பிறப்பிலேயே குலதெய்வ அருள் இருக்கக்கூடிய ராசிகள்!

Kula deivam rasigal
Kula deivam
Published on

குலதெய்வம் என்பது நம் குலத்தையும், நம்மையும் காக்கக்கூடிய தெய்வமாகும். வருடத்திற்கு ஒருமுறையாவது குலதெய்வ வழிப்பாடு செய்ய வேண்டியது அவசியமாகும். அவ்வாறு குலதெய்வ வழிப்பாடு செய்யவில்லை என்றால் நம் வாழ்வில் முன்னேறுவதற்கு பல்வேறு விதமான தடைகளும், பிரச்னைகளும் ஏற்படும். 

சில நேரங்களில் நாம் செய்கின்ற வேலையில் பல்வேறு விதமான பிரச்னைகளும், தடைகளும் வரும். வீட்டில் காரணமேயில்லாமல் சண்டை சச்சரவுகள் ஏற்படும். குடும்பத்தில் ஒருவருக்கொருவர் மாறிமாறி நோய் வரும். இதற்கு காரணம் குலதெய்வத்தின் கோபம் ஏற்பட்டதாக அர்த்தம். இதற்கு நாம் குலதெய்வ வழிப்பாடு செய்யாதது தான் காரணமாகும். குலதெய் வழிப்பாட்டை தவறாமல் செய்து வந்தால் நிம்மதி, அமைதி, ஆரோக்கியம், தொழில் வளர்ச்சி ஏற்படும்.

சில குலதெய்வம் கோவில் பஞ்சபூதத்துடன் தொடர்புடையதாக இருக்கும். சில கோவில்கள் ஆறு, குளம் போன்ற நீர்நிலை அருகில் அமைந்திருக்கும். இன்னும் சில கோவில்களில் தீச்சட்டி போன்று நெருப்பு சம்மந்தமான விஷயங்களை செய்வார்கள். சில கோவில்கள் மலை மீது அமைந்திருக்கும் முருகன், அம்மன் கோவில் இருக்கும். இதுப்போல உங்கள் குலதெய்வம் எந்த பஞ்ச பூதத்துடன் தொடர்புடையது என்று கவனியுங்கள்.

ராசிகளில் நீர் ராசி, நெருப்பு ராசி, காற்று ராசி, நிலம் ராசி என்று நான்கு வகையாக பிரிக்கப்படுகிறது. நீர் ராசியாக விருச்சிகம், கடகம், மீனம் சொல்லப்படுகிறது. நெருப்பு ராசி மேஷம், சிம்மம், தனுசு சொல்லப்படுகிறது. காற்று ராசியாக மிதுனம், துலாம், கும்பம் சொல்லப்படுகிறது. நிலம் ராசியாக ரிஷபம், கன்னி, மகரம் சொல்லப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
குலதெய்வம் கோபமாக இருப்பதை காட்டும் அறிகுறிகள்!
Kula deivam rasigal

குலதெய்வம் என்பது ஆண் குலதெய்வம் அல்லது பெண் குலதெய்வமாக இருக்கலாம். அதுப்போலவே ராசியிலும் ஆண் ராசி, பெண் ராசி என்று இருக்கிறது. நீங்கள் வழிப்படும் குலதெய்வம் ஆண் குலதெய்வமாக இருந்து நீங்கள் ஆண் ராசியில் பிறந்திருந்தால், குலதெய்வத்தின் அம்சத்தில் பிறந்தவர் என்று சொல்லலாம்.

ஆண் ராசிக்கு உரிய ராசிகள் மேஷம், சிம்மன், மிதுனம், துலாம், தனுசு, கும்பம் ஆகியவையாகும். இந்த ராசிக்குடைய குலதெய்வம் ஆண் குலதெய்வமாக இருந்தால், நீங்கள் குலதெய்வத்தின் அம்சத்தில் பிறந்தவர்கள்.

இதையும் படியுங்கள்:
குலதெய்வம் கோவில் மண்ணை வீட்டில் வைப்பதால் கிடைக்கும் அதிர்ஷ்டம்!
Kula deivam rasigal

பெண் ராசிக்கான ராசிகள் ரிஷபம், கடகம், மகரம், விருச்சிகம், மீனம், கன்னி ஆகியவையாகும். இந்த ராசியின் பிறந்தவர்களின் குலதெய்வம் பெண்ணாக இருந்தால், நீங்கள் குலதெய்வத்தின் அம்சத்தில் பிறந்தவர் என்று அர்த்தம். இதுப்போன்ற நபர்களுக்கு குலதெய்வத்தின் ஆசிர்வாதம் முழுமையாக கிடைக்கும். இவர்கள் செய்யக்கூடிய காரியம் முழுமையாக வெற்றிப்பெறும் என்று சொல்லப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com