விஷ்ணுபதி புண்யகாலம் என்றால் என்ன?

ஸ்ரீ மஹாவிஷ்ணு
ஸ்ரீ மஹாவிஷ்ணு
Published on

உத்திராயண புண்யகாலம், தட்சிணாயன புண்யகாலம் என்பது போல் விஷ்ணுபதி புண்யகாலம் என்று ஒன்றும் இருக்கிறது. இது பரவலாக அறியப்படாத ஒன்று என்றே சொல்லலாம். ஒரு வருடத்தில், வைகாசி 1, ஆவணி 1, கார்த்திகை1 மற்றும் மாசி 1 இந்த நாலு நாட்களும் விஷ்ணுபதி புண்ணிய கால நாட்களாக சொல்லப்பட்டிருக்கின்றன. இந்த நாளில் அதிகாலை 1.30 மணியிலிருந்து 10 மணிக்குள் யார் பெருமாள் கோவிலுக்கு சென்று மஹாவிஷ்ணுவை வழிபாடு செய்கிறார்களோ அவர்களுடைய வாழ்க்கையில் மிகப் பெரிய முன்னேற்றம் என்று சாஸ்திரங்களில் சொல்லப்பட்டிருக்கிறது.

இதை நாம் சரிவர உபயோகப்படுத்தி ஸ்ரீ மஹாவிஷ்ணுவை வழிபாடு செய்தால் பொருளாதாரம் மேம்படும், வாழ்வில் ஏற்பட்டிருக்கும் இன்னல்கள் தீரும்.

காலை 10 மணி வரை விஷ்ணுபதி புண்யகாலம் இருப்பதால் காலையில் சீக்கிரமாகவே கோவிலுக்குச் சென்று 10 மணிக்குள் இந்த வழிபாட்டை செய்து முடித்து விடலாம். இந்த வழிபாட்டை செய்ய ஏதாவது ஒரு குறிப்பிட்ட முறை இருக்கிறதா?

ஆமாம்! கையில் 27 பூக்களை எடுத்துச் செல்ல வேண்டும். எந்த வகையான பூவாக இருந்தாலும் சரி. பெருமாளின் கருவறையை கொடிமரத்தோடு சேர்த்து 27 முறை வலம் வர வேண்டும். அந்த எண்ணிக்கை தவறாமல் இருப்பதற்காகதான் 27 மலர்கள். ஒவ்வொரு சுற்று முடிந்ததும் ஒரு பூவை கொடிமரத்தின் பாதத்தில் போட வேண்டும். பிரதட்சணம் முடித்து பெருமாளுக்கு துளசி மாலை சார்த்தலாம். அர்ச்சனை செய்யலாம்.

இதையும் படியுங்கள்:
வீட்டில் துஷ்டசக்திகளின் நடமாட்டம் தெரிகிறதா? கவலை வேண்டாம்...'தெய்வீக கனி’ இருக்கே!
ஸ்ரீ மஹாவிஷ்ணு

27 முறை பெருமாளை வலம் வரும்போது உங்களுக்குத் தெரிந்த பெருமாள் ஸ்லோகங்களை சொல்லலாம். இல்லாவிடில் வெறுமனே "நாராயணா, நாராயணா!" என்று சொல்லியபடியே கூட பிரதட்சணம் செய்யலாம். வியாபாரத்திலும், செய்யும் வேலையிலும் சீக்கிரம் முன்னேற்றம் அடைய வேண்டும், காரியத் தடை விலக வேண்டும் என்று நினைப்பவர்கள், "ஓம் அனிருத்ரனே நமஹ!" என்று சொல்லி பிரதட்சணம் செய்யலாம்.

வீட்டில் நோய் நொடி பிரச்சினை என்றால், பெருமாளை விஷ்ணுபதி புண்ய காலத்தில் "ஓம் அச்சுதாய நமஹ! ஓம் அனந்தாய நமஹ! ஓம் கேசவாய நமஹ!" என்று துதித்து வழிபடுங்கள். இது எதையும் உச்சரிக்க இயலாதவர்கள் "கோவிந்தா! கோவிந்தா!" என்று சொல்லி பிரதட்சணம் செய்து உங்கள் வேண்டுதலை பெருமாளிடம் சொன்னாலும் நிச்சயம் அது பலிக்கும்.

ஏகாதசி விஷ்ணுவிற்கு எவ்வளவு சிறப்பு வாய்ந்ததோ அதே போல இந்த விஷ்ணுபதி புண்ய காலமும் மிகவும் சிறப்பு பெற்ற புனிதமான நாளாகும். வருடத்திற்கு நான்கு முறை மட்டுமே இந்த விஷ்ணுபதி புண்ய காலம் வருகிறது. இந்த விஷ்ணுபதி புண்யகால வழிபாடு பல ஏகாதசிகளில் வழிபாடு செய்வதற்கு சமம் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

இதையும் படியுங்கள்:
கருப்பு நிற செல்லப்பிராணிகளை வளர்ப்பதால் துஷ்டசக்திகள் நீங்குமா?
ஸ்ரீ மஹாவிஷ்ணு

இது பரவலாக அறியப்படாத ஒரு வழிபாடாகவே இருந்து வருகிறது. வருடத்தில் வரும் நான்கு விஷ்ணுபதி புண்யகாலத்திலும் நாம் தொடர்ந்து பெருமாளை வழிபாடு செய்து வரும்போது பொருளாதாரத்தில் உயர்வு ஏற்படும், செல்வ செழிப்பான வளமான வாழ்க்கை அமையும்.

ஆகவே, விஷ்ணுபதி வழிபாடு செய்து வாழ்வில் எல்லா வளங்களையும் பெறுவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com