தலையணை வைத்து தூங்குவது பொதுவாக அனைவருக்குமே பிடித்த ஒன்றுதான். தலையணை பயன்படுத்துவதால் சுகமான தூக்கம் கிடைத்தாலும், தலையணை இன்றி தூங்குவது உடலுக்கு நிறைய ஆரோக்கியப் பலன்களைத் தருகிறது. அவற்றைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
1. தலைவலி: சில நேரங்களில் தூங்கி எழுந்ததும் தலைவலி பிரச்னை இருப்பதை உணர்வீர்கள். இதற்கு முக்கியக் காரணம் தலையணை பயன்படுத்துவதுதான். மிருதுவான தலையணையில் படுத்து உறங்குவது தலைக்கு செல்லும் இரத்த ஓட்டத்தை குறைத்து ஆக்ஸிஜன் செல்வதையும் குறைக்கிறது. இதுவே காலை எழுந்ததும் தலைவலி ஏற்படக் காரணம். இதை தவிர்க்க தலையணை பயன்படுத்தாமல் இருப்பது தலைக்கு செல்லும் இரத்த ஓட்டத்தை சீராக்கி தலைவலியை சரிசெய்யும்.
2. ஸ்ட்ரெஸ்: தலையணை பயன்படுத்தும்போது சிலருக்கு சரியான பொசிஷனில் தூங்குவது கடினமாக இருக்கும். இதனால் இரவு சரியாக தூக்கம் வராமல் மாறி மாறிப் படுப்பது ஸ்ட்ரெஸ்ஸை ஏற்படுத்தும். தலையணை இல்லாமல் தூங்கும்போது எந்தத் தொந்தரவும் இன்றி தூங்கலாம். இதனால், இரவு நல்ல தூக்கம் கிடைக்கும். உடலில் ஸ்ட்ரெஸ் குறைந்து அடுத்த நாள் புத்துணர்ச்சியாக எழுந்திருக்க உதவும்.
3. முதுகுவலி: முதுகுவலி போன்ற பிரச்னை வராமல் தடுக்க தலையணை இல்லாமல் தூங்குவது நல்லது. நாம் தூங்குவதற்கு தலையணை சரியான Support ஐ தராமல் இருப்பதால், கழுத்து வலி போன்ற பிரச்னைகள் ஏற்படுகிறது. தலையணை பயன்படுத்தாமல் இருக்கும்போது நம்முடைய தலை இயற்கையான Positionல் இருப்பதால் Nerve damage, muscle strain போன்ற பிரச்னைகள் சரியாகும். மிருதுவான தலையணை நம் கழுத்துக்கு செல்லும் இரத்த ஓட்டத்தை குறைக்கிறது. எனவே, தலையணை பயன்படுத்தாமல் தூங்குவது கழுத்து வலி மற்றும் முதுகு வலியை குணமாக்கும்.
4. முகப்பருக்கள்: முகத்தில் பருக்கள் வருவதைத் தடுக்க தலையணை பயன்படுத்தாமல் இருந்தால் போதுமானதாகும். தலையணையின் மேற்புறத்தில் அழுக்கு, வியர்வை, தூசி, எச்சில் என்று படிந்திருக்கும். அதை அடிக்கடி துவைக்காமல் பயன்படுத்துவதால் அதிலிருக்கும் பாக்டீரியா போன்ற கிருமிகள் நோய்த்தொற்றை ஏற்படுத்தி முகத்தில் பருக்கள் அதிகமாக வரக் காரணமாக இருக்கிறது. இதை தடுக்க தலையணையை தவிர்த்து விடுவது சிறந்ததாகும். எனவே, நல்ல நிம்மதியான தூங்கம் மற்றும் புத்துணர்ச்சியாக இருக்க வேண்டும் என்றால், தலையணை இன்றி தூங்கப் பழகுவது நன்மை பயக்கும்.