

திரேதாயுகத்தில் மருதவாசிணி என்ற பெண் காட்டில் குடில் அமைத்து வாழ்ந்து வந்தால். அவள் மிகுந்த பேரழகியாகவும் சிகப்பு நிறம் உடையவளாகவும் இருந்தால். அவளுக்கு தாய், தந்தை இல்லாததால் அவள் சூரிய பகவானையே தன் தாய், தந்தையாக கருதி தினமும் வணங்கி வாழ்ந்து வந்தாள்.
சூரிய பகவானுக்கு இரண்டு மனைவிகள் இருந்தனர். முதல் மனைவி “சந்தியா தேவி” இவருக்கு பிறந்த மகன்தான் “எமதர்மன்”. இரண்டாவது மனைவி “சாயாதேவி” இவருக்கு பிறந்த மகன்தான் “சனீஸ்வரன்”. இவர்கள் இருவருமே நீதி தேவர்களாக இருந்து மக்கள் செய்யும் பாவம், புண்ணியத்திற்கு ஏற்ப பலன்களை தருவார்கள்.
எமதர்மனின் மனைவியின் பெயர் “சாமளாதேவி”. சியாமளாதேவி எமதர்மனிடம் ஏற்பட்ட சண்டையின் காரணமாக பூலோகத்தில் மருதவாசிணி இருந்த காட்டிற்கு வந்தார். மிகவும் சோகமாக அமர்ந்திருந்த சியாமளாதேவியைப் பார்த்த மருதவாசிணி அவருக்கு ஆறுதல் கூறி தன்னுடைய குடிலில் தங்க வைத்துக்கொண்டு அவரை பார்த்துக்கொண்டாள்.
தன் மனைவியைப் பிரிந்த துக்கம் தாங்க முடியாமல் எமதர்மன் எமது தூதர்களை அனுப்பித் தன் மனைவியை அழைத்து வருமாறு ஆணையிட்டார். பூலோகத்திற்கு வந்த எமதூதர்களைப் பார்த்த மருதவாசிணி அவர்களது தோற்றத்தைக் கண்டு பயந்து சியாமளாதேவிக்கு ஏதேனும் தீங்கு நேரிடுமோ என்று எண்ணி எமது தூதர்களை அங்கிருந்து விரட்ட முயற்சித்தாள்.
ஆனால் எமதூதர்கள் மருதவாசிணியை வெட்ட அவளுடைய உடம்பிலிருந்து செக்கச் சிவந்த ரத்தம் ஆறாக ஓடியது. மருத வாசிணியின் சத்தத்தை கேட்ட சாம்மளாதேவி வெளியே வந்து பார்த்து அதிர்ச்சி மற்றும் மனவேதனை அடைந்தார்.
எமதர்மனிடம் இவள் என்னை அவளுடைய குடிலில் தங்கச் செய்து அடைக்கலம் கொடுத்தாள். இவளுடைய உயிரை தம்முடைய எமதுதூதர்கள் பறித்துவிட்டனர். மருதவாசிணிக்கு மீண்டும் உயிர் கொடுத்தால்தான் நான் எமலோகத்திற்கு வருவேன் இல்லையேன் இங்கேயே தங்கிவிடுவேன் என்றார்.
எமதர்மரும் உயிரை எடுப்பது மட்டும்தான் எனது பணி என்று கூறினார். வேண்டுமென்றால் இவளுடைய ரத்தத்திலிருந்து ஒரு செடியை நான் உருவாக்குகிறேன் என்றான். அதன்படியே எமதர்மனும் ஒரு மருதாணி செடியை உருவாக்கி நடந்தவைகளுக்கு அதனிடம் மன்னிப்பு கேட்டார்.
தமக்கு என்ன வரம் வேண்டும் என்பதைக் கேட்டான் எமதர்மன். அதற்கு அந்த மருதாணி செடி தன்னை கையில் வைப்பவர்களுக்கு மரணமே ஏற்படக்கூடாது என்ற வரத்தைக்கேட்டது.
அதற்கு எமதர்மன் பூமியில் பிறக்கும் அனைவரும் ஒருநாள் மரணிப்பதுதான் தர்மம் என்பதை கூறினார். வேறு ஏதேனும் வரம் வேண்டுமா கேள் என்றார்.
மருதாணி செடியோ தன்னை வைத்திருப்பவர்களுக்கு “ஆறு நாட்கள்” மரணம் ஏற்படக்கூடாது என்ற வரத்தை கேட்டது. எமதர்மனும் மருதாணி செடிக்கு அந்த வரத்தை அளித்தார்.
சனிபகவானும் மருதாணி வைத்திருப்பவர்களை நான் பிடிக்கமாட்டேன் என்று வரம் அளித்தார். எமதர்மன் மருதாணி செடியிடம் அடுத்த ஜென்மத்தில் உன்னிடம் மகாலட்சுமி வாசம் செய்வாள் என்ற வரத்தையும் அளித்தார்.
இதனால்தான் நம் முன்னோர்கள் விழாக்காலங்களிலும், விசேஷ நாட்களிலும், திருமணம் வீடுகளிலும், மருதாணியை ஒரு நாளுக்கு முன்பே வைத்துக்கொள்வர். மருதாணி அழகு பொருளாகப் பயன்படுத்துவது மட்டுமல்லாமல் உடல் சூட்டைக் குறைப்பதற்கும், சரும நோயை குணப்படுத்துதல், முடி வளர்ச்சிக்கும் உதவுகிறது.
மேலும் மருதாணி வைப்பது பெண்களுக்கு லட்சுமி கடாட்சத்தையும், அழகு மற்றும் சௌந்தர்யத்தையும் தரக்கூடியதாக இருக்கும். செயற்கையாக கிடைக்கும் மருதாணியை போன்றவற்றை பயன்படுத்துவது பல பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். அதனைக் காட்டிலும் இயற்கையாகவே கிடைக்கும் மருதாணி அரைத்து கைகளில் வைப்பது ஆரோக்கியமானதாகவும் உடல் வெப்பத்தைக் குறைக்கவும் உதவுகிறது.