நம்முடைய பிறந்த மாதத்தை வைத்து நமது குணம் எந்த கடவுளின் குணத்தோடு ஒத்திருக்கும் என்பதை தெரிந்துக் கொள்ளலாம். அதைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
1. January: ஜனவரி மாதத்தில் பிறந்தவர்கள் விநாயகரின் அம்சம் பெற்றவர்கள். புத்திக்கூர்மை உள்ளவர்களாகவும், தலைமை குணம் கொண்டவர்களாகவும் இருப்பீர்கள். புதியவற்றை உருவாக்கும் திறன் கொண்டர்கள். எடுத்த காரியத்தை எப்படியாவது நிறைவேற்றிவிடும் ஆற்றல் பெற்றவர்கள்.
2. February: பிப்ரவரி மாதம் பிறந்தவர்கள் குபேரரின் அம்சம் பெற்றவர்கள். செல்வம், செல்வாக்கு அதிகம் உள்ளவராகவும், எளிமையாகவும் மிகவும் பண்பாகவும் நடந்துக் கொள்ளக் கூடியவர்கள். மிகவும் உணர்வுப்பூர்வமாக இருப்பீர்கள். அன்புக்காக எதையும் செய்யக்கூடியவர்கள். அன்பு வைத்தவர்களுக்காக அடிமையாகவே இருக்கக்கூடிய குணத்தை கொண்டவர்கள். நீங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலியாகவும், மேன்மையான எண்ணம் கொண்டவராகவும் இருப்பீர்கள். உலகத்தை சுற்றிப் பார்க்க வேண்டும் என்ற எண்ணமும், நகைச்சுவை உணர்வும் உங்களுக்கு அதிகமாக இருக்கும்.
3. March: மார்ச் மாதம் பிறந்தவர்கள் முருகப்பெருமானின் அருளைப் பெற்றவர்களாக இருப்பீர்கள். உங்களிடம் வேகம், கருணை, விவேகம் அதிகமாக இருக்கும். மிகவும் குறும்புத்தனமாவும், புத்திசாலியாகவும் இருப்பீர்கள். எந்த விஷயத்தையும் பிளான் பண்ணித்தான் செய்வீர்கள். புகழின் உச்சியில் அமரக்கூடிய வாய்ப்பு அதிகம் உண்டு. பணம் சம்பாதிப்பதில் வல்லவர்கள்.
4. April: ஏப்ரல் மாதத்தில் பிறந்தவர்கள் நாரதரின் குணம் கொண்டவர்கள். நீங்கள் பேச்சுத்திறமை அதிகம் கொண்டவர்கள். பேசியே எதையும் சாதிக்கக் கூடியவராக இருப்பீர்கள். தன்னையும் தன்னைச் சார்ந்தவர்கள் மீதும் மிகவும் அக்கறையாக இருப்பீர்கள். நீங்கள் மிகவும் வலிமையானவராகவும் இருப்பீர்கள். பிடிவாதத்தன்மை அதிகம் உண்டு. அடுத்தவர்களுக்குக் கட்டளை போடும் இடத்தில் இருப்பீர்கள். புத்திக்கூர்மை அதிகமாகவும் புதிதாக யோசிக்கும் வல்லமையும் உண்டு.
5. May: மே மாதம் பிறந்தவர்கள் பார்வதி தேவியின் அம்சத்தை பெற்றவர்கள். கருணை, மகிழ்ச்சி, சந்தோஷம் நீங்கள் இருக்கும் இடத்தில் இருக்கும். அதிக காதல் உணர்வுக்கொண்டவர்கள். எதார்த்தமான வாழ்க்கை வாழ ஆசைப்படுபவர்கள். நீங்கள் மிகவும் கலகலப்பாக இருக்கக்கூடியவர். எந்த துறையில் கை வைத்தாலும் வெற்றிப் பெறுபவராக இருப்பீர்கள்.
6. June: ஜூன் மாதத்தில் பிறந்தவர்கள் மகாலக்ஷ்மியின் அம்சத்தைக் கொண்டவர்கள். நீங்கள் இருக்கும் இடத்தில் செல்வமும், செல்வாக்கும் அதிகமாக இருக்கும். உங்களுக்கு எந்த விஷயத்தையும் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அதிகம் இருக்கும். பொறாமை குணம் கொண்டவராக இருப்பீர்கள். தன்னம்பிக்கை சற்று குறைவாக இருக்கும். நீங்கள் மிகவும் தைரியசாலியாகவும், எளிதில் உணர்ச்சி வசப்படக்கூடியவராக இருப்பீர்கள்.
7. July: நீங்கள் ஜூலை மாதம் பிறந்தவராக இருந்தால், சூரிய பகவானின் அம்சம் பெற்றவராக இருப்பீர்கள். அனைவரையும் வசீகரிக்கும் அழகையும், ஆளுமைத் தன்மையையும் கொண்டிருப்பீர்கள். உங்களை யாரும் எளிதாக புரிந்துக்கொள்ள முடியாது. மிகவும் ரகசியமானவராக இருப்பீர்கள். எந்த வேலையை எடுத்தாலும் கடினமாக உழைப்பீர்கள். நேர்மையான குணம் கொண்டவர்கள். மற்றவர்கள் தவறை மன்னித்து ஏற்றுக்கொள்ளும் குணம் கொண்டவர்கள். அடுத்தவர்கள் உணர்வை மதிப்பவர்கள்.
8. August: நீங்கள் ஆகஸ்ட் மாதம் பிறந்தவராக இருந்தால், துர்கை அம்மனின் அம்சத்தை பெற்றவராக இருப்பீர்கள். உங்கள் வாழ்க்கையில் பயம் என்பதே கிடையாது. எதற்கும் தைரியமாகவும், தெளிவாகவும் போராடக்கூடியவர்கள். மிகவும் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். உறுதியான முடிவுகளை எடுக்கக்கூடியவர்கள்.
9. September: செப்டம்பர் மாதம் பிறந்தவர்கள் அனுமனின் அம்சம் கொண்டவர்கள். உண்மைக்கும், நேர்மைக்கும், விசுவாசத்திற்கும் பெயர் போனவர்கள். மன வலிமையும், உடல் வலிமையும் கொண்டவர்கள். ஆளுமைத்திறன், புத்திக்கூர்மை அதிகமாக இருக்கும். விட்டுக்கொடுக்கும் குணம் அதிகம் உண்டு. எதிலும் வெற்றிக்கொடி நாட்ட விரும்புபவர்கள்.
10. October: அக்டோபர் மாதத்தில் பிறந்தவர்கள் கிருஷ்ண பகவான் அம்சம் கொண்டவர்கள். அன்பு, பாசம், காதல், லீலைகள், பெண்கள் போன்ற விஷயங்களில் கைத்தேர்ந்தவர்களாக இருப்பீர்கள். மற்றவர்களிடம் நட்பாக பழகுவீர்கள். எல்லாவற்றிலும் அப்டேட்டடாக இருப்பீர்கள். சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் அதிகமாக இருக்கும். விவாதம் செய்வதில் தலைசிறந்தவராக இருப்பீர்கள்.
11. November: நவம்பர் மாதத்தில் பிறந்தவர்கள் கும்பகர்ணணின் குணம் பெற்றவர்கள். நீங்கள் மிகவும் உணர்வுபூர்வமாக இருப்பீர்கள். அமைதியையும், தனிமையையும் அதிகம் விரும்புவீர்கள். நேர்மையாகவும், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை அதிகமாகவும் கொண்டவர்கள். நன்றாக யோசித்து முடிவெடுக்கக் கூடியவர்கள்.
12. December: டிசம்பர் மாதத்தில் பிறந்தவர்கள் சிவபெருமானின் அம்சம் பெற்றவர்கள். கோபம், எளிமை, அமைதி, உறுதி இதுபோன்ற விஷயங்கள் நிறைந்திருக்கும். தன்னம்பிக்கை மற்றும் சுதந்திரமாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் அதிகமாக இருக்கும். நீங்கள் எதார்த்தமாக யோசிக்கக்கூடியவர்கள். பொறுப்புகள் குறித்து கவனக்குறைவாக இருப்பீர்கள். அளவுக்கு அதிகமாக தன்னம்பிக்கை கொண்டவர்கள்.