ரயில் பயண அனுபவம் எப்போதுமே சுகமானது. அதிலும் இயற்கை காட்சிகளை ரசித்துக்கொண்டே செல்வதை அனைவரும் விரும்புவர். அந்த வகையில் உலகின் மிகச்சிறந்த குழந்தைகள் குதூகலமாக பயணிப்பதற்கான 10 ரயில்கள் குறித்து இப்பதிவில் காண்போம்.
1.கம்போடியாவின் மூங்கில் ரயில்
கம்போடியா நாட்டில் பிரபலமான மற்றும் பழமையான திறந்த வெளி மூங்கில் ரயிலில், பயணிக்கும்போது அது கொடுக்கும் அனுபவம் அலாதியானது. கிராமப்புறங்கள் வழியாக செல்லும்போது மனதை கொள்ளை கொள்வதோடு, வேடிக்கை நிறைந்த திரில்லான பயணத்தை இந்தரயில் உங்களுக்கும் குழந்தைகளுக்கும் கொடுக்கும்.
2.மாத்தேரான் பொம்மை ரயில்
இந்தியாவின். மகாராஷ்டிரா மாநிலத்தில் மலைப்பகுதியில் இயங்கும் மாத்தேரான் பொம்மை ரயில், குறுகலான ரயில் பாதை, இயற்கை எழில் சூழ்ந்த வனப்பகுதி, பள்ளத்தாக்குகள் வழியாக செல்லும்போது ஏற்படும் பயண அனுபவத்தை விவரிக்க இயலாது.
3.அர்ஜென்டினாவின் மேகக்கூட்ட ரயில்
அர்ஜென்டினாவில் 4000 மீட்டர் உயரத்தில் உள்ள இந்த மலைப்பாதை சிறந்த பொறியியல் அற்புதமாக உள்ளது. ஏனெனில் மிக உயர்ந்த மலைப்பகுதியில் சுரங்கங்கள் வழியாக வளைந்து நெளிந்து செல்வதோடு மேகக்கூட்டத்திற்கு ஊடாக செல்வதால், இதற்கு மேகத்திற்குள் செல்லும் ரயில் என்றும் செல்லப் பெயர் உண்டு.
4.கிளேசியர் எக்ஸ்பிரஸ்
உயர்ந்த பனிச் சிகரங்கள், பசும்புல் வெளிகள், அழகான கிராமங்கள் மற்றும் இயற்கை எழில் சூழ்ந்த பகுதிகள் வழியாக சுவிட்சர்லாந்தில் உள்ள கிளேசியர் எக்ஸ்பிரஸ் ரயில் செல்வது பார்ப்பதற்கு கண் கொள்ளாக் காட்சியாக இருப்பதோடு, மாயாஜால அனுபவத்தை குழந்தைகளுக்கு கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.
5.டெத் ரயில்வே
தாய்லாந்து நாட்டில் உள்ள டெத் ரயில் பாதை அடர்ந்த வனப்பகுதிகள் வழியாகவும், உயர்ந்த மலை சிகரங்கள் வழியாகவும் செல்வது குழந்தைகளுக்கு திரில்லான ஒரு பயணத்தையும் அனுபவத்தையும் கொடுக்கும். டெத் ரயில்என்ற பெயர் இருந்தாலும் கூட தைரியமாக செல்லலாம்.
6.பாம்பன் ரயில்
தமிழ்நாட்டின் பாம்பன் மற்றும் ராமேஸ்வரம் தீவை இணைக்கக் கூடிய கடல் ரயில் பாலம்தான் பாம்பன் ரயில். கடல் பாலத்தின் மீது ரயில் செல்லும் போது பார்க்கவே சூப்பராக இருப்பதோடு குழந்தைகளுக்கு சாகச உணர்வையும் கொடுக்கும்.
7.மேக்கலாங் மார்க்கெட்
தாய்லாந்து நாட்டில் உள்ள மேக்கலாங் மார்க்கெட் ரயில் பாதை ஒருபுறம் மார்க்கெட், மறுபக்கம் மக்கள் நடமாட்டம். வழியாக செல்லும்போது அலாதியான ஒரு இன்ப அனுபவத்தை குழந்தைகளுக்கு கொடுப்பதோடு கலாச்சார ரீதியாகவும் முக்கியத்துவம் பெறுகிறது.
8.கான் ரயில்
ஆஸ்திரேலியாலில் உள்ள கான் ரயில் பாதையானது பாலைவனங்கள், மலைகள், ஆறுகள் வழியாக நீண்ட தூரம் செல்வதால் இதன் பயணம் மிகச்சிறந்த அனுபவத்தை குழந்தைகளுக்கு கொடுக்கும்.
9.டெவில்ஸ் நோஸ் ரயில், ஈகுவடார்
ஈகுவடார் நாட்டில் பிரபலமான இந்த ரயில் பாதை பல்வேறு வளைவுகளுடன் மிக உயரமான மலை சிகரங்கள் வழியாக ஆண்டிஸ் மலைத்தொடரின் அழகை ரசித்தபடி செல்வது த்ரில்லிங்கான அனுபவத்தை குழந்தைகளுக்கு கொடுக்கும் மிகச் சிறந்த ரயிலாகும்.
10.ஸ்னோ காரிடார் ரயில்
ஜப்பான் நாட்டில் உள்ள ஸ்னோ காரிடார் ரயில் அல்பைன் ரூட் பகுதியில், பனி படர்ந்த சாலைகள், மரங்கள் வழியாக செல்லும் போது ஜில்ஜில் உணர்வை ஏற்படுத்துவதால் மீண்டும் பயணிக்கும் அனுபவத்தை கொடுக்கும் அற்புதமான ரயிலாக இருக்கிறது .
மேற்கூறிய ரயில்கள் அனைத்தும் மிகச்சிறந்த அனுபவத்தை வழங்கும் என்பதில் சந்தேகமே இல்லை.