
புதுச்சேரி என்றாலே சட்டென நினைவுக்கு வருவது பிரெஞ்சு கட்டிடக்கலைகள், எழில் மிகுந்த கடற்கரைகள். பலரும் விரும்பும் சிறந்த சுற்றுலா தலங்களை புதுச்சேரியில் ஒரு நாள் அல்லது இரண்டு நாள் சுற்றுலாவாக தேர்ந்தெடுத்து சுற்றிப் பார்க்கலாம். புதுச்சேரியில் எந்த சாலையில் பயணம் செய்தாலும் கடற்கரையில் போய் முடிவது இங்குள்ள சிறப்பு.
புதுச்சேரியில் பார்க்க வேண்டிய அழகிய கடற்கரைகளில் ஒன்று சுண்ணாம்பு ஆற்றில் படகு பயணம் செய்வது. ரம்யமான தீவு போல காட்சி அளிக்கும். இந்த இடம் பார்க்கும்போதே வெளிநாட்டில் இருப்பது போன்ற உணர்வை உங்களுக்கு தரும். மணல்வெளி நிரம்பிய கடற்கரை பகுதியில் சிறந்த புகைப்படங்களை எடுக்கலாம். சாகசப் பிரியர்களுக்கான நீர் விளையாட்டுகள் இங்கு உள்ளன.
புதுச்சேரியில் பாரதியார் இல்லத்தை பார்க்க தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். அவர் வசித்து வீட்டை அருங்காட்சியகமாகவும், நூலகமாகவும் பராமரிக்கப்பட்டு வருகிறது. பாரதியார் அங்கு தங்கிருந்தபோது எழுதிய கவிதைகள் ஆவணங்கள் பாரதியின் அபூர்வ புகைப்படங்கள், பாரதி தன் மனைவியுடன் இருக்கும் புகைப்படம், கையெழுத்துப் பிரதிகள் உட்பட 3000 நூல்கள் இதர 17,000 நூல்கள் வைக்கப்பட்டுள்ளன.
பாண்டிச்சேரி அருங்காட்சியத்தில் பல வரலாற்றுச் சின்னங்கள் உள்ளதால், வரலாற்றுப் பொக்கிஷமாக இது விளங்குகிறது. இங்கு பல்லவ சிற்பங்கள், ரோமானிய நாணயங்கள், மட்பாண்டங்கள் தொல்பொருள் கண்டுபிடிப்புகள் உள்ளன. சோழர் மற்றும் பல்லவர் காலத்தின் அரிய வெண்கல சிற்பங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் முதன்மையான கடற்கரைகளில் ஒன்றாக ராக் பீச் உள்ளது, புதுச்சேரி நெரிசல் மிகுந்த தெருக்களில் இந்த அழகிய கடற்கரை காட்சி அளிக்கிறது. இந்த கடற்கரை சாலையில் மாலை வேளையில் மக்கள் கூடுவதால் பார்க்க உற்சாகமாக இருக்கும். இங்கு அவ்வப்போது செய்த புதிய கடல் உணவுகளை வாங்கி உண்டு மகிழலாம்.
இந்த பிரஞ்சு காலனி கண்களுக்கு விருந்தாகவும், இன்பமாகவும் இருக்கும். சுத்தமான சாலைகள், அழகான கடற்கரை நீளமான தென்னை மரங்கள் சுற்றிலும் பூக்களின் அழகு பார்ப்பதற்கு நம்மை மிகவும் ஈர்க்கின்றன. பாறை கடற்கரையில் அமர்ந்து அலைகளின் சத்தத்தை ரசிக்கலாம் புகைப்படம் எடுக்க இது சிறந்த இடம் ஆகும்.
புதுச்சேரியில் சண்டே மார்க்கெட் மிகவும் பிரபலமானது. சுமார் இரண்டு கிலோ மீட்டர் தூரம் வரை கடைகள் போடப்பட்டு இருக்கும். அனைத்து வகையான பொருட்களும் குறைவான விலையில் இங்கு கிடைக்கும். சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் ஆடைகளும் குறைந்த விலையில் கிடைக்கிறது.
இந்தியாவில் முக்கியமான ஆசிரமங்களில் ஒன்றாக அறியப்படுவது ஸ்ரீஅரவிந்தர் ஆசிரமம். புதுச்சேரியில் நாம் இந்த பயணத்தில் கட்டாயம் பார்க்க வேண்டிய இடமாகும். இது உலகப் புகழ் பெற்ற தத்துவ ஞானி கவிஞர் மற்றும் யோகியான அரவிந்த கோஷின் ஆன்மீக தத்துவத்தின் அடிப்படையில் இது கட்டப்பட்டுள்ளது.
அரவிந்தர் மற்றும் அவரது நம்பிக்கைக்குரிய சீடரான மீரா அல்ஃபாசா அல்லது அன்னை ஆகியோரின் சமாதியில் ஆசி பெற உலகெங்கிலும் இருந்து பக்தர்கள் இந்த ஆசிரமத்திற்கு வருகிறார்கள். இந்த சமாதிபிரதான ஆசிரம கட்டிடத்தில் ஒரு செம்பருத்தி மரத்தின் கீழ் அனைவரும் பார்க்கும் படி வைக்கப்பட்டுள்ளது.
காலனித்துவ காலத்தில் கட்டப்பட்ட இந்த தாவரவியல் பூங்கா, பிரஞ்சு கட்டிடக்கலையைக்கொண்டு தென்னிந்திய பாணியில் ஆன சுற்றுப்புறங்களில் இருந்து தனித்து இருக்கிறது. பரந்து விரந்த 22 ஏக்கர் பரப்புள்ள இந்த பூங்காவில் அழிந்து வரும் மற்றும் அயல்நாட்டு தாவரங்கள் உட்பட 1500 க்கும் மேற்பட்ட தாவர இனங்கள் உள்ளன. இந்தியாவில் சிறந்த பூங்காக்களில் ஒன்றாக திகழ்கிறது.
இந்த பூங்காவில் பொம்மை ரயில் சவாரிகள், வார இறுதி நாட்களில் மட்டும் காணக்கூடிய இசை மற்றும் நடன நீரூற்றுகள், மீன் காட்சியகம், சுத்திகரிக்கப்பட்ட மரங்கள், அழகான பூப்படுக்கைகள் பார்ப்பதற்கு மிக அழகாக காட்சியளிக்கின்றன
புதுச்சேரியில் அமைதியான காட்சிகளில் ஒன்றாக கருதப்படுவது ஆரோவில். இங்கு அனைத்து தரப்பு மக்களும் அமைதியாகவும், முற்போக்கான நல்லிணக்கத்துடனும் வாழக்கூடிய ஒரு எதிர்கால நகரமாக 1968 இல் இது கட்டப்பட்டது.
இது தியானத்திற்காக கட்டப்பட்ட ஒரு பன்னிரு கோணபளிங்கு குவிமாடம் ஆகும். இதன் மையத்தில் உள்ள மொழியியல் கண்ணாடி கோலம் சூரிய ஒளியின் கதிரை உள்ளே வர அனுமதிக்கிறது. இந்த சூரியஒளி அமைதியின் மத்தியில் இருக்கும்போது, நம் கவனத்தை மேம்படுத்தும் என்று இங்கு வந்தவர்களால் சொல்லப்படுகிறது.
குறைவான செலவில் சுற்றுலா சென்று குடும்பத்துடன் பார்த்து மகிழலாம்.