மன்னர்கள் மட்டும்தானா? உலகை மிரட்டிய 5 பேரரசிகள்!

Queens
world-famous-womenImg credit: AI Image

ரலாறு பெரும்பாலும் மன்னர்களின் வெற்றிகளையே கூறுகிறது. ஆனால், வரலாற்றில் அரியணையில் அமர்ந்து சாம்ராஜ்யங்களை வழிநடத்திய பெண்களின் பங்களிப்பு ஈடு இணையற்றது. சில ராணிகள் தங்கள் அழகால் அறியப்பட்டார்கள். பல ராணிகள் தங்களின் அரசியல் ஆளுமையாலும், போர்க்கள வீரத்தாலும் உலகையே வியக்க வைத்தார்கள். அந்த வகையில் வரலாற்றில் நீங்காத இடம்பிடித்த சக்திவாய்ந்த பேரரசிகளைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.

1. கிளியோபாட்ரா:

Cleopatra
Cleopatra

எகிப்தின் கடைசிப் பேரரசி கிளியோபாட்ரா. இவர் வரலாற்றின் மிகவும் மர்மமான மற்றும் சக்திவாய்ந்த பெண்மணி. அவரின் அழகுக்காக மட்டுமே பெரும்பாலும் அறியப்படுகிறார். ஆனால், இவர் ஒன்பது மொழிகளை சரளமாகப் பேசும் ஆற்றல் கொண்டவர் மற்றும் தத்துவஞானி. ரோமானியப் பேரரசின் ஜுலியஸ் சீசர் மற்றும் மார்க் ஆண்டனி ஆகியோருடன் அரசியல் கூட்டணி வைத்து, தனது நாட்டை ரோமானிய ஆதிக்கத்திலிருந்து காக்கப் போராடினார். தனது புத்திசாலித்தனத்தால் எகிப்தின் பொருளாதாரத்தை உயர்த்தியவர். இன்றும் எகிப்திய வரலாற்றில் ஒரு தனித்துவமான அடையாளமாக கிளியோபாட்ரா திகழ்கிறார்.

2. பேரரசி வு ஜெடியான்:

Wu Zetian
Wu Zetian

சீன வரலாற்றில் அதிகாரப்பூர்வமாக பேரரசி என்ற பட்டத்தை சூட்டிக்கொண்ட ஒரே பெண் வு ஜெடியான். ஒரு சாதாரண அந்தப்புரப் பெண்ணாகத் தொடங்கி, தனது புத்திசாலித்தனத்தால் சீனாவின் மிகப்பெரிய பேரரசியாக உயர்ந்தார். இவரது ஆட்சியில் சீனா, பொருளாதார ரீதியாகவும் ராணுவ ரீதியாகவும் பெரும் வளர்ச்சி கண்டது. ஊழலை ஒழிப்பதிலும், தகுதியானவர்களுக்குப் பதவி வழங்குவதிலும் அவர் மிகவும் கண்டிப்புடன் இருந்தார். பௌத்த மதத்தை சீனாவில் பரப்ப இவர் பெரும் பாடுபட்டார்.

இதையும் படியுங்கள்:
'Dancing Plague' - வரலாற்றின் விசித்திரமான நோய்... இது அறிவியலா? ஆன்மிகமா? உங்களுக்குத் தெரியுமா?
Queens

3. ராணி விக்டோரியா:

Queen Victoria
Queen Victoria

உலகின் பெரும் பகுதியை பிரிட்டிஷ் பேரரசு ஆட்சி செய்த காலத்தில், 63 ஆண்டுகள் அரசியாக இருந்தவர் விக்டோரியா. இவரது காலம் 'விக்டோரியன் காலம்' என்று அழைக்கப்படுகிறது. தொழில் புரட்சி, அறிவியல் முன்னேற்றம் மற்றும் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் அபரிமிதமான வளர்ச்சி ஆகியவை இவரது காலத்தில் நிகழ்ந்தவை.

4. கேத்தரின் தி கிரேட்:

 Catherine the Great
Catherine the Great

ஜெர்மனியில் பிறந்து, ரஷ்யாவின் பேரரசியாக உயர்ந்தவர் கேத்தரின். தனது கணவரை அதிகாரத்திலிருந்து நீக்கிவிட்டு, ரஷ்யாவின் அரியணையைத் தன் வசப்படுத்தினார்.

இதையும் படியுங்கள்:
82 வருஷமா ஒரு பெண்ணை கூட பார்க்காம வாழ்ந்த மனுஷனை தெரியுமா... இது கட்டுக்கதை அல்ல நிஜம்!
Queens

இவரது ஆட்சிக் காலத்தில் ரஷ்யா ஐரோப்பாவின் மிகப்பெரிய சக்தியாக உருவெடுத்தது. பல போர்களில் வெற்றி பெற்று நாட்டை விரிவுபடுத்தியதோடு மட்டுமல்லாமல், கலை, அறிவியல் மற்றும் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார். ரஷ்யாவின் முதல் பெண்கள் பள்ளியைத் தொடங்கிய பெருமை இவருக்கு உண்டு. மேலும், என்க்லைட்டன்மென்ட் (Enlightenment) எனப்படும் அறிவுப் புரட்சியை ரஷ்யாவில் விதைத்தவர் இவர்தான்.

5. ராணி எலிசபெத் I:

Queen Elizabeth I
Queen Elizabeth I

இங்கிலாந்தின் பொற்காலத்தை உருவாக்கியவர் முதலாம் எலிசபெத். ஒரு பெண்ணால் நாட்டை ஆள முடியாது என்று உலகம் நினைத்த காலத்தில், 45 ஆண்டுகள் வெற்றிகரமாக ஆட்சி செய்தார். ஸ்பெயினின் வலிமை மிக்க ஆர்மடா கடற்படையைத் தோற்கடித்து, இங்கிலாந்தை உலக வல்லரசாக மாற்ற அடித்தளம் அமைத்தார். இவர் திருமணம் செய்து கொள்ளவில்லை. எனவே கன்னி ராணி என்று அழைக்கப்பட்டார். இங்கிலாந்து திருச்சபையை நிலை நிறுத்திய பெருமை இவரையே சாரும்.

மேற்கூறிய பேரரசிகள் அனைவரும் வெவ்வேறு காலக்கட்டங்களில், வெவ்வேறு சூழல்களில் வாழ்ந்தவர்கள். இவர்களின் வரலாறு அதிகாரம் என்பது பிறப்பால் வருவதல்ல, அது அறிவு, துணிச்சல் மற்றும் விடாமுயற்சியால் பெறப்படுவது என்பதை நமக்கு உணர்த்துகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com