"இது என்ன புதுக் குழப்பமா இருக்கே! இவ்வளவு நாளாகக் காசிக்கு போய்வந்த மக்கள் சொம்பில் கங்கா ஜலம் கொண்டு வந்துள்ளார்களே?" என்று யோசிக்கலாம். அதற்கான பதில் இங்கே.
இந்து மதத்தில், பல்வேறு நதிகளுக்கு வெவ்வேறு அளவிலான மரியாதை அளிக்கப்பட்டாலும், எல்லாவற்றிலும் மிகவும் புனிதமானது கங்கை நதி.
மேலும் எளிமையாகச் சொன்னால், கங்கை நதியிலிருந்து மக்கள் பெறும் கங்காஜலம் புனிதமானது மற்றும் சுத்திகரிக்கும் தன்மையுடையது என்று கருதப்படுகிறது.
இந்த நீர், பாவங்களைக் கழுவி ஆன்மாவைத் - அது உயிருள்ளதாகவோ அல்லது இறந்ததாகவோ இருக்கலாம் - தூய்மைப்படுத்தும் திறன் கொண்டது.
கங்காஜலம் ஆன்மா மோட்சத்தை அடைய உதவும் சக்தி கொண்டது என்றும், வீடு அல்லது ஒரு இடத்தைச் சுற்றி தெளிக்கப்படும்போது, அதில் வசிக்கும் ஆற்றல்களைச் சுத்தப்படுத்தும் என்றும் பலர் நம்புகிறார்கள்.
கங்காஜலம் பல வழிகளில் பயன்படுத்தப்படுகிறது. பக்தர்கள் தங்கள் வீடுகளில் தினசரி பூஜைக்குப் பிறகு சுற்றுச்சூழலை சுத்திகரிக்க இதைத் தெளிப்பார்கள்.
குளிக்கும் நீரில் சிறிது சேர்த்துத் தங்களைத் தூய்மைப்படுத்திக் கொள்வார்கள். கோவிலில் உள்ள தெய்வங்களுக்கு அதை நைவேத்தியம் செய்வார்கள். இன்னும் பல....
இதனுடன், பிறப்பு, திருமணம் மற்றும் குறிப்பாக இறப்பு சடங்குகளிலும் கங்காஜலம் முக்கியமானது. ஆன்மா சொர்க்கத்தை அடைவதையும், பாதுகாப்பான மறுவாழ்வு பெறுவதையும் உறுதி செய்வதற்காக இறந்தவரின் வாயில் கங்காஜலம் ஊற்றுவார்கள்.
காசியிலிருந்து கங்காஜலம்:
உத்தரகண்டிலிருந்து வெகு தொலைவில் காசி உள்ளது. இது உலகின் பழமையான புனித நகரங்களில் ஒன்றாகவும் கருதப்படுகிறது. காசியும் கங்கை நதிக்கரையில் அமைந்துள்ளது. ஆனால் மக்கள் காசியிலிருந்து கங்காஜலத்தை எடுத்துச் செல்வதில்லை.
மணிகர்ணிகா படித்துறையில் இறந்தவர்களை எரிக்க மக்கள் வெகு தொலைவில் இருந்து வருகிறார்கள். ஆனால் அங்கிருந்து கங்காஜலை எடுத்துச் செல்வதில்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறது. ஏன்?
காசியில் உள்ள மணிகர்ணிகா படித்துறை இந்தியாவின் மிகவும் பிரபலமான தகனத் தலங்களில் ஒன்றாகும். இங்குத் தகனம் செய்யப்படுபவர்கள் மோட்சத்தை அடைவார்கள் என்று நம்பப்படுவதால், 24 மணி நேரமும் தகனச் சடங்குகள் செய்யப்படும் இடமாகவும் இது உள்ளது.
ஆனால், தொடர்ச்சியான தகனங்களால் சாம்பல் மற்றும் பிற எச்சங்கள் கங்கை நதியில் விடப்படுகின்றன. இது தண்ணீரை மாசுபடுத்தும் மற்றும் இறந்தவர்களின் சாரத்தை மக்கள் தங்கள் வீட்டிற்கு எடுத்துச் செல்லும் நிலைக்கு வழிவகுக்கும். எனவே, காசியிலிருந்து கங்காஜலை எடுத்து வருவதைத் தவிர்ப்பது நல்லது.
எனவே தான் பெரும்பாலான மக்கள் ஹரித்வாரில் இருந்து கங்கா நீரை பெறுகிறார்கள்.
உத்தரகண்டில் உள்ள ஹரித்வார், இந்து மதத்தின் ஏழு புனிதமான இடங்களில் ஒன்றாகும். கூடுதலாக, ஹரித்வாரில் இருந்து வரும் கங்காஜல் மிகவும் தூய்மையானது மற்றும் பக்திமிக்கது என்று கூறப்படுகிறது.
உண்மையில், கங்காஜலின் பண்புகள் குறித்து ஹரித்வாரில் பல ஆராய்ச்சிகள் செய்யப்பட்டுள்ளன.
எனவே, மக்கள் ஹரித்வாருக்குச் செல்லும் போதெல்லாம், அவர்கள் தங்களுக்காகவும், தங்கள் குடும்பத்தினருக்காகவும் நண்பர்களுக்காகவும் சொம்பு , பிளாஸ்டிக் குடம் மற்றும் பெரிய பாத்திரங்களில் கங்கா ஜலத்தைக் கொண்டு வருகிறார்கள்.
எனவே தான் பெரும்பாலான மக்கள் காசியிலிருந்து கங்காஜலத்தை எடுத்துச் செல்வதில்லை; ஹரித்வாரில் இருந்து கங்காஜலத்தை வீட்டுக்குக் கொண்டு வருகிறார்கள்.
இப்போது சந்தேகம் தீர்ந்து விட்டதா வாசகர்களே!?