புவியீர்ப்பு விசைக்கு சவால் விடும் மர்மமான 5 இடங்கள்!

men fly without any support
Mysterious places without gravityImg credit: freepik
Published on

புவியீர்ப்பு விசை, பூமியில் நாம் நிலைத்திருக்க உதவும் முக்கிய சக்தி. ஆனால், இந்த சக்தி வேலை செய்யாதது போல தோன்ற வைக்கும் சில இடங்களும் பூமியில் இருக்கத்தான் செய்கின்றன. இந்த இடங்களில், கார்கள் தானாகவே மேலே போகும்; தண்ணீர் பின்னோக்கி பாயும்; மக்கள் நேராக நிற்க முடியாமல் சாய்ந்து நிற்பார்கள். இது பெரும்பாலும் optical illusion என்ற விளைவால் ஏற்படுகிறது. ஆனாலும், இதை நேரில் பார்ப்பது ஒரு வித்தியாசமான அனுபவத்தை தரவல்லது. அப்படி புவியீர்ப்பு விசை இல்லாததுபோல தோன்றவைக்கும் பூமியின் 5 இடங்களை பற்றி இங்கே பார்க்கலாம்.

Gravity Hill Magnetic Hill

1. காந்த மலை (Magnetic Hill):

இந்தியாவின் லடாக்கில் உள்ள இந்த காந்த மலை மிகவும் பிரபலமான ஒரு இடம். இங்கு, வண்டியை நியூட்ரலில் நிறுத்தி வைத்தால், அது தானாகவே மேல்நோக்கி செல்லும். அந்த மலையின் காந்த சக்திதான் இதற்குக் காரணம் என மக்கள் நம்புகிறார்கள். ஆனால், உண்மையில் இது optical illusion என விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். காரணம் எதுவாக இருந்தாலும், இதை நேரில் பார்ப்பது ஒரு ஆச்சரியமான அனுபவமாக இருக்கும்.

2. மர்மமான இடம் (Mystery Spot):

1939-ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட இந்த இடம், அமெரிக்காவின் சான்டா குரூஸ் பகுதியில் அமைந்துள்ளது. இது புவியீர்ப்பு விசை இல்லாதது போல தோன்றும் ஒரு சுற்றுலா மையம். இங்கு ஒரு சாய்ந்த அறையில், மக்கள் கீழே விழாமல் சாய்ந்து நிற்பார்கள். பந்துகள் தானாக மேல்நோக்கி உருளும். இந்த அனுபவம், கட்டிடத்தை ஒரு குறிப்பிட்ட கோணத்தில் கட்டியதால் ஏற்படுகிறது. இது அறிவியல் மற்றும் வேடிக்கை கலந்த ஒரு இடம்.

3. ஈர்ப்பு மலை (Gravity Hill):

அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் உள்ள இந்த மலை, காந்த மலை போலவே செயல்படுகிறது. இங்கு, நியூட்ரலில் விடப்படும் கார்கள் தானாகவே மேல்நோக்கி செல்லும்.

இதையும் படியுங்கள்:
அட்வென்ச்சரை விரும்புகிறீர்களா? தமிழ்நாட்டில் சிறந்த நீர் விளையாட்டு இடங்கள்!
men fly without any support

இங்கு வரும் மக்கள் இதை தங்களது வண்டியில் முயற்சி செய்து பார்க்க விரும்புவார்கள். இதுவும் சாலையின் சாய்வு மற்றும் சுற்றி உள்ள நிலப்பரப்பால் ஏற்படும் ஒருவித optical illusion தான்.

4. ஸ்பூக் ஹில் (Spook Hill):

அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ளது ஸ்பூக் மலை. இந்த இடத்திற்கு பயமுறுத்தும் பெயர் இருந்தாலும், இங்கே நடக்கும் நிகழ்வு சுவாரஸ்யமானது. இங்கு நியூட்ரலில் இருக்கும் கார்கள் மேல்நோக்கி செல்வதை பார்க்கலாம். ஒரு பழங்குடி தலைவர் மற்றும் ஒரு பெரிய முதலைக்கு இடையே நடந்த போரினால் இது ஏற்பட்டது என்று இங்கு ஒரு கதை உண்டு.

5. தங்க பாறை (Golden Rock)

மியான்மரில் உள்ள இந்த தங்க பாறை, ஒரு பெரிய பாறையின் விளிம்பில் தொங்கிக் கொண்டிருப்பது போல தோன்றும். இது கீழே விழாமல் பல நூற்றாண்டுகளாக அப்படியே இருக்கிறது.

இதையும் படியுங்கள்:
மகாராஷ்டிராவின் இயற்கை அதிசயங்கள்: நானேகாட் மற்றும் மால்ஷேஜ் காட்!
men fly without any support

புத்தரின் ஒரு முடிதான் இதை தாங்கிப் பிடிப்பதாக என்ற கதையும் இந்த இடத்திற்கு உண்டு. இந்த பாறை, நம்பிக்கைக்கும் அறிவியலுக்கும் இடையே உள்ள மர்மமான இடமாக பார்க்கப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com