பைரவர் வழிபாடு: எந்த நாளில் வழிபட்டால் என்னென்ன பலன்கள் கிடைக்கும்?

Worship of Shri Bhairava
Sri Bhairavar
Published on

பைரவர் சிவபெருமானின் அறுபத்து நான்கு திருமேனிகளில் ஒன்றாவார். பைரவரின் வாகனமாக நாய் உள்ளது. ஆதலால், நாய்களை பைரவரின் மறு உருவம் என்றும் சொல்வதுண்டு. பைரவரை சொர்ணாகர்ஷண பைரவர், யோக பைரவர், ஆதி பைரவர், கால பைரவர், உக்ர பைரவர் என்றெல்லாம் பல்வேறு பெயர்களில் அழைக்கின்றார்கள். இதில் கால பைரவர் சிவபெருமானின் ருத்ர ரூபம் ஆவார். இவர் சிவன் கோயில்களில் வடகிழக்குப் பகுதியில் நின்றவாறு காட்சியளிப்பார்.

பைரவருக்கு நாம் மேற்கொள்ளும் ஒவ்வொரு வழிபாட்டிற்கும் வெவ்வேறு தனித்தன்மை வாய்ந்த பலன்கள் கிடைக்கும். பைரவரை எந்தெந்த கிழமையில் வழிபட்டால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை இந்தப் பதிவில் காண்போம்.

இதையும் படியுங்கள்:
கடவுள் நம்பிக்கை என்பது எப்படி இருக்க வேண்டும் தெரியுமா?
Worship of Shri Bhairava

ஞாயிற்றுக்கிழமை: ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ராகு காலத்தில் பைரவருக்கு வடை மாலை சாத்தி, ருத்ராபிஷேகம் செய்து வழிபட்டால் திருமணத் தடை விலகி, விரைவில் திருமணம் நடைபெறும். மேலும், கடன் சுமையால் அவதிப்பட்டு வருபவர்களின் கடன் தொல்லைகள் நீங்கும். மேலும், இந்தக் கிழமையில் பைரவருக்கு புனுகு சாத்தி, முந்திரி மாலை அணிவித்து வழிபட்டு வந்தால் மேலும் பல நன்மைகள் நடக்கும். பைரவப் பெருமானை சிம்ம ராசிக்காரர்கள் இந்த தினத்தில் வழிபடுவது மிகச் சிறப்பாகும்.

திங்கட்கிழமை: திங்கட்கிழமையன்று வில்வ இலைகள் கொண்டு பைரவருக்கு அர்ச்சனை செய்து வழிபட, சிவபெருமான் அருள் கிட்டும். சங்கடஹர சதுர்த்தியன்று பைரவருக்கு பன்னீர் அபிஷேகம் செய்து, சந்தனக் காப்பு மற்றும் புனுகு சாத்தி வழிபட்டு வந்தால் கண் பார்வை சம்பந்தப்பட்ட நோய்கள் நீங்கும். கடக ராசிக்காரர்கள் இன்று பைரவரை வழிபடுவது மிகச் சிறப்பாகும்.

செவ்வாய்க்கிழமை: செவ்வாய்க்கிழமையன்று மாலை வேளையில் பைரவருக்கு மிளகு தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் இழந்த செல்வம் அனைத்தும் திரும்பக் கிடைக்கும். இந்த நாளில் மேஷம் மற்றும் விருச்சிக ராசிக்காரர்கள் வழிபட உகந்த தினமாகும்.

இதையும் படியுங்கள்:
ராதா அஷ்டமி: செல்வமும் மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையும் பெற இதைச் செய்யுங்கள்!
Worship of Shri Bhairava

புதன்கிழமை: புதன்கிழமையன்று பைரவருக்கு நெய் தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் பூமி, நிலம் சம்பந்தப்பட்ட லாபங்கள் கிடைக்கும். மிதுனம், கன்னி ராசிக்காரர்கள் இந்த கிழமையில் பைரவரை வழிபடுவது சிறப்பாகும்.

வியாழக்கிழமை: ஒவ்வொரு வியாழக்கிழமைகளிலும் பைரவருக்கு மனமுருகி விளக்கேற்றி வழிபட்டு வந்தால் ஏவல், பில்லி, சூனியம் பாதிப்புகளிலிருந்து விடுபடலாம். இந்தக் கிழமையில் தனுசு, மீன ராசிக்காரர்கள் வழிபடுவது சிறப்பு.

வெள்ளிக்கிழமை: வெள்ளிக்கிழமை மாலை நேரங்களில் பைரவருக்கு வில்வ இலைகள் கொண்டு அர்ச்சனை செய்து வழிபட்டு வந்தால் செல்வ வளம் பெருகி, சகல ஐஸ்வர்யமும் கிட்டும். ரிஷபம், துலாம் ராசிக்காரர்கள் இந்த கிழமையில் பைரவரை வழிபடுவது சிறப்பு.

சனிக்கிழமை: சனி பகவானின் குருவான பைரவரை சனிக்கிழமையில் பிரத்யேகமாக வழிபடுவதால் அஷ்டம சனி, ஏழரைச் சனி, அர்த்தாஷ்டம சனி போன்ற சனி பகவானின் தாக்கங்களிலிருந்து விடுபட்டு நன்மைகள் அடையலாம். இந்தக் கிழமையில் மகரம், கும்ப ராசிக்காரர்கள் வழிபடுவது மிகச் சிறப்பாகும். மேற்கண்ட நாட்களில் பைரவரை வணங்கி வந்தால் சகல ஐஸ்வர்யங்களும் கிட்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com