இன்று வளர்பிறை பஞ்சமி திதி - வாராஹி அம்மனை வழிபட உகந்த நாள்!

வாராஹி அம்மன்
வாராஹி அம்மன்
Published on

அமாவாசை மற்றும் பௌர்ணமிக்கு பிறகு வரும் ஐந்தாவது நாள் பஞ்சமி திதி ஆகும். அமாவாசைக்கு பிறகு வருவது வளர்பிறை பஞ்சமி என்றும் பௌர்ணமிக்கு பிறகு வருவது தேய்பிறை பஞ்சமி என்றும் அழைக்கப்படுகிறது. பொதுவாகவே பஞ்சமி திதி அன்று விரதம் இருந்து பெண் தெய்வங்களை வழிபடுவது சிறப்பானதாகும்.

பஞ்சமி திதி, சப்த கன்னியர்களில் ஒருவரான வாராஹி அம்மனை வழிபட உரிய திதியாகும். மாதந்தோறும் வரும் தேய்பிறை பஞ்சமி அன்று வராஹி அம்மனை வழிபட உகந்த நாளாகும்.

மாதந்தோறும் வரும் பஞ்சமி திதி அன்று விரதம் இருந்து வராஹி அம்மனை வழிபாடு செய்து வந்தால் எதிரிகளின் தொல்லை நீங்கும். கடன் தொல்லை, சொத்து பிரச்சனை நீங்கும், வாழ்வில் வளங்கள் பெருகும்.

வாராஹிக்கு உரிய திசையாக வட திசை கருதப்படுகிறது. எனவே இந்த திசையில் அமர்ந்து அம்மனை வழிபாடு செய்வது உகந்தது. வீட்டில் தினமும் ஒரு அகல் விளக்கு ஏற்றி வைத்து, அந்த விளக்கில் வாராஹி அம்மன் இருப்பதாக நினைத்து வழிபட வேண்டும். வீட்டுப் பூஜை அறை இருந்தால் வாராஹி அம்மனின் படத்தையோ, சிலையையோ தாராளமாக வைத்து வணங்கலாம் மற்றும் பூஜித்து வரலாம். வாராஹி அம்மனுக்கு விருப்பமான நீலம், சிவப்பு, மஞ்சள் நிற உடைகளை உடுத்தி வழிபாடு செய்வது சிறப்பான பலன்களை தரும்.

வாராஹி அம்மன் வழிபாட்டை சுக்கிரனுக்கு உகந்த நாளான வெள்ளிக்கிழமை செய்வது நல்லது. அதே போல் முதன் முதலாக வாராஹி அம்மனை வழிபாடு செய்பவர்கள் வெள்ளிக்கிழமையில் ஆரம்பிப்பது நல்லது.

இதையும் படியுங்கள்:
கடந்த ஆண்டில் திருப்பதி ஏழுமலையான் கோவில் உண்டியல் காணிக்கை இத்தனை கோடியா?
வாராஹி அம்மன்

தொடர்ந்து ஐந்து பஞ்சமி தினங்களில் விரதம் இருந்து வாராஹி அம்மனை வழிபாடு செய்தால் பல்வேறு நன்மைகள் உண்டாகும். எதிரிகள் தொல்லை, பிரச்சனைகள் தீர நின்ற நிலையில் காட்சி தரும் வாராஹி அம்மனை வழிபாடு செய்ய வேண்டும். வீட்டில் செல்வம் பெருக அமர்ந்த நிலையில் சாந்தமாக காட்சி தரும் வாராஹி அம்மனை வழிபாடு செய்ய வேண்டும்.

பஞ்சமி திதியில் விரதம் இருந்து வாராஹி அம்மனை வழிபடுவதால், எதிர்ப்புகளையெல்லாம் தவிடுபொடியாக்கி, காரியங்களில் வீரியத்தைக் கொடுப்பாள். வெற்றியைத் தந்தருள்வாள்.

இந்தியாவில் வராஹி அம்மனுக்கு இரு இடங்களில் தான் ஆலயம் உள்ளது. ஒன்று காசி, மற்றொன்று தஞ்சாவூர் பெரியகோயிலில் உள்ளது. இங்குள்ள வராஹி அம்மன் மிகவும் சிறப்பு வாய்ந்தவராக உள்ளார். வாராஹி அம்மன் பார்ப்பதற்குத்தான் கரடுமுரடான முகம் கொண்டிருக்கிறாள். ஆனால் உண்மையில் சாந்த நாயகிதான் இவளும்.

இதையும் படியுங்கள்:
சென்னை தீவுத்திடலில் சுற்றுலா பொருட்காட்சி... எப்போ தெரியுமா?
வாராஹி அம்மன்

இன்று வளர்பிறை பஞ்சமி திதியாகும். இன்று விரதம் இருந்து மாலையில் வாராஹி அம்மனை நினைத்து தீபம் ஏற்றி, மாதுளை பழம் வைநேத்தியம் வைத்து வழிபாடு செய்த பின்னர் கோவிலுக்கு சென்று தேங்காயில் நெய் ஊற்றி தீபம் ஏற்றி உங்கள் குறைகளை சொல்லி வழிபாடு செய்ய வேண்டும். வாராஹி அம்மனை இரவு 6 மணிக்கு மேல் வழிபாடு செய்வது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com