
ஏழு குதிரைகள் ஓவியம் வீட்டிற்கு மங்கலகரமானதாகவும், அதிர்ஷ்டகரமானதாகவும் கருதப்படுகிறது. குதிரைகள் உயிர் சக்தியையும் வீரியத்தையும் குறிக்கின்றன. இந்த ஓவியத்தை வீட்டின் உட்புறம் வைப்பது நேர்மறையான சக்தியைத் தருகிறது. குதிரைகள் சாதனை, வலிமை, முன்னேற்றம் மற்றும் அமைதியைக் குறிக்கின்றன.
7 குதிரைகள் ஓவியத்தால் ஒரு இடத்தை அலங்கரிப்பது மிகச் சிறந்தது. மேலும், இது போன்ற ஓவியங்கள் சரியான திசையில் வைக்கப்படும்போது நேர்மறை ஆற்றல்கள் அதிகரிக்கின்றன.
இந்து மதத்தில் ஏழு குதிரைகளுடன் சூரியதேவன் காணப்படுகிறார். சூரிய பகவானின் தேரை இழுக்க குதிரைகள் இருக்கின்றன. இது குதிரை ஓவியத்தின் மங்கலத்தன்மையைக் குறிக்கிறது. மேலும், குதிரைகள் ஓடும் நிலையில் இருப்பதால் வேகத்தையும் முன்னேற்றத்தையும் குறிக்கின்றது.
உங்கள் வீடு மற்றும் அலுவலகத்தில் 7 குதிரை ஓவியம் வைப்பது எதிர்மறை சக்தியைக் குறைக்க உதவும். உங்கள் வீட்டு அறை, அலுவலகம் அல்லது வணிக வளாகத்தில் 7 குதிரைகளின் திசையைக் கருத்தில் கொள்வது முக்கியம். இந்த ஓவியத்தை வைக்க தெற்கு திசையே சிறந்தது. தெற்கு திசையில் சுவர் இல்லையென்றால் வடக்கு அல்லது கிழக்கு திசையில் வைக்கலாம்.
குதிரை ஓவியத்தை தொங்க விடும்போது குதிரையின் முகங்கள் அறை அல்லது அறைக்குள் இருப்பதை உறுதிபடுத்திக் கொள்ளுங்கள். ஓவியம் அறை அல்லது அலுவலக கதவை நோக்கி இருக்கக் கூடாது. ஏனெனில் அது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்.
சூரிய உதயத்தின் பின்னணியில் கூடிய 7 குதிரைகள் ஓவியம் ஃபங்சுழியிலும் முக்கியத்துவம் வாய்ந்தது. சூரிய உதயத்துடன் கூடிய 7 குதிரை ஓவியம் உங்கள் நிதி ஸ்திரத் தன்மையை மேம்படுத்துவோடு, வெற்றியையும் ஈர்க்கும் என்று கருதப்படுகிறது.
சந்திரனை பின்னணியில் கொண்ட 7 குதிரை ஓவியம் அதிர்ஷ்டமாகக் கருதப்படுகிறது. இவை வெற்றி, முன்னேற்றம் மற்றும் அமைதியைக் குறிக்கின்றன.
கடல் பின்னணியில் உள்ள 7 குதிரை ஓவியம் நேர்மறை ஆற்றல்களை விண்வெளியிலிருந்து வரவழைத்து உங்கள் பணி முன்னேற்றத்தை அதிகரிக்கும். அலுவலகம் மற்றும் வீட்டிற்கு இது மிகவும் நல்லது.
ஓவியத்தை வாங்கும்போது குதிரைகளின் முகங்கள் அமைதியான வெளிப்பாடுகள் கொண்டிருப்பதை உறுதிபடுத்தி வாங்குங்கள். ஆக்ரோஷமான பதிவுகள் கொண்டது வேண்டாம்.
குதிரை ஓவியத்தில் வெள்ளை நிறத்தை தேர்வு செய்வது நல்லது. வெள்ளை நிறம் அமைதி, வளர்ச்சி, வெற்றி மற்றும் செழிப்பை ஊக்குவிக்கும். வாஸ்து சாஸ்திரத்தின்படி இந்த ஓவியம் உங்கள் வீட்டிற்கு லட்சுமி தேவியின் ஆசீர்வாதங்களை கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது.