
சென்னையில் உள்ளவர்கள் வார இறுதியில் ஒரு நாளில் சென்று வரக்கூடிய அளவுக்கு ஏகப்பட்ட நீர்வீழ்சிகள் உள்ளன. சென்னைவாசிகள் வரும் கோடையில் ஊட்டி கொடைக்கானல் போன்ற மலைவாச ஸ்தலங்களுக்கு செல்ல முடியை வில்லையா? சென்னைக்கு பக்கத்தில் உள்ள இந்த நீர் வீழ்ச்சிக்கு செல்லுங்கள்.
தடா நீர் வீழ்ச்சி
சென்னையில் இருந்து 95 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது இந்த நீர்வீழ்ச்சி. இங்கு ட்ரெக்கிங் செய்வது மிகவும் ஃபேமஸ் மொத்தம் மலையேற்றம் கிட்டத்தட்ட 10 கிலோமீட்டர் தூரம். வழியில் பல குளங்கள் சுற்றிலும் நல்ல பசுமை பொறுமையுடன் காட்சிகள் யாவும் மனதிற்கு இதமான நல்ல உணர்வைத்தரும் பச்சை பசேல் சூழலில் ஜில்லென்று விழுகிற அருவி தண்ணீரில் குளிர்ச்சியாக ஆட்டம்போட ஒரு சூப்பர் ஸ்பாட்டாக இந்த தடா நீர்வீழ்ச்சி அமையும்.
சதாசிவ கோணா நீர் வீழ்ச்சி
சென்னையில் இருந்து 16 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது சதாசிவ கோணா நீர்வீழ்ச்சி சென்னைக்கு அருகில் உள்ள மற்றும் ஒரு அழகிய இடம் ஆகும். உயரமான மலை சிகரங்கள் அடர்ந்த காடுகள் மற்றும் அழகிய நீர்வீழ்ச்சி ஆகியவற்றை கொண்ட இந்த இடம் அதன் அழகில் நம் மனதை கொள்ளையடிக்கும் அடர்ந்த மரங்கள் மற்றும் தாவரங்கள் நடுவே இருந்து விழும் குளிர்ந்த அருவியின் நீர் மிகவும் ரம்யமாக இருக்கும்.
மகா சிவராத்திரி வைகுண்ட ஏகாதசி ,கார்த்திகை மாசத்தில் அனைத்து திங்கட்கிழமைகளிலும் தமிழகம் மற்றும் பல பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் இக் கோயிலுக்கு வந்து செல்கின்றனர்.
மாமண்டூர் நீர்வீழ்ச்சிகள்
சென்னையிலிருந்து 3 மணிநேர பயண தூரத்தில் சென்னை கடப்பா தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது இந்த நீர்வீழ்ச்சி சென்னையில் இருந்து ஒரு நாள் ட்ரிப் அல்லது பிக்னிக் செல்ல இது சரியான இடம் ஆகும். இந்த வசீகரமானகாடுகள் ஆந்திர பிரதேச வனத்துறையால் நன்கு பராமரிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது சிறு சிறு ஓடைகள் குளங்கள் நீர் வீழ்ச்சி இனிமையான வானிலை என்ன இந்த ஆடம் மிகவும் குளுமையாக இருக்கும்.
மூல கோணா நீர்வீழ்ச்சி
சென்னையில் இருந்து 109 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. மூலிகை மலர்களால் ஆன பசுமையால் மூடப்பட்டிருக்கும் மலையில் இருந்து விழும் குளிர்ந்த நீர் ஒரு சிறிய குலத்தை அடைகிறது. சுமார் 10 அடி ஆழம் கொண்ட இந்த குளத்தில் நீச்சல் தெரிந்தால் நீங்கள் நீந்தி குளிக்கலாம். குடும்பத்தினரும் ஒரு நாள் சுற்றுலா செல்ல இது ஏற்ற இடம் ஆகும். மலையற்ற பயணிகளுக்கு பிடித்த இடமாக விளங்கும் இந்த மூல கோணாநீர்வீழ்ச்சி ஆகும்.
ஆரே நீர்வீழ்ச்சி
சென்னையில் இருந்து 90 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. ஆரே நீர்வீழ்ச்சி ஆந்திர பிரதேசத்தின் சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது ஒரு சின்ன ட்ரெக்கிங் ஸ்பாட் ஆகும். கிழக்கு தொடர்ச்சி மலைகளின் அழகான சூழலால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
நாகலாபுரத்தில் மூன்று நீர்வீழ்ச்சிகள் உள்ளன. சிறியதாக ஒரு ட்ரெக்கிங் பண்ணினால்போதும். அழகான ஸ்பாட்டில் நன்றாக என்ஜாய் பண்ணலாம். இந்த இடத்தில் இருக்கிற பசுமையும் சிறு சிறு ஓடைகளும், குளங்களும், அழகான நீர் வீழ்ச்சிகளும், பயணிகளுக்கும் சுற்றுலா வருபவர் களுக்கு நல்ல அனுபவத்தை வழங்குகிறது.
எங்கு பார்த்தாலும் இனிமையான மரங்கள் சிறு சிறு ஓடைகள் நீர் வீழ்ச்சிகள் கூழாங்கற்கள் என இந்த இடம் முழுவதுமே மிகவும் ரம்யமாகவும் அழகாகவும் கண்ணுக்கு குளிர்ச்சியாகவும் அமைந்துள்ள இடம். இக்கோடையில் சுற்றுலாவாக சென்று ரசித்து பாருங்கள்.