குறைந்த செலவில் அஜர்பைஜான் பயணம்: முழுமையான 5 நாள் வழிகாட்டி!

azerbaijan tour
azerbaijan tour in winter
Published on

ஷ்யா, ஜியார்ஜ்யா, ஆர்மெனியா மற்றும் இரான் ஆகிய நாடுகளின் எல்லைப்பகுதியில் இருக்கும் ஒரு நாடுதான் அஜர்பைஜான். இது மலைகள், களிமண் எரிமலைகள் நிறைந்த இடம். அஜர்பைஜான் ‘நெருப்பு நகரம்’ என்று அழைக்கப்படும் ஒரு நகரம். இந்நாட்டில் உள்ள பக்கு என்ற நகரத்தில் உள்ள ‘ஃப்லேம் டவர்’ மிகவும் பிரபலமானது.

இந்த நாடு குடியரசு அடைந்த பின்னர், அதாவது 1918ம் ஆண்டிலிருந்து அதிகவேகமாக முன்னேற்றம் அடைந்தது. ஒரு முஸ்லீம் நாட்டில் முதன் முதலில் பெண்களுக்கு வாக்குரிமைக் கொடுத்த பெருமை அஜர்பைஜான் நாட்டுக்கே சேரும். மேலும் இங்கு கிட்டத்தட்ட 20 மில்லியன் வருடங்கள் பழமையான 300 களிமண் எரிமலைகள் உள்ளன.

உலகில் உள்ள எண்ணெய் நிலங்களின் பாதி இங்குதான் உள்ளது என 1901ம் ஆண்டு நடைப்பெற்ற ஆய்வில் கண்டறியப்பட்டது. அஜர்பைஜானில் உலகிலேயே அதிக மினியேச்சர் புத்தகம் உள்ள ஒரு அருங்காட்சியகமும் உள்ளது. அங்கு 5,500 மினியேச்சர் புத்தகங்கள் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. ஹெய்டர் அலியெவ் மையத்தின் கட்டிட கலை கட்டாயம் பார்க்க வேண்டிய ஒரு இடம். ஏனெனில் லண்டன் டிசைனில் 2014ம் ஆண்டு சிறந்த வடிவமைப்பு கொண்ட அருங்காட்சியாகம் என்ற பட்டத்தைப் பெற்றது. அனைத்திற்கும் மேல் இந்த நாட்டில் புலாவ் மிகவும் பிரசித்துப் பெற்றது. அந்த வகையில் சென்னையிலிருந்து அஜர்பைஜான் பயணம் பற்றிப் பார்ப்போம்.

இதையும் படியுங்கள்:
கொடைக்கானலின் மறைந்திருக்கும் சொர்க்கம்: பூம்பாறை!
azerbaijan tour

விமானத்தில் சென்னையிலிருந்து அஜர்பைஜனில் உள்ள பக்கு நகரத்திற்கு செல்ல 5 மணி நேரம் 46 நிமிடங்கள் ஆகும். விமானத்தில் செல்வதற்கான  டிக்கெட் கட்டணம் 30,000 முதல் ஆரம்பமாகும். மேலும் இந்த இடத்திற்கு நீங்கள் டிசம்பர்  மாதங்களில் செல்லலாம். சில டூர் ஏஜென்ஸி மூலம் நீங்கள் பேக்கேஜ் முறையில் சென்றால் கட்டணம் குறைவாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும்.

மேலும் பேக்கேஜில் சொன்ன அனைத்து இடங்களுக்கும் அவர்களே அழைத்துச் செல்வார்கள். மேலும் தங்கும் வசதி, உணவு அனைத்தும் சேர்த்து அந்த கட்டணத்திலேயே அடங்கிவிடும். விசா, சர்வதேச விமானப் பயணம், ஹோட்டல் தாண்டி வெளியில் சாப்பிடும் உணவுகள் ஆகியவற்றை நாம் ஏற்பாடு செய்வதுபோல் இருக்கும்.

முதல் நாள் சென்னையிலிருன்து அஜர்பைஜான் சென்று ஹோட்டலில் தங்கி அந்த நாட்டின் காலநிலையை அறிந்துக்கொள்ளலாம்.

இரண்டாவது நாளிலிருந்து நீங்கள் சுற்றிப்பார்க்க ஆரம்பிக்கலாம். காலையில் உணவு சாப்பிட்ட பின்னர் பக்குவில் உள்ள ஹைலேண்ட் பூங்கா, ஃப்லேம் டவர், ஃபெர்ரிஸ் வீல், பக்கு வெனிஸ், பக்கு போல்லிவார்ட், மெய்டன் டவர், ஸ்ரீவன்ஷா பேலஸ் ஆகிய இடங்களுக்கு செல்லலாம்.

இதையும் படியுங்கள்:
ஆன்மிகப் பயணம்; கோவில் குளக்கரையில் தொலைக்கும் பாவமும்... சேர்க்கும் பாவமும்!
azerbaijan tour

மூன்றாவது நாள் அதேபோல் காலை உணவு எடுத்துக் கொண்ட பின்னர் நெருப்பு கோவில் என அழைக்கப்படும் அடேஷ்கா, எரியும் மலை என்றழைக்கப்படும் யனர் தாக், ஹெய்தர் அலியெவ் அருங்காட்சியாகம் பார்த்துவிட்டு ஹோட்டல் திரும்பலாம்.

நான்காவது நாள் கபாலா, 7 கோஜல் அருவி, நோஹுர் ஏரி ஆகியவை சுற்றிப்பார்க்க வேண்டும். மத்தியத்திற்கு பின்னர் டுஃபந்தாக் டூரிசம் காம்ப்ளெக்ஸ் செல்லலாம்.

மூன்று நாட்கள் நன்றாக சுற்றிப்பார்த்துவிட்டு ஐந்தாவது நாள் அஜர்பைஜானிலிருந்து சென்னைக்குத் திரும்பலாம்.

-பாரதி

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com