்வதும், தூசு படியாமல் வைத்துக்கொள்வதும் நமது தொடர்ச்சியான பணியாகும். இறைவன் மீது செய்யப்படும் பிரார்த்தனையில் உறுதியில்லாமல் போனால், எதுவுமே இல்லாமல் போய்விடும் என்பதை மறக்கக் கூடாது. நாம் விரும்பியதை கடவுள் தர மாட்டார். நம் தகுதிப்படியேதான் அவர் அருள்புரிகிறார். கடவுளின் அருளுக்கு எப்போதும் நம்மை பாத்திரமாக்கிக்கொள்ள வேண்டும்.

நாம் எதைப் பற்றி எண்ணமிடுகிறோமோ அவற்றாலேயே எப்போதும் சூழப்பட்டிருப்போம். இது மிகவும் முக்கியமானது. நீங்கள் இழிவான பொருட்களைப் பற்றி எண்ணினால் இழிவான பொருட்களால் சூழப்பப்பட்டுருப்பீர்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com