பாறைகளை கண்ணைக் கவரும் கலைத் தோட்டங்களாக, பூங்காக்களாக, பல்லாயிரக் கணக்கானோர் தினந்தோறும் கண்டுகளிக்கும் நகரம் கண்டு பரவசம் அடைந்திருக்கீங்களா?
நேக் சந்த்தின் ராக் கார்டனையும், கலைப் படைப்புகளையும், ரோஸ் கார்டனில் குளிர்ந்த காற்றையும், இரவு நேரங்களில் சுக்னா ஏரியில் பிரதிபலிக்கும் நிலவொளியையும் ரசித்து மகிழலாம்! எங்கு என்கிறீர்களா?
சண்டிகர் நகரத்தில் தான்!
பஞ்சாப், ஹரியானா ஆகிய இருமாநிலங்களின் தலைநகரம் சண்டிகர்.
இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்கள் சுதந்திர இந்தியாவின் நினைவுச் சின்னமாக, சுதந்திரத்தின் நினைவாக, சிறந்த நகரமாக அமைக்க கனவு கண்டார். பிரெஞ்சுக் கட்டடக் கலைஞர் லெ கார்பஸியர் ( Le Corbusier ) அதற்கு வடிவம் கொடுத்தார். இயற்கை நகரமாக, கலைப்படைப்பாக, அழகிய நகரமாக, 1950ம் ஆண்டு முதல் புகழ் பரப்பி வருகிறது.
சண்டி மந்திர் என்பது ஒரு கோவிலின் பெயர். 'கர்' என்றால் கோட்டை என்கிற பொருளும் உண்டு. கோவிலின் பெயரில் சண்டி என்பதையும், கோட்டை என்று பொருள் தரக்கூடிய கர் என்பதையும் இணைத்து சண்டிகர் எனும் பெயராக நிலைத்தது.
சண்டிகர் இந்தியாவில் மிகவும் திட்டமிட்டு கட்டப்பட்ட நகரம் ஆகும். நவீன நகரக் கட்டமைப்புடன் இயற்கை அழகையும் இணைக்கும்விதமாக, பாறைகள் மற்றும் மரங்கள் நிறைந்த பகுதிகளை உள்ளடக்கியுள்ளது. இது நகரத்தின் தனித்துவமான தோற்றத்துடன் விளங்குகிறது.
இந்தப் பாறை சிற்பத் தோட்டம் சுமார் 20 ஏக்கர் நிலப்பரப்பில் கலை நயத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. இத்தோட்டம் நேக் சந்த் என்கிற அரசு ஊழியரின் மனதில் கரு கொண்டது.
நகரத்தின் பாதைகளில் கிடந்த குப்பைகளில், பழைய கட்டிட இடி பொருட்களில் கிடந்த உடைந்த பிளாஸ்டிக் குழாய்கள், கம்பிகள், உடைந்த கண்ணாடி வளையல்கள், கண்ணாடிகள், தரை ஓடுகள், தட்டாங்கல் முதலான கழிவுப் பொருட்களில் மறு பயன்பாட்டுப் பொருளாக கொண்டு உருவாக்கப்பட்ட உலகப் புகழ் பெற்ற பாறை சிற்பத் தோட்டமாக கொடி கட்டிப் பறக்கிறது. இது உருவாக்கிய நேக் சந்த் பெயரிலேயே நேக் சந்த் பாறை சிற்பத் தோட்டம் என விளங்குகிறது.
1976 ஆம் ஆண்டு முதல் பொதுமக்கள் பார்வைக்கு திறந்து வைக்கப்பட்டது. நாள் தோறும் பல்லாயிரக் கணக்கான பொதுமக்கள் பார்வையிட்டு மகிழ்ந்து வருகின்றனர்.
இயற்கை அழகை கண்டு ரசிக்க இந்தப் பாறை சிற்பத் தோட்டம் ஒரு சிறந்த இடமாகும். வண்ணமயமான பூக்கள், உயர்ந்த வாழ்கை மரங்கள், மண்வெட்டியுடன் கூடிய மனிதன், நடன உருவங்கள், இசைக் கருவிகள் மீட்டும் இசைக் கலைஞர்கள், யானை, மயில், அன்னம், அமைதியான நீர் வீழ்ச்சிகள், கோயில் என மனம் மயங்கிகிடக்க வற்றாத கலைப் படைப்பாக விளங்குகிறது.
சுக்னா வனவிலங்கு சரணாலயத்தின் ஒரு பகுதியாகும். சிவாலிக் மலைகளில் 2600 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ளது. இரவு நேரங்களில் நிலவொளியில் பிரதிபலிக்கும் காட்சியைக் காணவே ஆயிரக்கணக்கான ரசனையாளர்கள் கூடுகிறார்கள்.
இது 8 கி.மீ நீளம் கொண்டது. இது 'சண்டிகரின் நுரையீரல்' என்று அழைக்கப்படுகிறது. ஆண்டு தோறும் மூன்று நாள் திருவிழாவை மிகவும் பிரமாண்டமாக நடத்தி வருகிறது. இது சுற்றுலாப் பயணிகளின் வசீகரத்தை பெற்றுள்ளது.
இந்தப் பூங்கா 27 ஏக்கர் பரப்பளவில் பூத்துள்ளது. ஃபிளமிங்கோக்கள், பெலிகன்கள், கிளிகள், மயில்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான பறவைகளின் தாயகமாக சிறந்து விளங்குகிறது. இதில் ஒரு ஏரி, நடைபயண பறவைக்கூடம், குழந்தைகள் விளையாடி மகிழ விளையாட்டுத் திடல் ஆகியவை உள்ளன. பல்லாயிரக் கணக்கில் பறவைகளுக்கு ஏற்ற வாழ்விடமாக உருவாக்கப்பட்டுள்ளது. இது சிங்கப்பூர் “ஜீரோங்“ பறவைப் பூங்காவை அடிப்படையாகக் கொண்டது.
1985 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இது உலகம் முழுவதிலுமிருந்து சுமார் 250 பொம்மைகள், பொம்மலாட்டங்களின் தொகுப்பைக் கொண்டுள்ளது. இது உலகளாவிய பொம்மை கலாச்சாரத்தைப் பற்றிய தனித்துவமான அருங்காட்சியகமாக சிறந்து விளங்குகிறது.
இது ஆசியாவிலேயே மிகப்பெரியத் தோட்டம். இது 30 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள ஒரு தாவரவியல் பூங்காவாகும். முன்னாள் குடியரசுத் தலைவர் சாகீர் உசேனின் பெயரிடப்பட்டுள்ள இப்பூங்காவில் 1600 வகையான தாவரங்கள், 50,000 ரோஜாச் செடிகள் உள்ளன. மருத்துவ குணமிக்க மரங்கள், வில்வம், கற்பூரம், கடுக்காய், தான்றி, செம்மயிர்கொன்றை போன்ற மரங்களும் உள்ளன. இங்கு வருடாந்திர ரோஜாத் திருவிழா நடைபெறுகிறது. இது சண்டிகரின் மிகப்பெரிய கலாச்சாரத் திருவிழாவாக கருதப்படுகிறது.
மஹாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு போன்ற புகழ் பெற்ற தலைவர்களின் அரிய ஆவணங்கள், உருவப் படங்கள், பதிவு செய்யப்பட்ட குரல்களைக் கொண்ட இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்களை கௌரவிக்கும்படியான அருங்காட்சியகமாகும்.
இயற்கையை ரசிக்கும் ரசனையாளர்களுக்கு திகட்டத் திகட்ட விருந்து படைக்கும் சண்டிகர்-க்கு நிகர் வேறில்லை என்பதில் இருவேறு கருத்துக்கே இடமில்லை!