
கட்டிடங்களை ரசிக்க வேண்டும் என்றால் மும்பையைச் சுற்றிப்பார்க்க வேண்டும். சாலைகளை ரசிக்க வேண்டும் என்றால் சண்டிகரை சுற்றிப்பார்க்க வேண்டும். சாலைகளுடன் சேர்த்து "தி சிட்டி பியூட்டிஃபுல்" The city Beautiful என்று அழைக்கப்படும் சண்டிகரில் கட்டாயம் பார்க்க வேண்டிய முக்கிய இடங்களில் நான் ரசித்தவை இதோ:
சிறு துரும்பும் பல் குத்த உதவும் என்பவற்றை சரியாக பயன்படுத்தியவர் என்றால் அது நேக்சந்த் என்பவரைத்தான் சாரும். சுமார் 40 ஏக்கர் பரப்பளவில் நேச்சந்த் என்பவரால் உருவாக்கப்பட்ட இந்த தோட்டம் உலகப் புகழ்பெற்றது. இங்குள்ள சிற்பங்கள் அனைத்தும் உடைந்த வளையல்கள், பீங்கான் பாத்திரங்கள் மற்றும் தொழில்துறை கழிவுகளைக் கொண்டு கலைநயத்துடன் செதுக்கப்பட்டுள்ளன. இது ஒரு மனிதனின் விடாமுயற்சிக்கு சான்றாகும்.
இமயமலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள இந்த அழகான ஏரி அமைதியை விரும்புவோருக்கு ஏற்ற இடம். இங்கு படகு சவாரி செய்யலாம். நடை பயிற்சி மேற்கொள்ளலாம் மற்றும் மாலை நேர சூரிய அஸ்தமனத்தை ரசிக்கலாம். இதற்காகவே ஒரு பெரும் கூட்டம் காத்திருப்பதை கவனிக்கலாம்.
இது ஆசியாவிலேயே மிகப்பெரிய ரோஜா தோட்டம் ஆகும். சுமார் 30 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இங்கு 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரோஜா வகைகள் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் இங்கு ரோஜா திருவிழா சிறப்பாக நடைபெறுவது கண்கொள்ளா காட்சி. இப்படியும் ஒரு தோட்டமா என்று சிலிப்பை ஏற்படுத்தியது இந்த ரோஜாத் தோட்டம்.
இது (UNESCO )யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாகும். புகழ்பெற்ற கட்டிடக்கலைஞர் லெ கர்பூசியர் என்பவரால் வடிவமைக்கப்பட்ட இந்த வளாகத்தில் சட்டமன்றம், செயலகம் மற்றும் உயர் நீதிமன்றம் உள்ளன. இங்குள்ள 'திறந்த கை சின்னம்' (Open Hand Monument) சண்டிகரின் அடையாளம் ஆகும்.
சண்டிகரின் இதயம் என்று அழைக்கப்படும் இப்பகுதி ஷாப்பிங் செய்ய விரும்புவோருக்கு சொர்க்கம். இங்கு ஏராளமான பிராண்டட் கடைகள், உணவகங்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்கள் உள்ளன. இரவு நேரங்களில் இங்குள்ள இசை நீரூற்று (Musicle Foundation) மிகவும் பிரபலம்.
ஜப்பானிய கலை மற்றும் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் 2014- ல் உருவாக்கப்பட்டது. இங்கு ஜப்பானிய பாணி கோபுரங்கள் (PagodaTowers) நீர்வீழ்ச்சிகள், தியான மையங்கள் (Meditation Centre) மற்றும் புத்தர் சிலைகள் உள்ளன. அமைதியான சூழலில் தியானம் செய்ய ,நடைபயிற்சி மேற்கொள்ள மிகவும் சிறந்த இடம். மாலையில் இங்குள்ள விளக்குகளின் வெளிச்சத்தில் தோட்டம் இன்னும் அழகாக காட்சியளிப்பது ரசிக்கத்தக்கது.
இது சண்டிகரின் இன்டஸ்ட்ரியல் ஏரியா ஃபேஸ் 1-ல் அமைந்துள்ளது. இது வட இந்தியாவின் மிகப்பெரிய வணிக வளாகங்களில் ஒன்றாகும். 20 ஏக்கர் பரப்பளவிலான இந்த மாலில் 200க்கும் மேற்பட்ட சர்வதேச மற்றும் இயந்திரத் தரமான பிராண்டுகள் உள்ளன. ஆடைகள் முதல் எலக்ட்ரானிக்ஸ் வரை அனைத்தும் இங்கு கிடைக்கிறது.
இங்கு எட்டு திரைகளைக் கொண்ட PUR சினிமாஸ் மற்றும் குழந்தைகளுக்கான ஃபன் சிட்டி (FUN City) போன்ற விளையாட்டு மையங்கள் உள்ளன. இங்கு பிரம்மாண்டமான ஃபுட் கோர்ட் மற்றும் உணவகங்களில் உலகத்தரம் வாய்ந்த உணவுகளை சுவைக்கலாம்.