பட்ஜெட் ரொம்ப கம்மியா இருக்கா? கவலையே வேண்டாம்.. இந்த சொர்க்கம் உங்களை கூப்பிடுது!

Bir - Billing
Bir - Billing
Updated on

தினமும் ஒரே மாதிரியான வேலைக்குச் சென்று சலித்துப் போன பலருக்கும், எங்காவது ஒரு புதுமையான இடத்திற்கு சுற்றுலா செல்ல வேண்டும் என்ற ஆசை நிச்சயம் இருக்கும். ஆனால் கையில் இருக்கும் பட்ஜெட் நம்மைப் பல நேரங்களில் தடுத்து நிறுத்திவிடும். குறைவான செலவில், வானத்தில் பறக்கும் ஒரு பிரம்மாண்டமான சாகசத்தை நீங்கள் செய்ய விரும்பினால், ஹிமாச்சலப் பிரதேசத்தில் உள்ள ஒரு அட்டகாசமான இடம் உங்களுக்காகவே காத்துக்கொண்டிருக்கிறது. 

இந்தியாவின் பாராகிளைடிங் (Paragliding) தலைநகரம் என பெருமையாக அழைக்கப்படும் அந்த இடத்தைப் பற்றியும், அங்கு எப்படி ஒரு சூப்பரான பட்ஜெட் ட்ரிப் போவது என்பதைப் பற்றியும் இப்போது பார்க்கலாம்.

காங்க்ரா மாவட்டத்தில் உள்ள பிர் மற்றும் பில்லிங் (Bir - Billing) என்ற இரண்டு கிராமங்கள் தான் இப்போது இளைஞர்களின் ஃபேவரிட் ஸ்பாட்டாக மாறியுள்ளது. இங்கு நீங்கள் வெறும் 5000 ரூபாய்க்குள் உங்களின் ஒரு முழுமையான ட்ரிப்பை முடித்துவிட முடியும். இரவு தங்குவதற்கு இங்குள்ள ஹோஸ்டல்கள் மற்றும் ஹோம் ஸ்டேக்களில் வெறும் 500 ரூபாயில் இருந்தே அருமையான அறைகள் கிடைக்கின்றன. 

இங்கு வரும் அனைவரின் முக்கிய நோக்கமே அந்த த்ரில்லான பாராகிளைடிங் சாகசம்தான். சுமார் இருபது முதல் முப்பது நிமிடங்கள் வரை வானத்தில் பறக்க 3000 - 4200 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கிறார்கள். பனி போர்த்திய மலைகளுக்கு மேலே பறக்கும் அந்த அனுபவம் வாழ்நாளில் மறக்கவே முடியாத ஒரு மாபெரும் நிகழ்வாக இருக்கும்.

உணவு, கலாச்சாரம்!

இந்த இடம் சாகசத்திற்கு மட்டுமில்லாமல், அமைதியான சூழலுக்கும் ரொம்பவே பெயர் போனது. இங்கு திபெத்திய கலாச்சாரம் அதிகம் காணப்படுவதால், ஆங்காங்கே இருக்கும் சின்ன சின்ன கஃபேக்களில் ரொம்பவே கம்மியான விலையில் சுவையான உணவுகளை ருசித்து மகிழலாம்.

குறிப்பாக இங்கு கிடைக்கும் Momos மற்றும் Thukpa போன்ற திபெத்திய உணவுகள் செம டேஸ்ட்டாக இருக்கும். வானத்தில் பறப்பது தவிர, மலையேற்றம், மலை பைக்கிங் மற்றும் மனதை ஒருமுகப்படுத்தும் யோகா போன்ற பல சுவாரஸ்யமான விஷயங்களும் இங்கு கொட்டிக் கிடக்கின்றன.

இதையும் படியுங்கள்:
பயண அனுபவம்: மிரள வைத்த மீகாங் டெல்டா - வியக்க வைக்கும் வியட்நாம்!
Bir - Billing

பயண வழிககள், சரியான நேரம்!

இங்கு செல்வது ரொம்பவே ஈசியான ஒரு விஷயம்தான். டெல்லி அல்லது சண்டிகரில் இருந்து அரசு மற்றும் தனியார் பேருந்துகள் மூலம் பிர் பகுதியை மிக எளிதாக சென்றடையலாம். ரயிலில் வர நினைப்பவர்கள் பதான்கோட் ரயில் நிலையத்திலும், விமானத்தில் வருபவர்கள் கங்க்ரா விமான நிலையத்திலும் இறங்கி அங்கிருந்து டாக்ஸி பிடித்துக்கொள்ளலாம். அக்டோபர் முதல் ஜூன் மாதம் வரை இங்கு செல்வதற்கு மிகச் சரியான காலநிலையாகும். அதிலும் குறிப்பாக நவம்பர் மாதத்தில் சர்வதேச அளவிலான பாராகிளைடிங் போட்டிகள் நடப்பதால் உலகமே இங்கு திரண்டு வரும்.

குறைந்த பட்ஜெட்டில் ஊர் சுற்ற நினைப்பவர்கள் உங்களின் ட்ரிப்பை முன்கூட்டியே பிளான் செய்வது ரொம்பவே முக்கியம். நண்பர்களோடு ஒரு குழுவாகச் செல்வதும், பெரிய ஹோட்டல்களைத் தவிர்த்துவிட்டு உள்ளூர் உணவகங்களில் சாப்பிடுவதும் உங்களின் செலவை பெருமளவு குறைக்கும்.

இதையும் படியுங்கள்:
இயற்கை முறையில் 'ஆன்டி ஏஜிங்' தீர்வு: பலாக்கொட்டையின் அதிரடி பலன்கள்!
Bir - Billing

இயற்கை அழகை ரசித்துக்கொண்டே மனதுக்குத் த்ரில்லான ஒரு சாகசத்தை ரொம்பவே கம்மியான செலவில் அனுபவிக்க வேண்டும் என்றால், உங்களின் அடுத்த ட்ரிப் நிச்சயம் இந்த பிர் பில்லிங் பகுதியாகத்தான் இருக்க வேண்டும்.

 இப்போதே நண்பர்களுக்கு இந்த தகவலை ஷேர் செய்து உங்களின் அடுத்த பயணத்திற்கான பேக்கிங்கை உற்சாகமாக ஆரம்பியுங்கள்.

logo
Kalki Online
kalkionline.com