
உலக அதிசயங்களில் ஒன்றான எகிப்தில் உள்ள பிரம்மாண்ட பிரமிடுகளில் தத்துவங்கள் சிலவும், அறிவியல் உண்மைகளும் உள்ளன. பிரமிடின் உள்பக்க அமைப்பு உயர்வாட்டில் மூன்று பகுதிகளை உடையது. அதன் ஒரு பகுதியில் மன்னரின் அறை. அதன் கீழே அரசியின் அறை, வலப்புறத்தில் இந்த அறைக்கு செல்லும் பாதையும், அதன் அடியே கிணற்று பகுதியைச் சேர்ந்த அறை உள்ளது. அதன் கீழே தரைமட்டத்தில் கீழே ஒரு அறை உள்ளது.
பிரமிடின் உயரத்தை மூன்று பகுதிகளாக பிரிப்பதில் அதன் மேற்கு பகுதியில் மிகுந்த ஆற்றலும், இரண்டாம் பகுதியில் அதனைவிட சற்றுக் குறைவாகவும், மூன்றாம் பகுதியான கீழ்பகுதியில் குறைவான ஆற்றலும் கிடைக்கிறது.
இந்த பிரமிடின் மட்டுமல்லாது பிரமிட் போன்ற எந்த அமைப்பிலும் ஆற்றல் கிடைக்கிறது. இதனால் சில குறிப்பிட்ட அளவுகளில் நம் வீட்டிற்கு உகந்தவாறு நாம் பிரமிடுகளை செய்து வைத்துக் கொண்டால் பிரமிடின் ஆற்றலை நாமும் பெறலாம். பிரமிடின் குறிப்பிடத்தக்க அம்சம் அதன் சரியான அளவு. சரியான அளவில் உருவாக்கிய பிரமிடுகள்தான் சரியான பலன்களைத்தரும்.
பிரமிடு என்பது நான்கு முக்கோண வடிவங்களை கனமான அட்டையில் வெட்டி துளிகள் கூட இடைவெளி இல்லாமல் இணைத்து காலிக்கோ துணி அல்லது கிராஃப்ட் தாள் கொண்டு ஒட்டி பிரமிடை உருவாக்கலாம். பிரமிடு செய்யும்போது முக்கோண வடிவில் அடிப்பகுதியைவிட பக்க அளவுகள் ஐந்து விழுக்காடுகள் குறைவாக இருக்க வேண்டும். பொருட்களை மட்டுமே வைப்பதென்றால் சிறிய பிரமிடாக இருக்கலாம்.
பிரமிடின் உள்ளே அமர மன இறுக்கம் நீங்கும். தினமும் உள்ளிலிருந்து தியானம் செய்ய மனம் ஒருமுகப்பட்டு உடலுக்கு நன்மை பயக்கும். மூளைக்கு அதிக வேலை கொடுப்பவர்கள் பிரமிடு உள்ளே அமர்ந்து சிந்தித்தால் தெளிவான முடிவுகளை எடுக்க முடியும். பிரமிடு உள்ளே அமர்ந்து மட்டுமல்லாமல் பிரமிடு தொப்பியை தலையில் அணிந்து கொண்டு படித்தால் படித்தது நினைவில் நிற்கும்.
பிரமிடு உள்ளே அரைமணி நேரம்போல அமர்ந்திருந்தால் உடல்வலி, மூட்டுவலி, கால்வலி, தலைவலி, கண் எரிச்சல், நீர்க்கோவை, காய்ச்சல் ஆகியவற்றிலிருந்து நலம் பெறலாம். களைப்பு நீங்கி புத்துணர்ச்சி பெறலாம். பிரமிடின் உள்ளே வைக்கும் பொருள் அழுகிவிடாமல் இருப்பதுடன் அவற்றின் சுவை கூடுதலாக இருக்கும்.
அமெரிக்கர்கள் பிரமிடின் தத்துவத்தை தம் கட்டடங்கள், உணவு விடுதிகள், போன்ற பலவற்றிலும் பிரமிட் வடிவில் அமைக்கின்றனர். வீட்டிலும் சின்ன சின்ன பிரமிடுகளை வைக்க கரப்பான் பூச்சி போன்றவை வராது. கோபத்தை தணிக்கவும், உணர்வுகளை கட்டுப்படுத்தவும் பிரமிடுகள் உதவி புரிகின்றன. பிரமிடுகளில் அமர்ந்து பழக நம் உணர்வு மேலாண்மை மேம்படும். உடல்நலம் சிறக்கும்.