மேகாலயாவின் தலைநகரமான ஷில்லாங் வடகிழக்கு இந்தியாவின் மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும். இது கடல் மட்டத்திலிருந்து 1520 மீட்டர் (4,990 அடி) உயரத்தில் அமைந்துள்ளது. ஸ்காட்லாந்தின் மலைப்பகுதிகளுடனான இதன் குறிப்பிடத்தக்க ஒற்றுமை காரணமாக, இது 'கிழக்கின் ஸ்காட்லாந்து' என்று அழைக்கப்படுகிறது. இது கௌகாத்தியிலிருந்து 104 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
இந்த ஏரி மேகாலயா மாநிலத்தின் முக்கிய சுற்றுலாத் தலமாக உள்ளது. போட்டிங், ஸ்கூட்டிங், கயாக்கிங், நீர் சைக்கிள் ஓட்டுதல், படகு சவாரி என நீர் விளையாட்டுக்களை அனுபவிக்கலாம். தினம் தினம் சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகை தருகிறார்கள். இங்கு காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை படகு சவாரி செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். இங்கு நீர் விளையாட்டுகள் மிகவும் பிரபலம்.
மேகாலயாவின் மிக உயரமான பகுதி. இது கடல் மட்டத்திலிருந்து 1965 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இயற்கை எழில் கொஞ்சும் கிராமப்புற காட்சிகளை கண்டு களிக்கலாம். இந்த சிகரத்தை அப்பர் ஷில்லாங் சாலை வழியாக அணுகலாம்.
ஷில்லாங் இந்தியாவின் பேஷன் தலைநகரங்களில் ஒன்று. இங்கு போலீஸ் பஜார் என்பது மிகவும் ஃபேமஸான இடம். போலீஸ் பஜார் ஷில்லாங்கின் முக்கிய சந்தையாகும். இங்கு பெரிய பெரிய ஹோட்டல்கள், உணவகங்கள், பெரிய பிராண்ட் கடைகள் என அமர்க்களமாக இருக்கும். இங்கு பலவிதமான எலக்ட்ரானிக் பொருட்கள், குளிர்கால உடைகள், கேஜெட்டுகள், அழகு சாதன பொருட்கள் என வாங்கலாம். ஷாப்பிங் செய்ய ஏற்ற இடம். போலீஸ் பஜார் நகரின் மையமாக கருதப்படுகிறது. ஷாப்பிங் ஆர்வலர்களுக்கும், உணவு பிரியர்களுக்கும் ஏற்ற இடம் இது. கைவினைப் பொருட்கள் விற்கும் பல பழைய பாரம்பரிய கடைகளும், நவீன கடைகளும் உள்ளன. நாள் முழுவதும் மக்கள் நடமாடும் மிகவும் பிசியான ஏரியா!