
காக்கை அமர்ந்து
அகத்தியர் கமண்டலம் கவிழ்ந்து
குடமாய் குடகில் பிறந்து
வனம் வனமாய் வலம் வந்து
கிருஷ்ணராஜ சாகர் அணையை அடைகிறாள்
ஸ்ரீரங்கப்பட்டினத்தில் ரங்கநாதரை ஆலிங்கனம் செய்கிறாள்
நுழைகிறாள் தமிழ்நாட்டில் புகுந்த வீட்டில் அடியெடுத்து
நீர்வீழ்ச்சிகளாலால் ஹொகனேக்கலை அலங்கரித்து
நிறுத்த பார்க்கிறார்கள் மேட்டூரில் தடுத்து
முடியவில்லை போகிறாள் பவானி நோக்கி அடுத்து
தொடர்கிறாள் பயணம் பவானியை அணைத்து
வந்ததும் ஈரோடு ஆரம்பிக்கிறது சோதனை
தாங்க வேண்டியதாகிறது சாயப்பட்டறைகள் கழிவினை
கலர் கண்ணீர் சிந்தி நுழைகிறாள் காவேரி கரூரு
ஆக்கியபின் அதை ஒரு கரும்பூரு
பின்பு நுழைகிறாள் சோழ நாடு
வளமாக்க அதன் வயக்காடு
பிறகு கும்பகோணம் காவிரிபூம்பட்டினம்
முடியப்போகுது பொன்னியின் பயணம்
விரித்து கைகள் பால் புடல்
அணைக்கிறாள் வங்கக்கடல்
பூ தூவி வணங்கினால் வருடம் ஒரு முறை போதாது
பார்த்துக்கொள்ளவேண்டும் காவிரி காய்ந்து போகாது
உலகில் ஓடும் ஒவ்வொரு நதியும் புனிதம்
ஸ்நானம் எதில் செய்தாலும் கிடைக்கும் புண்ணியம்
ஆடி பெருக்கை கொண்டாடுவது எதற்கு
நதிகளுக்கும் ஆறுகளுக்கும் நம் நன்றியை தெரிவிப்பதற்கு!