night view
night viewImg credit: Freepik

இரவு வானத்தை ரசிக்க ஆசையா? தென்னிந்தியாவின் 9 பெஸ்ட் ஸ்பாட்ஸ்... சென்று வருவோமா?

Published on

விண்மீன் கூட்டங்களும், நிலவும் நிறைந்த வானத்தை பார்க்க ஆசையா? நகரத்தின் இரைச்சலில் இருந்து விடுபட்டு, இருண்ட, அமைதியான இடங்களில் இரவு வானத்தை ரசிக்க தென்னிந்தியா ஒரு சரியான இடம். இரவு வானத்தின் அற்பு‌தங்களை கண்டு ரசிக்க தென்னிந்தியாவில் உள்ள இந்த இடங்கள் உங்களை நிச்சயம் ஆச்சரியப்படுத்தும்.

1. குடகு, கர்நாடகா:

குடகு, மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது. குறைந்த ஒளி மாசு காரணமாக இரவு வானத்தை தெளிவாகக் காண இது ஏற்ற இடமாகும். இங்கிருக்கும் 'தாடியாண்டமோல் சிகரம் (Tadiandamol Peak)' விண்மீன்களைப் பார்த்து ரசிக்கும் சிறந்த அனுபவத்தைத் தரும். குடகுவின் இயற்கைச் சூழலும், ஓய்வு விடுதிகளும் உங்கள் பயணத்தை மறக்க முடியாததாக மாற்றும்.

2. கொடைக்கானல், தமிழ்நாடு:

'மலைகளின் இளவரசி' என அழைக்கப்படும் கொடைக்கானல், அதன் குளிர்ந்த காலநிலையால் இரவு வானம் பார்ப்பதற்கு ஏற்ற இடமாக உள்ளது. 'பில்லர் ராக்ஸ் (Pillar Rocks)' மற்றும் 'டால்பின்ஸ் நோஸ் (Dolphin's Nose)' போன்ற இடங்கள், கண்களை கவரும் வானக் காட்சிகளை வழங்குகின்றன.

3. மூணார், கேரளா:

மூணாறின் பனி படர்ந்த தேயிலைத் தோட்டங்கள், மழைக்காலத்திற்குப் பின் மேலும் அழகாக இருக்கும். இந்தச் சமயத்தில் வானம் தெளிவாக இருப்பதால், நட்சத்திரங்களை எண்ணுவதற்கும், விண்மீன் மண்டலங்களை ரசிப்பதற்கும் இது சிறந்த நேரமாகும்.

4. ஏலகிரி, தமிழ்நாடு:

ஏலகிரி, விண்மீன் ஆர்வலர்களுக்கு அதிகம் அறியப்படாத ரகசிய இடமாகும். இங்குள்ள உயரம் மற்றும் குறைந்த ஒளி மாசு, வானியல் நிகழ்வுகளைப் பார்க்க சிறந்த சூழலை உருவாக்குகின்றன. குளிர்ந்த காலநிலை, இரவு முழுவதும் வானத்தை ரசிக்க உதவுகிறது.

5. சிக்மகளூர், கர்நாடகா:

சிக்மகளூர், அதன் அமைதியான சூழலால் விண்மீன் பயணத்திற்கு ஏற்றது. கர்நாடகாவின் மிக உயரமான சிகரமான 'முல்லையனகிரி (Mullayanagiri Peak)', வானத்தைப் பார்ப்பதற்கு ஒரு சிறந்த தளமாகும். இங்குள்ள குளிர்ச்சியும், பசுமையான காட்சியும் அனுபவத்தை மேலும் இனிமையாக்கும்.

இதையும் படியுங்கள்:
புவியீர்ப்பு விசைக்கு சவால் விடும் மர்மமான 5 இடங்கள்!
night view

6. அகுமப், கர்நாடகா:

'தென்னிந்தியாவின் சிரபுஞ்சி' என அழைக்கப்படும் அகுமப், அதன் இயற்கை அழகுக்கு பெயர் பெற்றது. மழைக்காலத்திற்குப் பின், இங்குள்ள தெளிவான வானம், விண்மீன்களைப் பார்ப்பதற்கு உகந்த காலமாகும்.

7. பைதல்மலா, கேரளா:

கண்ணூர் மாவட்டத்தில் உள்ள பைதல்மலா, நகரத்தின் விளக்குகளில் இருந்து விலகி, ஒதுக்குப்புறமாக அமைந்துள்ளதால், நட்சத்திரங்களை ரசிப்பதற்கு ஏற்ற இடமாக உள்ளது.

8. வாகமன், கேரளா:

வாகமன், இடுக்கி மற்றும் கோட்டயம் மாவட்டங்களில் அமைந்துள்ள ஒரு பசுமையான நிலப்பரப்பாகும். மழைக்காலத்தில் இங்குள்ள பள்ளத்தாக்குகள் அழகாக மாறுவதால், விண்மீன் காட்சிகளுக்கு ஒரு சரியான இடமாக அமைகின்றது.

9. நீலகிரி மலைகள், தமிழ்நாடு:

ஊட்டி மற்றும் குன்னூர் போன்ற நீலகிரி மலைகள், அதிக உயரம் மற்றும் தெளிவான வானம் கொண்டவை. குறைந்த ஒளி மாசு காரணமாக இங்குள்ள வானியல் நிகழ்வுகளை தெளிவாகக் காண முடியும்.

இரவு வானம் பார்ப்பதற்கான சில டிப்ஸ்:

சரியான நேரம்: அக்டோபர் முதல் மார்ச் வரையிலான மாதங்களில் தெளிவான வானம் இருக்கும். அதுவே இரவு வானத்தை ரசிக்க ஏற்ற நேரமாகும்.

சாதனங்கள்: வெறும் கண்களால் பார்ப்பது கூட ஒரு நல்ல அனுபவத்தைத் தரும். இருப்பினும், ஒரு நல்ல பைனாகுலர் அல்லது தொலைநோக்கி உங்கள் அனுபவத்தை மேம்படுத்தும்.

இதையும் படியுங்கள்:
உலகின் பீங்கான் கழிவுகளில் உருவான முதல் பூங்கா!
night view

பாதுகாப்பு: எந்தப் பாதிப்பும் ஏற்படாமல் இருக்க, ஒரு சிவப்பு ஃபில்டர் கொண்ட டார்ச் லைட்டை உடன் எடுத்து செல்லவும்.

வானிலை: மேகமூட்டமான இரவுகளைத் தவிர்க்க, எப்போதும் உள்ளூர் வானிலை முன்னறிவிப்பைச் சரிபார்க்கவும்.

இந்த இடங்களுக்கு செல்வது விண்மீன்களைப் பார்க்கும் அனுபவத்தை மட்டுமல்லாமல், இயற்கையின் அமைதியுடன் உங்களை இணைத்துக் கொள்ளும் ஒரு அரிய வாய்ப்பையும் வழங்கும்.

logo
Kalki Online
kalkionline.com