பெண்கள் தனியாக ட்ரிப் போக பிளானா.. பாதுகாப்பு கவலையின்றி தைரியமாக சுற்றக்கூடிய 5 சூப்பர் இடங்கள் இதோ!

solo-women-travelers
solo-women-travelers
Published on

தனியாக பயணம் செய்வது பெண்களுக்கு ஒரு மாபெரும் தன்னம்பிக்கையை கொடுக்கும் அற்புதமான விஷயம். தினமும் ஒரே மாதிரியான இயந்திரம் போல செய்யும் வேலை என்ற சலிப்பிலிருந்து விடுபட ஒரு சோலோ ட்ரிப் மிகவும் அவசியமான ஒன்றாகும். தனியாக ட்ரிப் செல்ல ஆசை இருந்தாலும் பாதுகாப்பு எப்படி இருக்கும் என்ற தயக்கம் பலருக்கும் கட்டாயம் இருக்கும். எந்த ஒரு பயமும் இல்லாமல் பெண்கள் தைரியமாக சென்று வரக்கூடிய 5 அட்டகாசமான சுற்றுலா தளங்களை பற்றி பார்க்கலாம்.

உதய்பூர்!

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள உதய்பூர் மிகவும் பாதுகாப்பான மற்றும் ரம்மியமான ஒரு இடமாகும். இங்குள்ள பிச்சோலா ஏரியின் அழகும், பிரம்மாண்டமான பழங்கால அரண்மனைகளும் நம்மை வேறு ஒரு உலகத்திற்கு அழைத்துச் செல்லும். பெண்களுக்கு பாதுகாப்பான பல நல்ல பிரீமியம் தங்கும் விடுதிகள் இங்கு நிறைந்துள்ளதால், எந்த ஒரு சிறு தயக்கமும் இல்லாமல் இந்த அழகான நகரத்தை நீங்கள் முழுமையாக சுற்றிப் பார்க்கலாம்.

கோவா!

கோவா என்றாலே நண்பர்களுடன் மட்டும் தான் செல்ல வேண்டும் என்ற ஒரு தவறான எண்ணம் பலருக்கும் உண்டு. ஆனால் பெண்கள் தனியாக சென்று பாதுகாப்பாக என்ஜாய் செய்ய இது ஒரு அருமையான சாய்ஸ். அமைதியான கடற்கரைகள், விதவிதமான உணவுகளை வழங்கும் கஃபேக்கள் மற்றும் கண்கவர் ஷாப்பிங் வீதிகள் என இங்கு பொழுதை கழிக்க எக்கச்சக்கமான விஷயங்கள் உள்ளன. நீர் விளையாட்டுக்களும், இரவு நேர கொண்டாட்டங்களும் உங்களின் பயணத்தை கலர்ஃபுல்லாக மாற்றும்.

கூர்க்!

மலைகளையும் பனிமூட்டத்தையும் ரசிக்க நினைப்பவர்களுக்கு கர்நாடகாவில் உள்ள கூர்க் ஒரு மாபெரும் சொர்க்கம் தான். சுற்றிலும் பரவி கிடக்கும் காபி தோட்டங்களின் வாசனையும், ஆர்ப்பரித்து கொட்டும் பிரம்மாண்டமான நீர்வீழ்ச்சிகளும் மனதிற்கு ஒரு பெரிய ரிலாக்ஸை கொடுக்கும். மிகவும் அமைதியான முறையில் இயற்கையோடு ஒன்றி நேரத்தை செலவிடவும், பாதுகாப்பான நீண்ட தூர வாகனப் பயணங்களை மேற்கொள்ளவும் இந்த இடம் கச்சிதமாக பொருந்தும்.

இதையும் படியுங்கள்:
பூட்டான்: அமைதியும், ஆன்மீகமும் நிறைந்த அதிசய நாடு!
solo-women-travelers

மெக்லியோட்கஞ்ச் (McLeod Ganj)!

ஆன்மீகமும் அமைதியும் கலந்த ஒரு புதிய அனுபவம் வேண்டும் என நினைத்தால் நீங்கள் தாராளமாக மெக்லியோட்கஞ்ச் செல்லலாம். தலாய் லாமா வசிக்கும் இந்த ஊர் முழுவதும் திபெத்திய கலாச்சாரம் அழகாக விரவி கிடக்கும். சுற்றிலும் உயர்ந்த பனி மலைகள், எங்கும் அமைதியாக நடந்து செல்லும் புத்த பிட்சுகள் என ஒரு விசித்திரமான மற்றும் மிகவும் பாதுகாப்பான சூழலை இந்த ஊர் தன்னுள் ரொம்பவே பத்திரமாக அடக்கி வைத்துள்ளது.

பாண்டிச்சேரி!

தூரம் செல்ல வேண்டாம் பக்கத்திலேயே ஒரு பாதுகாப்பான ட்ரிப் அடிக்க வேண்டும் என்றால் பாண்டிச்சேரி ஒரு சூப்பரான ஐடியா. பாறைகள் நிறைந்து காணப்படும் ப்ரோமனேட் கடற்கரையில் மாலை நேரத்தில் நடப்பது ஒரு தனி சுகம். பிரெஞ்சு கட்டிடக்கலையை பறைசாற்றும் அழகிய வீதிகள், மனதை ஒருமுகப்படுத்தும் ஆரோவில் மற்றும் அரவிந்தர் ஆசிரமம் என எல்லாமே இங்கு உண்டு. நிம்மதியாக அமர்ந்து ரிலாக்ஸ் செய்ய பல கியூட்டான கஃபேக்கள் இங்கு உங்களை வரவேற்க எப்போதும் காத்திருக்கின்றன.

இதையும் படியுங்கள்:
மன்னர்கள் மட்டும்தானா? உலகை மிரட்டிய 5 பேரரசிகள்!
solo-women-travelers

உலகை தனியாக சுற்றிப் பார்ப்பது, ஒவ்வொரு பெண்ணும் தங்கள் வாழ்வில் கட்டாயம் அனுபவிக்க வேண்டிய ஒரு சுவாரஸ்யமான தருணம். பாதுகாப்பை பற்றி அளவுக்கு அதிகமாக கவலைப்படாமல், மேலே சொன்ன இந்த ஊர்களில் ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுத்து உங்களின் முதல் சோலோ பயணத்தை தைரியமாக தொடங்குங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com