
உத்தரகண்ட் மாநிலத்தின் உயரமான மலைகளில் அமைந்துள்ள 12 ஜோதிர்லிங்கங்களில் ஒன்றான கேதார்நாத் பயணம் ஒரு தெய்வீக அனுபவமாகும். ஆறு மாத கோவில் அடைப்புக்கு பின் நடை திறக்கப்பட்டு சார்தாம் யாத்திரை தொடங்கப்பட்டுள்ளது. இந்த மலையேற்றத்தின் போது எடுத்துச் செல்ல வேண்டிய 10 பொருட்கள் குறித்து இப்பதிவில் காண்போம்.
1. குளிர்கால ஆடைகள்
கேதார்நாத்தின் உயரத்தில் காலை மற்றும் இரவு நேரங்களில் வெப்பநிலை மிகவும் குளிரானதாக இருக்கும் என்பதால் குளிரை தாங்கக்கூடிய ஆடைகளான ஜாக்கெட்டுகள், கம்பளி ஆடைகள், கையுறைகள் மற்றும் சாக்ஸ் ஆகியவற்றை வைத்திருக்க வேண்டும்.
2. குடை
கேதார்நாத் மலைகளால் சூழப்பட்ட பள்ளத்தாக்கு போன்ற இடத்தில் இருப்பதால் எந்த நேரத்திலும் மழையை எதிர்பார்க்கலாம். எப்போதும் ஒரு குடையை வைத்திருக்க வேண்டும் .
3. மழையைத் தவிர்க்க ரெயின்கோட்
திடீரென மழை பெய்யும் போது எந்தத் தொந்தரவும் இல்லாமல் பயணத்தை மேற்கொள்ள நீர்ப் புகாத மழைக்கோட்டை உடன் எடுத்துச் செல்ல வேண்டும்.
4. மலையேற்ற காலணிகள் மற்றும் கைத்தடி
பல கிலோமீட்டர் கேதார்நாத் யாத்திரையின் போது நடக்க வேண்டும் என்பதால் கால்களுக்கு பாதுகாப்பாகவும், நடப்பதற்கு வசதியாக இருக்கும் மலையேற்ற காலணிகளை உடன் எடுத்துச் செல்லுங்கள். மலையேற உதவும் கைத்தடியும் கைவசம் இருக்கட்டும்.
5. மருத்துவப் பெட்டி, முதலுதவி கிட்
மலைப்பிரதேசமாக இருப்பதால் உயரப் பிரச்னையின் காரணமாக பயணத்தின் போது சோர்வு, தலைவலி, காயம் ஏற்படலாம். உங்கள் பையில் எப்போதும் அடிப்படை மருந்துகள், கட்டுகள், வலி நிவாரணிகள் மற்றும் கிருமி நாசினி கிரீம் ஆகியவற்றை வைத்திருக்க வேண்டும்.
6. தண்ணீர் பாட்டில் மற்றும் சிற்றுண்டி
அதிக உயரங்களில் உடலின் ஆற்றலைப் பராமரித்து, சக்தியை அப்படியே வைத்திருக்க பையில் ஒரு தண்ணீர் பாட்டில், உலர் பழங்கள், சாக்லேட்டுகள் மற்றும் லேசான சிற்றுண்டிகளை வைத்திருப்பது அவசியம். ஏனெனில் வழியில் மேகி, பரோட்டா மற்றும் தேநீர் மட்டுமே கிடைக்கும்.
7. டார்ச்லைட் மற்றும் பவர் பேங்க்
உயரமான பகுதிகளிலும், குளிரான வானிலையிலும் பேட்டரி விரைவாக தீர்ந்து போகும் என்பதால், மொபைலுக்கு ஒரு டார்ச் லைட் பவர் பேங்க் எடுத்துச் செல்ல வேண்டும் .
8. பயண ஆவணங்கள் மற்றும் அடையாள அட்டை
ஹோட்டல் முன்பதிவுகள் மற்றும் பயண அனுமதிகளுக்கு பயணத்தின் போது ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம் அல்லது வேறு ஏதேனும் அடையாளச் சான்று ஆவணங்களை எடுத்துச் செல்லுங்கள்.
9. சூரிய ஒளியைத் தவிர்க்க சன்ஸ்கிரீன் மற்றும் கண்ணாடிகள்
கடுமையான சூரியக் கதிர்களில் இருந்து உங்கள் சருமத்தைப் பாதுகாக்க, UV பாதுகாப்புடன் கூடிய சன்ஸ்கிரீன் மற்றும் சன்கிளாஸ்களை எடுத்துச் செல்லுங்கள்.
10. சுத்தமான கற்பூரம்
மலையேற்றத்தின் போது சிக்கல் ஏதேனும் ஏற்பட்டால் கற்பூர வாசனையை உணர்வதன் மூலம் பயணத்தை எளிதாக்க முடியும் என்பதால் சுத்தமான கற்பூரத்தை உடன் எடுத்துச் செல்லுங்கள் .
கேதார்நாத் செல்ல உத்தரகண்ட் அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ போர்ட்டலை பார்வையிடுவதோடு ஹெலிகாப்டர் முன்பதிவு சேவைக்கு ஐ ஆர் சி டி சி யின் heliyatra.irctc.co.in சென்று கிளிக் செய்து பயணத்தை எளிதாக்கி கொள்ளுங்கள்.