

அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி: இந்த நீர்வீழ்ச்சி இந்தியாவில் நயாகரா என்று அழைக்கப்படுகிறது. திருச்சூர் மாவட்டத்தில் உள்ள இது சுமார் 25 மீட்டர் (சுமார் 80 அடி) உயரத்திலிருந்து கம்பீரமாக விழுகிறது. மேற்குத் தொடர்ச்சி மலையின் பசுமை சூழலில் இது அமைந்துள்ளது. ஜூன் முதல் அக்டோபர் வரையில் மழைக்காலம். இந்த அருவியின் பிரம்மாண்டத்தை பார்க்க சிறந்த நேரமாகும். அருவியின் மேற்பகுதி மற்றும் அடிவாரம் என இரு இடங்களில் இருந்தும் நீர் விழுவதை ரசிக்கலாம்.
பார்வை நேரம் - காலை 8 மணி முதல் மாலை - 5.30 வரை. கொச்சியிலிருந்து சுமார் 60 - 70 கி.மீ தூரம் கார், பேருந்தில் செல்லலாம். சாலக்குடி ரயில் நிலையத்திலிருந்து சுமார் 30 கிலோமீட்டர் தூரம்.
வாழச்சல் நீர்வீழ்ச்சி: அதிரப்பள்ளியில் இருந்து சில கிலோமீட்டர் தூரத்தில் வாழச்சல் அருவி உள்ளது. அடர்ந்த காடுகள் அருகில் உள்ள வனப்பகுதி மற்றும் அரிதான தாவரங்கள், பறவைகளை இங்கு காணலாம். பாகுபலி வந்த பல திரைப்படங்கள் இங்கு படம் ஆக்கப்பட்டுள்ளது. இந்த நீர்வீழ்ச்சி நீர் பாறைகளின் வழியே வேகமாக பாய்கிறது. இது மனதை கவரும் என்றாலும் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். இந்தப் பாறைகள் வழுக்கும் தன்மைகொண்டது. சாலக்குடியிலிருந்து 31 கி.மீ தொலைவில் உள்ளது. கார், பேருந்திலும் செல்லலாம்.
மீன் முட்டி நீர் வீழ்ச்சி: அடர்ந்த வனப்பகுதிகளுக்கு பெயர் பெற்ற வயநாட்டில் உள்ளது மீன் முட்டி நீர்வீழ்ச்சி. கேரளாவில் உள்ள மிக உயரமான நீர்வீழ்ச்சிகளில் இதுவும் ஒன்று. இது ஆயிரம் அடி உயரம் கொண்ட மூன்று அடுக்கு நீர்வீழ்ச்சியாகும். சுற்றிலும் தேயிலை தோட்டங்களுக்கு நடுவே அமைந்துள்ளது இந்த அற்புதமான நீர்வீழ்ச்சி. அழகான இந்த நீர்வீழ்ச்சி மழைக்காலங்களில் ஆபத்தானதாகவும் இருக்கும் சுற்றுலா பயணிகளுக்கு மறக்க முடியாத அனுபவத்தை தரக்கூடியது இந்த நீர்வீழ்ச்சி.
குச்சிப்பாரா நீர்வீழ்ச்சி: வயநாட்டில் வெல்லாரி மலையில் இருக்கும் மற்றொரு அழகான புகழ்பெற்ற நீர்வீழ்ச்சி குச்சி பாரா நீர்வீழ்ச்சி. தேயிலை தோட்டங்களுக்கு இடையில் மூன்று அடுக்குகளாக அமைந்திருக்கும் நீர்வீழ்ச்சி இதுவாகும். இதை சென்டினல் பாறை நீர்வீழ்ச்சி என்றும் அழைக்கிறார்கள். நுழைவாயிலில் இருந்து இந்த நீர்வீழ்ச்சிக்கு செல்ல 15 முதல் 20 நிமிடங்கள் ஆகும். இந்த அருவியில் குழக்க பயணச்சீட்டு வாங்கவேண்டும். மலையேற்றத்திற்கு ஏற்ற இடம் என்பதால் அதிகமான சுற்றுலா பயணிகள் இங்கு வருகிறார்கள்.
பாலருவி; கேரள மாநிலம் கொல்லத்தில் இருக்கும் மிக அற்புதமான ஒரு அருவி. இந்த அருவியைப் பார்க்கும்போது பால் கொட்டுவது போல இருப்பதால் இதனை பால் அருவி என்று அழைக்கிறார்கள். இது கொல்லத்தில் உள்ள மிக முக்கியமான சுற்றுலா தலமாக திகழ்கிறது. 32 அடி உயரம் கொண்ட இந்த அருவி ஆரியங்காவிற்கு அருகில் உள்ளது. வெண்ணீர் வீழ்ச்சிக்கான காட்டுக்குள் பயணம் மேற்கொள்ள வேண்டும். இப்போது அதிக சுற்றுலா பயணிகள் பார்க்கும் இடமாக உள்ளது.
லக்கிடி நீர் வீழ்ச்சி: வயநாட்டில் அமைந்துள்ள மற்றொரு அற்புதமான நீர்வீழ்ச்சி இது. லக்கிடி வியூ பாய்ண்டிற்கு அருகில் தான் குச்சிப்பாரா நீர்வீழ்ச்சி உள்ளது. நீர் வீழ்ச்சிகள் பள்ளத்தாக்குகள் மலைகள் ஆகியவை அதிகம் உள்ளன. இதை வயநாட்டின் நுழைவு வாயில் என்றே சொல்கிறார்கள். பனிமூட்டம் இல்லாத நாட்களில் இங்குள்ள பாறைகள் பள்ளத்தாக்குகளை காண்பதே கண்கொள்ளாகாட்சியாக இருக்கும்.
ரெயின்போ நீர் வீழ்ச்சி: கேரளாவில் இடுக்கி மாவட்டத்தில் மூணாறில் அமைந்துள்ளது இந்த ரெயின்போ நீர்வீழ்ச்சி. இதை கீழர் குத்து நீர்வீழ்ச்சி என்றும் சொல்வார்கள். வனப்பகுதியில் அமைந்துள்ள இந்த நீர்வீழ்ச்சி 200 அடி உயரத்தில் இருந்து கொட்டுகிறது. தொடுப்புழா நகருக்கு அருகில் அமைந்துள்ள இந்த நீர்வீழ்ச்சி கேரளா வரும் சுற்றுலா பயணிகள் பலரும் அறியாத இடமாகும். மூணாறு வருபவர்கள் இங்கு அவசியம் வந்து செல்வார்கள். டிரக்கிங் செல்பவர்களுக்கு மிகவும் ஏற்ற இடம் ஆகும்.
கேரளா சுற்றுலா செல்பவர்கள் அனைவருக்கும் பிடித்தமான விஷயம் ஆர்ப்பரித்துக் கொட்டும் நீர்வீழ்ச்சியை பார்த்து ரசித்து வாய்ப்பு இருந்தால் குளியலும் போட்டு , செல்பியில் போட்டோக்களையும் எடுத்து வரலாம். சுற்றுலா சென்ற மனநிறைவு கிடைக்கும் அதுவும் இயற்கை அழகுக்கு பெயர் பெற்ற கேரளாவிற்கு சென்றுவிட்டு இந்த நீர் வீழ்ச்சிகளை பார்க்காமல் வரலாமா? குடும்பத்துடன் சென்று பார்த்து மகிழுங்கள்.