
அனைத்து தர மக்களும் இப்போது வெளிநாட்டிற்கு சுற்றுலா மேற்கொள்கின்றனர். எளிமையான வரலாறு, பிரபலமான அடையாளச் சின்னங்கள், பாரம்பரியமான கலாச்சாரம் ஆகியவற்றிற்காக லண்டன் நகரம் கொண்டாடப்பட்டாலும், பிக்பாக்கெட்டுகளின் பிரதான இலக்காகவும் இந்நகரம் உள்ளது. ஆகையால் லண்டன் நகருக்கு சுற்றுலா செல்பவர்கள் மேற்கொள்ள வேண்டிய ஒன்பது பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து பதிவில் காண்போம்.
1. சுற்றுலா செல்பவர்கள் வைத்திருக்கும் விலை உயர்ந்த பொருட்களையும் மற்றும் பைகளையும் அணிந்திருக்கும் ஆடையின் உள்ளே முன்பக்கமாக வைத்து பத்திரப்படுத்தவும். விலை உயர்ந்த நகைகள் அணிவதை பெரும்பாலும் தவிர்த்துவிட வேண்டும்.
2. அதிகமான மக்கள் கூடும் இடங்களான சந்தைகள், சுரங்கப்பாதைகள் மற்றும் நன்கு அறியப்பட்ட சுற்றுலா தலங்கள் போன்ற நெரிசலான இடங்களில்தான் அதிகமாக பிக்பாக்கெட்டுகள் நடைபெறுவதால் கூட்டத்தை தவிர்த்து விடுவது நல்லது..
3. "பந்தைக் கண்டுபிடி" போன்ற கேம்கள் மோசடிக்கு பெயர் பெற்றதாக விளங்குவதால் ஒருபோதும் விளையாடாதீர்கள். அதில் நீங்கள் விளையாடினால் தோல்வி மட்டுமே கிடைக்கும்.
4. சாலையை கடக்கும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் ஏனெனில் இங்கு போக்குவரத்து இடதுபுறமாக பயணிப்பதால், எப்போதும் முதலில் வலதுபுறமாக பார்த்து சாலையை கடக்க வேண்டும்.
5. சிவப்பு தொலைபேசி சாவடிகள் கலைஞர்களால் அடிக்கடி பயன்படுத்தப்பட்டு பெரும்பாலும் அசுத்தமானவையாக இருப்பதால் இவற்றை பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.
6. பொதுப்போக்குவரத்தை பயன்படுத்தும்போது அதாவது பேருந்து போன்றவற்றை பயன்படுத்தும் போது அசுத்தமான பரப்புகளில் உட்காருவதைத் தடுக்க, சுகாதார காரணங்களுக்காக பேருந்து இருக்கைகளில் செய்தித்தாள்களை பயன்படுத்தி அமரவும்.
7. காத்திருக்கும்போது, அசுத்தமான மேற்பரப்புகளுடன் தொடர்பு கொள்ளாமல் இருக்க, செய்தித்தாள்களை பெஞ்சுகள் அல்லது பேருந்து இருக்கைகளில் வைக்கவும்.
8. நீங்கள் பயன்படுத்தும் செல்போன், லேப்டாப் போன்றவற்றிற்கு சொந்த சார்ஜரை பயன்படுத்துவதே சிறந்தது. பொதுப்போக்குவரத்தில் உள்ள சார்ஜிங் நிலையங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.
9. மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்கள் மற்றும் சைக்கிள் ஓட்டுபவர்கள் உங்களை நெருங்கி வந்து உடைமைகளை திருட வாய்ப்பு இருப்பதால் அவர்கள் வருவதை கவனித்து விழிப்புடன் இருங்கள்.
லண்டன் மட்டுமல்ல வேறு எங்கு சுற்றுலா சென்றாலும் நம்முடைய செயல்களில் தெளிவாகவும் விழிப்புணர்வுடனும் இருந்தால் நாம் செல்லும் இடங்களின் நினைவுகளை அள்ளிக் கொண்டு வருவோம் என்பதில் சற்று ஐயமில்லை.