நியூமராலஜியின்படி குறிப்பிட்ட தினங்களில் பிறந்த பெண்கள் இயல்பாகவே கோபக்காரியாக இருப்பார்களாம். அது எந்தெந்த தேதிகள் என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
இந்து மதத்தில் எண் கணிதமும் ஜோதிடத்தின் அடிப்படையில் பார்க்கப்படுகிறது. மக்கள் ஜாதகத்தை எந்த அளவு நம்புகிறார்களோ, அந்த அளவு நியூமராலஜியை பார்க்கிறார்கள். ஒரு செயலைச் செய்வதற்கு முன்பு அந்த நாள் நன்றாக இருக்கிறதா என்று பார்க்கும் மக்கள், இந்த எண் நமக்கு அதிர்ஷ்டமா என்றும் பார்ப்பார்கள். அதுதான் நியூமராலஜி.
எண் கணிதம் என்பது ஒரு பழங்கால நம்பிக்கையாகும். ஒருவர் பிறந்த தேதியை வைத்து அவர்களது ஆளுமை மற்றும் குணத்தைக் கண்டுபிடிக்க முடியுமாம். ஒவ்வொருவர் பிறந்த தினத்தின் கூட்டுத்தொகையைக் கொண்டு அதற்கான எண்கள் கண்டறியப்படுகிறது.
உதாரணமாக, ஒருவரின் பிறந்த நாள் 15 என்று வைத்துக் கொள்வோம். அவரின் பிறந்த நாளின் கூட்டுத்தொகை 6 ஆகும். அப்படி உங்களின் கூட்டுத் தொகை என்னவென்று கணக்கிட்டு வைத்துக் கொள்ளுங்கள். இதுதான் உங்களின் குணத்தை குறிக்கும் என்று எண் கணிதம் கூறுகிறது.
அப்படி இந்தக் குறிப்பிட்ட எண்களில் பிறந்த பெண்கள், தன்னம்பிக்கை எண்ணம் கொண்டவர்களாகவும், அதிக நேரங்களில் கோபமுடையவர்களாகவும் திகழ்வார்கள். அது எந்தெந்த தேதிகள் தெரியுமா?
1 என்ற எண்ணை கூட்டு எண்ணாக கொண்ட 1, 10 மற்றும் 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் அநீதியை, தவறான நடத்தையை பொறுத்துக்கொள்ள முடியாத குணத்தைக் கொண்டிருப்பார்களாம். நீங்கள் எந்த மாதத்திலும் 1, 10 மற்றும் 28 ஆகிய தேதிகளில் பிறந்திருந்தாலும் உங்களுக்கு இது பொருந்தும். இவர்கள் வேலையில் யாராவது தலையிட்டாலோ, சுயமரியாதையை சீண்டினாலோ இவர்களுக்குக் கோபம் பொங்கி வரும். மேலும், இவர்களுக்கு கோபத்தைத் தாண்டி அதிகம் எரிச்சல் அடையும் குணத்தை கொண்டிருப்பார்களாம்.
இந்தக் கூட்டு எண்ணைக் கொண்ட பெண்கள் அதிக சுயமரியாதையுடன் இருப்பார்களாம். கடின உழைப்பு மற்றும் திறமையால் மற்றவர்களை எளிதில் கவரும் தன்மை இவர்களுக்கு உண்டு. எந்த முடிவுகளையும் இவர்களால் துல்லியமாக எடுக்க முடியும் என்று சொல்லப்படுகிறது. தங்களின் வரம்புகளை அறிந்து அதில் உறுதியாக இருந்து செயல்படும் தன்மை கொண்டிருப்பார்கள். இவர்கள் நிச்சயம் நேர்மறையாக செயல்பட்டால் எந்த நிலையிலும் சாதனையை அடையலாம் என எண் கணித ஜோதிடர்கள் கூறுகின்றனர்.
பொறுப்பு துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் நம்பிக்கையின் அடிப்படையில் எழுதப்பட்டவையே ஆகும்.