
நீங்கள் புதிதாக ஒரு இடத்துக்குப் பயணம் செய்கீர்களா? அந்த இடத்தை சுற்றிப்பார்க்க வேண்டும் என்ற ஆசை இருப்பினும், பயம் உங்களை பிடித்துவிட்டதா? அதிலிருந்து எப்படி மீளலாம் என்பதைக் பார்ப்போம்.
1. மனிதர்களுடன் தொடர்பு கொள்ளுங்கள்:
நீங்கள் சென்ற புதிய இடத்தில் உள்ளவர்களிடம் குறிப்பாக கடைகள், ஹோட்டல்கள் அல்லது சுற்றுலா தகவல் மையங்களின் ஊழியர்கள் போன்றவர்களிடம் தொடர்பு கொள்ள முயலுங்கள். இது இடத்திற்கான பயத்தை குறைக்கும்.
2. பயண நோக்கத்தை நினைவில் கொள்ளுங்கள்:
நீங்கள் ஏன் பயணம் செய்தீர்கள் என்பதை நினைவில் வையுங்கள். அது ஓய்வுக்காகவா, படிப்பதற்காகவா அல்லது வேலைக்காகவா என்பதை நினைவில் வையுங்கள். அது உங்களுக்கு மன உறுதியைத் தரும். அதன் மூலம் பயம் குறையும்.
3 .திட்டமிட்டு செயல்படுங்கள்:
நீங்கள் எந்த நேரத்தில் எந்த இடத்தில் இருப்பீர்கள் என்பதை ஒரு அட்டவணை (schedule) மூலம் திட்டமிடுங்கள். இது உங்கள் மன அழுத்தத்தை, பதற்ற நிலையைக் குறைக்கும்.
4. நம்பிக்கையுள்ளவர்களை அணுகுங்கள்:
பயம் அதிகமாக இருந்தால், உங்கள் குடும்பத்தினர் அல்லது நெருங்கிய நண்பர்களை தொடர்பு கொள்வது உதவியாக இருக்கும். உரையாடல் மூலம் பதற்றமான மன நிலையை மாற்றலாம்.
5. பாடல் அல்லது விருப்ப செயல்கள்:
உங்கள் விருப்பமான பாடல்களை கேட்பது அல்லது புத்தகங்களை வாசிப்பது போன்ற செயல்கள் மனதை அமைதிப்படுத்த உதவும்.
6. புதிய செயல்களை துணிந்து செய்க:
பயப்படாமல், சில புதிய விஷயங்களை (உதாரணமாக உள்ளூர் உணவுகளைச் சுவைத்தல், புதிய இடங்களை பார்வையிடல்) முயற்சிக்கவும். முடிவை வெறும் அனுபவமாகப் பாருங்கள்.
7. மூச்சை சீராக்குங்கள்:
ஆழ்ந்த மூச்சு பயிற்சி நடைமுறைகள் (deep breathing techniques) பயத்தை குறைக்க மிகுந்த உதவியாக இருக்கும்.
8. தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள்:
'என்னால் இதை முடிக்க முடியும்' என்ற எண்ணத்தை மனதிற்குள் கூறிக் கொள்வது, உங்களை உற்சாகப்படுத்தி, முன்னேற்றத்திற்கு வழிகாட்டும்.
9. திட்டமாற்றங்களை ஏற்க தயாராக இருங்கள்:
உங்கள் திட்டத்தில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்பட்டால் அதை ஏற்றுக் கொண்டு புதிய திட்டத்தை அமைத்துக் கொள்ளுங்கள். இப்படிப்பட்ட நிலைமைகளுக்கு முன்பே தயார் ஆகும் போது, நீங்கள் பயப்பட தேவையில்லை.
10. தகவல் பெற தயங்க வேண்டாம்:
உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால், உள்ளூர் மக்கள், சுற்றுலா வழிகாட்டிகள் அல்லது அதிகாரிகள் மூலமாக தகவல் பெறலாம். மற்றவர்களிடம் கேட்க தயக்கமாக இருந்த அந்த இடத்துக்கான அப்ளிக்கேஷன்களை (app) பயன்படுத்தலாம்.
11. மனிதர்களுடன் இனிமையாக நடந்து கொள்ளுங்கள்:
அதே நேரத்தில், தனிப்பட்ட தகவல்களைப் பகிர்வதைத் தவிருங்கள். பாதுகாப்பான தொடர்புகளை மட்டுமே வைத்திருங்கள். தனிப்பட்ட தகவல்களை பகிர்வது உங்களுக்கு பயத்தை உண்டாக்கும்.
12. பயணத்தில் மனதை முழுமையாக செலுத்துங்கள்:
பயண அனுபவத்தை முழுமையாக அனுபவிக்க, மனதை ஒருமுகப்படுத்துங்கள். வேலை அல்லது மற்ற மன அழுத்தங்களை தவிர்த்து விடுங்கள். அதன் மூலம், ஒரு முழுமையான பயம் இல்லாத பயணத்தை நீங்கள் அனுபவிக்கலாம்.
13. வலைதளங்களின் அப்டேட்:
நீங்கள் புதிதாகச் செல்லும் இடத்தில் எடுத்த புகைப்படங்களை உடனடியாக சமூக வலைதளங்களில் பதிவேற்றுவதை தவிருங்கள். இது உங்கள் பயணத்தைப் பற்றிய தகவல்களை மற்றவர்களுக்கு தெரிவிக்கவும், அதனால் உங்கள் பாதுகாப்பை பாதிக்கவும் கூடும் .
இந்த விஷயங்களை நம்புங்கள். நாம் நிச்சயமாக தனியாக ஒரு ட்ரிப்புக்கு சென்று தைரியத்தோடு இருக்கலாம். சரி, நீங்கள் தயாராக இருக்கிறீர்கள் என நினைக்கிறேன். ஒரு ட்ரிப் போங்கள், உங்கள் மனதை ஓய்வெடுக்க விடுங்கள்.