மதிய நேரத்தில் கோவில் நடை சாத்தப்படுவது ஏன்? அறிவியலும் ஆன்மிகமும் கூறும் ரகசியங்கள்!

Agama rules temple - கோவில் நடை
Agama rules temple - கோவில் நடைAI Image
Updated on

தெய்வத்தின் ஓய்வு என்பது ஆகம விதிகளின்படி விளக்கங்களில் தெய்வீக சக்தி ஆவாஹனம் செய்யப்படுவதாக கருதப்படுகின்றது. தெய்வத்திற்கு நாள் முழுவதும் பல்வேறு பூஜைகள் செய்யப்படுகின்றன. மதிய வேளையில் உச்சிகால பூஜை முடிந்ததும் தெய்வம் ஓய்வெடுப்பதாகக் கருதி நடை சாற்றப்படுகிறது.

இது நித்ய பூஜையின் ஒரு அங்கமாகும். கோவில் குளிரூட்டப்பட வேண்டும். கருவறையில் உள்ள விக்கிரகங்களும் சிலைகளும் நீண்டநேரம் குளிரூட்டப்பட வேண்டியவை. நடை சாற்றப்பட்டிருக்கும் அந்த சில மணி நேரங்களில் கருவறைக்குள் வெப்பம் தணிந்து தெய்வீக அதிர்வுகள் சீராக இருக்க உதவும் என்று நம்பப்படுகிறது.

கோவில் கருவறைக்குள் ஒரு குறிப்பிட்ட வகை ஆற்றல் (Energy field) நிலவுகிறது. மக்கள் வந்து செல்லும்போது அந்த ஆற்றல் சிதற வாய்ப்புள்ளது. நடை சாற்றப்பட்டிருக்கும் நேரத்தில் அந்த ஆற்றல் மீண்டும் கருவறைக்குள் செறிவூட்டப்படுவதாகவும், இதனால் மாலையில் வரும் பக்தர்களுக்கு அந்த ஆற்றல் முழுமையாக கிடைப்பதாகவும் கூறுகிறார்கள்.

கோவில் பணியாளர்கள், அர்ச்சகர்கள் நீண்டநேரம் பணிபுரிபவர்கள் அவர்கள் ஓய்வுக்காகவும் வரும் கோவிலை சுத்தம் செய்ய குறிப்பிட்ட நேரம் எடுக்கப்படுவது வழக்கம்.‌ மதிய நேரத்தில் சூரிய கதிர்கள் நேராகவும் தீவிரமாகவும் விழும்.

இந்த நேரத்தில் பூமியின் காந்தப்புலம் மாறுபடும்.‌ இந்த மாற்றங்கள் மனிதர்களின் உடல் ஆற்றலையும் பாதிக்கும் என்பதால் இந்த நேரத்தில் கோவில் போன்ற ஆற்றல் மையங்களை தவிர்த்து ஓயவெடுப்பது நல்லது என்று நம் முன்னோர்கள் கூறினர்‌. சுருக்கமாக சொன்னால் கோவில் நடை சாத்தப்படுவது தெய்வத்தை மறைப்பதற்காக அல்ல, அந்த இடத்தின் புனிதத்தையும், தெய்வீக அதிர்வையும் பாதுகாத்து மீண்டும் அதை பக்தர்களுக்கும் பரிபூர்ண மாக கிடைக்கச் செய்வதர்க்குத்தான் நடை சாத்தப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
மாமியார் சண்டை முதல் கிறித்தவப் பூசாரி வரை: தமிழகக் கோயில்களின் 4 அதிரடி விநோத வழிபாடுகள்!
Agama rules temple - கோவில் நடை

நைவேத்தியம் மற்றும் உணவுமுறை மதிய உச்சிகால பூஜையில் தெய்வத்திற்கு படைக்கப்படுகிறது. இந்த நேரத்தில் வெளியில் இருந்து வரும் காற்று அல்லது பக்தர்களின் கூட்டத்தால் ஏற்படும் இடையூறுகள் இல்லாமல் அந்த ஆற்றலை விக்கிரகம் முழுமையாக உள்வாங்க வேண்டும் என்பதற்காகத்தான் நடை சாத்தப்படுகிறது. கருவறை பிராண பிரதிஷ்டை கோவில்களில் உள்ள சிலைகள் வெறும் கற்கள் அல்ல. அவை பிராண பிரதிஷ்டை செய்யப்பட்டவை.

ஒரு உயிரைப் போலவே அதற்குப் பசி தாகம் உறக்கம் மற்றும் களைப்பு ஏற்படுவதாக ஆகம சாஸ்திரங்கள் கூறுகின்றன. எனவே மதியவேளை என்பது தெய்வீக சக்தி புத்துணர்ச்சி பெறும் நேரமாகும் பார்க்கப்படுகிறது. பஞ்சபூதங்களின் சமநிலை கொண்டு கோவில்கள் கட்டப்படுகின்றன. மதிய நேரத்தில் சூரிய வெப்பம் உச்சியில் இருக்கும்போது கோவிலின் உட்புற வெப்ப நிலையை சமநிலைப்படுத்தி பக்தர்களுக்கு பாதிப்பில்லாத வகையில் அந்த அதிர்வலைகளை பாத்துக்கங்க நடை சாத்தப்படுகிறது.

இது கருவறையை ஒருபாதுகாப்பு அறையாக மாற்றுகிறது. மனிதர்களாகிய நமக்கு எப்படி ஆழ்ந்த உறக்கம் உடல் ஆரோக்கியத்திற்கும் தேவையோ அதேபோல் கோவில் ஆன்மிக ஆற்றல்பெற அமைதியான நேரம் அவசியம்.‌ இந்த நேரத்தை மௌன நேரம் என்று சொல்லலாம். இந்த நேரத்தில் கோவிலுக்குச் செல்லாமல் இருப்பது சக்தியை தடையின்றி இயங்க வைக்கும்.

கோவிலின் கருவறை இருட்டாக இருக்கும். மதியவேளையில் கருவறைக்குள் விழும் கோணம் மாறும்போது சிலைகளின் மீது அதன் வீர்யம் அதிகமாகப்படும். சிலைகளின் உலோகத் தன்மை மற்றும் கல் தன்மை மாறாமல் இருக்கவும் நடை சாத்துதல் பாதுகாப்பாக கருதப்படுகிறது. நவீன காலத்தில் பக்தர்களின் வசதிக்காக திறந்திருக்கும் நேரத்தை நீட்டித்தாலும் கருவறையைச் சுற்றி நடைபெறும் உட்புறச் செயல்பாடுகள் கட்டுப்பாட்டுடன்தான் நடக்கிறது.

Agama rules temple - கோவில் நடை
Agama rules temple - கோவில் நடைAI Image

கோவில் என்பது மின் நிலையம் போன்றது. ஒரு மின்சார மாற்றியதில் (Transformer) மின்சாரம் தேக்கமடைந்து பின் சீராக விநியோகிக்கப்படுகிறதோ அதேபோல் கருவறை தெய்வீக ஆற்றல்கள் நடை மாற்றப்படும். அந்த சில மணி நேரங்களில் செறிவூட்டப்படுகிறது. இதனால் மாலை வேளையில் பக்தர்கள் நுழையும்போது அந்த ஆற்றல் அவர்களுக்குத் தீவிரமாக பரவுகின்றது.

நடை மாற்றப்படும்போது அங்கு இருப்பவர் அர்ச்சகர் மட்டுமே. அந்த நேரத்தில் அவர்கள் செய்யும் கைங்கர்யங்கள் ஜெபங்கள் ரகசியமானவை. அதே வெறும் சடங்கல்ல. தெய்வீக சக்தியை உயிர்ப்பிக்கும் மந்திர தந்திர முறைகள். மதிய நேரத்தில் சூரியன் உச்சியில் இருக்கும். இந்த நேரத்தில் காந்தப் புலத்தின் தாக்கம் மாறுபடும் மனித உடலின் ஆற்றலை சக்கரங்கள் சீராக வைத்திருக்க இந்த நேரத்தில் வெளிப்புற செயல்பாடுகளை குறைத்து தியானத்தில் இருப்பது நல்லது.

ஒலியின் அதிர்வுகள் கோவில் கருவறை ஒலியை பிரதிபலிக்கும் விதமாக வடிவமைக்கப்பட்டிருக்கும். பக்தர்கள் இருக்கும்போது உண்டாகும் பூதங்கள் மந்திர அதிர்வுகளை கலைத்துவிடும். நடை சாத்தப்படும்போது ஏற்படும் நிசப்தம் மந்திர ஒலிகள் கருவறைச் சுவர்களில் ஊடுருவி தெய்வீக ஆற்றலைத் தக்கவைக்கும்.

மந்திர சக்தியின் நிலைத்தன்மை குறிப்பிட்ட அதிர்வலைகளை உருவாக்குவதை. மக்கள் அதிகமாக இருக்கும்போது இந்த சக்தி சிதறடிக்கப்படுகிறது. நடை சாற்றப்படும்போது மந்திர அலைகள் கருவறைக்குள் பிரதிபலித்து அந்த இடத்தையே மந்திரக்களமாக மாற்றுகின்றன.

இதையும் படியுங்கள்:
பக்திப் பெருக்குடன் ஜூலை: முக்கிய விசேஷங்கள் மற்றும் முகூர்த்த நாட்கள்...
Agama rules temple - கோவில் நடை

இந்தக் கட்டுரையை வாசிப்பதன் மூலம், நம் முன்னோர்கள் வகுத்த ஆலய வழிபாட்டு முறைகளின் பின்னால் இருக்கும் அறிவியல் மற்றும் பிரபஞ்ச ஆற்றல் கோட்பாடுகளை நீங்கள் துல்லியமாகப் புரிந்து கொள்வீர்கள். இனி நீங்கள் மதிய வேளையில் கோவிலுக்குச் செல்வதைத் தவிர்த்து, மாலை நேரத்தில் முழுமையான தெய்வீக அதிர்வுகளையும், நேர்மறை ஆற்றலையும் உங்கள் உடலிலும் மனதிலும் பரிபூரணமாகப் பெற்றுக்கொள்ளும் ஆன்மிகத் தெளிவை அடைவீர்கள்.

logo
Kalki Online
kalkionline.com