
பயணத்தில் இருந்து திரும்பியதும் பெரும்பாலோருக்கு உடன் வருவது அலுப்பு, சலிப்பு, சோம்பேறித்தனம். இவற்றில் இருந்து விடுபடவும் அடுத்த பயணம் சிறப்பாக அமைய தேவையான சில டிப்ஸ்.
பயணத்தில் இருந்து திரும்பியதும் சலிப்பு ஏற்படுவதுடன் ரெஸ்ட் எடுத்துக்கொள்ள உடல், மனம் இரண்டும் சேர்ந்து சுண்டி இழுக்கும். அந்த மாயைக்கு எக்காரணம் கொண்டும் அடிமை ஆகக்கூடாது. அடிமை ஆனால் உடன் சோம்பேறித்தனம் ஆட்கொண்டு படாத பாடுபடுத்தும்.
கட்டிலில் அல்லது தரையில் கூட தலை வைத்து படுக்க இழுக்கும். அடிபணிந்தால் அவ்வளவுதான். நொடிப்பொழுதில் கண்கள் இழுக்க, இமைகள் மூடிக் கொள்ள நித்ராத்தேவி தாலாட்ட நீங்கள் வேறு உலகில் (ஆழ்ந்த தூக்கத்தில்தான்) சஞ்சரித்து மிதந்துக் கொண்டு இருப்பீற்கள்.
ஒருவாரு தூக்கம் கலைந்து இந்த உண்மையான உலகத்திற்கு திரும்பி வருவதற்குள் நேரம் கடந்து இருக்கும். வேறு பணிகள் வரிசைக் கட்டிக்கொண்டு காத்து இருக்கும்.
ரிசல்ட். போய் வந்த பயண சூட் கேஸ்கள், பைக்கள் அப்படி அப்படியே இருக்கும். அவற்றை சரி செய்ய வேண்டும் என்ற நினைப்பே எரிச்சலை மூட்டும். காரணம் வேறு யாரும் இல்லை. உங்களுடைய அலட்சிய போக்கு. வேலையை உடனுக்கு உடன் முடிக்காமல் தள்ளி போடலாம் என்ற மனோபாவம்.
சற்று நிதானமாக யோசித்து பாருங்கள். பயணம் முடிந்து வந்த கையோடு சுமார் அரைமணி நேரம் எடுத்துக்கொண்டு, கொண்டு வந்த சூட் கேஸ்கள், பெட்டிகள், பைகள் இவற்றை ஒழித்து அதில் உள்ள பொருட்களை எடுத்து வைக்க வேண்டிய இடங்களில் வைத்து விடுகிறீர்கள் என்று.
வாஷ் செய்ய வேண்டியவற்றை.வாஷிங் மெஷினில் போட்டு விடுகிறீர்கள். காலியான சூட் கேஸ்கள், பெட்டிகள், பைக்கள் இவற்றின் பூட்டுடன், குறிப்பிட்ட சாவிகளோடு அந்த அந்த சூட் கேஸ், பைகள் உள்ளே பத்திரப்படுத்தி மறக்காாமல் கையோடு வைத்து விடுகிறீர்கள்.
இதன் அருமை, பெருமை, முக்கியத்துவம் அடுத்த பயணத்திற்கு தயார் செய்யும்பொழுது ஏற்படும் கடைசி நேர டென்ஷன் மிக்க காலகட்டத்தில் தவிக்கும் சமயத்தில்தான் நன்றாக புரியும்.
அடுத்த பயணம் இனிமையாக தொடங்கவேண்டும் என்றால், தற்பொழுது முடிவுற்ற பயணத்தியேயே மேற்கூறியவற்றை செய்து முடித்து மகிழ்ச்சி என்ற மூச்சை இழுத்து நிம்மதியாக பயணத்தை தொடரவும்.
இவற்றைத் தவிர இப்பொழுது முடிந்த பயணத்ததில் பெற்ற அனுபவங்கள் எப்படி உதவும் என்பதையும் பயன்படுத்தி பலனை பெறுங்கள்.
எதிர்வரும் பயணத்திற்கு தேவையான தயார் செய்ய வேண்டியவற்றில் இங்கு குறிப்பிட்டவைகளுக்கு முக்கியத்துவம் இப்பொழுதே கொடுத்தால், பயணம் மேற்கொள்ளும் சமயத்தில் சந்திக்கவேண்டிய அனாவசிய அழுத்தங்களை தவிர்க்கலாம்.